என் மலர்
நீங்கள் தேடியது "Supreme Court"
- சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
- 21 நீதிபதிகளின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முடிவு செய்தது. அதன்படி தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.
சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம்கோர்ட்டின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தங்கம், பங்குச்சந்தைகளில் முதலீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இருக்கிறார். அவர் வருகிற 13-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவரது வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் ரூ.55.75 லட்சம் உள்ளது.
தெற்கு டெல்லியில் 3 படுக்கை அறைகள் கொண்ட டி.டி.ஏ. பிளாட் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் 2,446 சதுர அடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு (4 படுக்கை அறை) ஆகியவை அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது.
மேலும், குர்கான், இமாச்சலபிரதேச வீடுகளில் பங்கும் இருக்கிறது. வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.1.06 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். 250 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி இருக்கிறது. 2015 மாருதி சுவிப்ட் கார் உள்ளது.
அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள பி.ஆர்.கவாய் வங்கி கணக்கில் ரூ.19.63 லட்சம் இருக்கிறது. மராட்டிய மாநிலம் அமராவதி, மும்பை பாந்த்ரா, டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது. ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருக்கிறது.
எஞ்சிய நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- "செங்கோட்டை மட்டும் ஏன்? ஆக்ரா, பதேபுர் சிக்ரி போன்ற இடங்களில் கோட்டைகள் ஏன் இல்லை”
- தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று தெரிவித்தனர்.
முகலாயர் ஆட்சி காலத்தில் டெல்லியில் புகழ்பெற்ற செங்கோட்டை கட்டப்பட்டது. இந்தநிலையில் கடைசி முகலாய அரசர் பகதுார் ஷா ஜாபரின் வாரிசு என்று கூறிக்கொண்டு சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்குத்தான் சொந்தம் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
"செங்கோட்டை மட்டும் ஏன்? ஆக்ரா, பதேபுர் சிக்ரி போன்ற இடங்களில் கோட்டைகள் ஏன் இல்லை" என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓடிடியில் வாரந்தோறூம் திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது.
- நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
வாரந்தோறும் திரையரங்குகளில் புதுபுது திரைப்படங்கள் வருவதுப் போல். ஓடிடியிலும் திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது. ஓடிடி தற்பொழுது திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் அதனை பன்நாட்டு மக்களுக்கு கொண்டு செல்ல பெரும் பங்கை வகுக்கிறது.
ஆனால் ஓடிடியில் பல ஆங்கில திரைப்படங்களில் காதல் காட்சிகள், நிர்வாண காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை ஓடிடி தளம் முன்னெச்சிரிக்கையுடன் இதில் இவ்வாறு ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என அறிவிப்புடன் தான் திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது. ஆனால் ஓடிடி தளங்கள் ஆபாச காட்சிகளை பொருட் படுத்தாமல் தளங்களில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது என வழக்கு பதிவிட்டுள்ளனர்.
ஓ.டி.டி. மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாச காட்சிகளுடன், வெப் சீரியல்களை ஒளிபரப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நெட்பிளிக்ஸ், அமேசன் பிரைம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.
- பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
- பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும்
இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு, சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கை களை பெண்களாக கருத முடியாது என்றுதீர்ப்பு அளித்துள்ளது.
அதே சமயம், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது. திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்த கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது.
- நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது
புதுடெல்லி:
சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தவும் கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கால நிர்ணயத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தது.
மேலும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு வாரிய கூட்டம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டதால் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலை அதற்கு முன்னதாக டிசம்பர் 3-ந் தேதி நடத்தவும் ஒப்புதல் அளித்தது.
மேலும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையில் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க வரைவு திருத்த விதிகளை தயாரித்த நீதிபதி குழு, சங்கத்தின் செயற்குழு தேர்தலை டிசம்பர் 10-ந் தேதி நடத்தலாம் என புதிய தேதியை சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரைத்தது.
நீதிபதி நாகேஸ்வரராவ் குழுவின் பரிந்துரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திர சூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பரிந்துரையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்களுக்கு வரைவு திருத்த சட்ட நகல்களை சுற்றறிக்கையாக அனுப்புவதற்காக வழிமுறைகளையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவிப்பார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு சம்பளமாக ரூ.20 லட்சம் நிர்ணயித்து உத்தரவிட்டனர்.
- சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.
- மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை:
மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி தொடங்கப்பட்டது. 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு கிளை விசாரித்து வருகிறது. இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை முடித்து 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதற்கான நிறைவு விழா மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் வரவேற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தமிழில் காலை வணக்கம் எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசியதாவது:-
ஔவையார், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார். எனது மராத்திய மொழியில் அறிந்து சொல்கிறேன். இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. தமிழ் கலாசாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. விருந்தோம்பல் பண்பு அழகானது. சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.
நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது, அது சமூகத்தின் பிரச்சனையை முன்னிறுத்தும் விதமாகவே அமைகிறது.
மதுரைக்கிளை நீதியை மட்டுமல்ல சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கலாசாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது. நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்தபோது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2000-க்கும் அதிகமான உத்தரவுகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து காணோலி காட்சி மூலம் மதுரை ஐகோர்ட்டு 20-வது ஆண்டு நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், விஸ்வநாதன், மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ், சுந்தர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அட்வகேட் ஜெனரல் ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் தமிழகத்தின் 100 இ-சேவை மையங்கள் காணோலி காட்சி மூலம் திறந்த வைக்கப்பட்டது. முடிவில் நீதிபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இதில் மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- அலிகர் பல்கலைக்கழகத்துக்கான சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது.
- நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம்
உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மையினர் அந்தஸ்து தொடர்பான வழக்கில் பல ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பளித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அலிகர் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தது கிடையாது என்று தெரிவித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பின் அமர்வு விசாரணை செய்து வந்தது.
சுமார் 18 ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை சிறுபான்மை நிறுவனமாக இருக்க முடியாது என்ற அலகாபாத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்கிறது. இதில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
அலிகர் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது. நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம் என்று தெரிவித்தனர். அதேவேளையில் நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
இதுகுறித்து தலைமை நீதிபதி கூறும்போது, இவ்வழக்கில் 4 தனித்தனி தீர்ப்புகள் உள்ளன. 3 மாறுபட்ட தீர்ப்புகள் உள்ளன. நான் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பெரும்பான்மை தீர்ப்பை கொடுத்துள்ளோம். பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான விவகாரம் சுப்ரீம் கோர்ட்டால் நிர்ணயிக்கப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். அதன்படி நிறுவனத்துக்கு அந்தஸ்து வழங்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய மற்றொரு அமர்வுக்கு அனுப்புகிறோம்.
அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பின் செல்லுபடியை தீர்மானிக்க புதிய அமர்வு அமைப்பதற்கு வழக்கின் நீதித்துறை பதிவுகளை தலைமை நீதிபதி முன் வைக்க வேண்டும் மெஜாரிட்டி நீதிபகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார்.
- மசோதாக்களை 2,3 ஆண்டுகளுக்கு கிடப்பில் போடுவதே வாடிக்கையாக உள்ளது என்று வாதாடினார்.
புதுடெல்லி:
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என். ரவிக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் கவர்னர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்து உள்ளது.
இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக கவர்னர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 2023-ல் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசின் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது ஏன்? என்று கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. அரசு-கவர்னர் மோதலால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் திரிவேதி வாதாடும்போது கூறியதாவது:-
தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது. அரசு அமைக்கும் தேடல் குழுவை கவர்னர் ஏற்க மறுக்கிறார். தனக்கு தான் நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது என செயல்படுகிறார்.
இது கல்வி நிலையங்களின் செயல்பாட்டை பாதிக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார்.
மத்திய அரசின் ஏஜென்டாக கவர்னர்கள் செயல்படக் கூடாது. அரசியலமைப்பு சட்டங்களின் விளக்கங்களை திரித்து கவர்னருக்கு தான் அரசியலமைப்பின் அனைத்து அதிகாரங்கள் உள்ளன என தவறான தகவல் வழங்கக் கூடாது. அவ்வாறு கவர்னருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினால், அது கூட்டாட்சியின் முடிவு ஆகும். தமிழகத்தில் கவர்னர் என்பவர் தன் விருப்பம் போல் செயல்படுகிறார். மசோதாக்களை 2,3 ஆண்டுகளுக்கு கிடப்பில் போடுவதே வாடிக்கையாக உள்ளது என்று வாதாடினார்.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-
மசோதா மறு ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மவுனமாக இருக்கலாமா? அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பாக விடை காண வேண்டும்.
மசோதா மாநில அரசால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் போது அதில் கவர்னர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் அதன் மீது ஜனாதிபதி என்ன மாதிரியான முடிவுகளை மேற்கொள்ளலாம்?
நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை" என்று கவர்னர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா? அப்படி இல்லையெனில், அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படித் தெரியும்? மசோதாவுக்கு தான் ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் வரை, அவர் ஏதாவது கருத்து கூறியிருக்கிறாரா? மசோதாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கவர்னர் கூறும்போது, எந்த காரணத்துக்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறுகிறாரா? இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது, எந்த அடிப்படையில் கவர்னர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார்? அனைத்து மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருக்கும் போது கவர்னர் 2 மசோதாக்களை மட்டும் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தது ஏன்? என நாளை காலை விளக்கம் தர கவர்னருக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது. நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.