என் மலர்
நீங்கள் தேடியது "பிஎஸ்எல்வி சி60"
- ராக்கெட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு முதலாவது ஏவுதளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- ஒரே குறிக்கோளை கொண்டு விண்ணில் செலுத்தப்படும் பல ராக்கெட் திட்டங்களை ஒருங்கிணைக்க இது உதவும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிநிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது. வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியதன் மூலம், உலக சந்தையில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது. தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேஸ்-எக்ஸ் எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பி.எஸ்.எல்.வி.- சி-60 ராக்கெட்டை வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. 'ஸ்பேட் எக்ஸ்' என்ற இந்த பணியில் எஸ்.டி.எக்ஸ்-01 மற்றும் எஸ்.டி.எக்ஸ்-02 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
ராக்கெட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு முதலாவது ஏவுதளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் மொத்தம் 66 நாட்கள் நடைபெறும்.
நிலவில் இருந்து மாதிரி எடுத்து திரும்புதல், இந்தியாவின் விண்வெளி மையம் உருவாக்குதல் மற்றும் இயக்கம் போன்ற இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் அவசியம். ஒரே குறிக்கோளை கொண்டு விண்ணில் செலுத்தப்படும் பல ராக்கெட் திட்டங்களை ஒருங்கிணைக்க இது உதவும்.
திட்ட ஆய்வுக் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஏவுதலுக்கான செயல்பாடுகள் தொடங்கும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம், ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட 4-வது நாடாக இந்தியா முன்னேறும்.