என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94484"
- மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.
- கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
விழுப்புரம்:
மேல்பாதியில் 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.
இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி நடை பெற்ற திருவிழாவில் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இரு சமுதாய மக்களிடையே பிரச்சினை உருவானது.
கோவிலில் வழிபாடு மேற்கொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 5 முறையும், மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 முறையும் பல்வேறு கட்டங்களில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் தீர்வு காணப்படவில்லை.
இதனால் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.
அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் கோவில் அமைந்துள்ள பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் கோவில் அருகில் இரு தரப்பினரும் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இன்று 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில் இரு தரப்பினரும் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்து பூர்வமாக உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் 2-ம் கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தி.மு.க. அரசு கோவில் நிலங்களை விற்க திட்டமிடுகின்றது.
கோவில் நிலத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை முடிந்த பின்புதான் உண்மை தெரியவரும். ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்யவில்லை. இதுகுறித்து கேட்காத திருமாவளவன் ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளம்பெண்கள் உள்ளிட்டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
- அமித் ஷா வீட்டு முன்பு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
புதுடெல்லி:
மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டெல்லியில் உள்ள மத்திய மந்திரி அமித் ஷா வீட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண்கள் உள்ளிட்டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குகி இனமக்களை காப்பாற்றுங்கள் போன்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டம் காரணமாக அமித் ஷா வீட்டு முன்பு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பட்டியலின மக்கள் தங்களை கோவிலில் வழிபட அனுமதி அளிக்குமாறு கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
- 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விழுப்புரம்:
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம்-சென்னை சாலையில் மேல்பாதி கிராமம் உள்ளது. இக்கிரா மத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற்றது.
அப்போது பட்டியலினத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வழிபட வந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
பட்டியலின மக்கள் தங்களை கோவிலில் வழிபட அனுமதி அளிக்குமாறு கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் தங்கள் அடையாள அட்டையை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து தாசில்தார், கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. மேலும் கலெக்டர் பழனி தலைமையிலும் இரு சமூத்தினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 8 முறை இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் சுமூக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்கு திடீரென சீல் வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் எடுத்துள்ளனர்.
கோவிலுக்கு சீல் வைக்கப் பட்டதால் மேல்பாதி கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேல்பாதி கிராம முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோவிலை சுற்றிலும் பேரி கார்டுகளை அமைத்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு வாகனங்களுடன் அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேல்பாதி கிராமம் அமைந்துள்ள விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் கூட்டு ரோடு வரையிலான கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடினர்.
விக்கிரவாண்டியில் இருந்து வரும் வாகனங்கள் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பிவிடப்பட்டது. அதே போல் கோலியனூர் கூட்டு ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பிவிடப்பட்டது.
மேல்பாதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதற்கிடையே வருகிற வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஆஜராகுமாறு விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.
- யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை, ஊராட்சிகளில் 10 பேரை பலி வாங்கியதாக கூறப்படும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அதன் பின்பு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் நகருக்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்தது.
பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சண்முகாநதி அணையை ஒட்டியுள்ள பகுதியில் தஞ்சமடைந்தது. அதனை நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் விட்டுள்ளனர்.
அரிசி கொம்பன் யானையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே யானையின் இருப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அரிசி கொம்பன் யானையை மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செண்பகத்தொழு குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் படாதபாடு படுத்தி மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் ஆரம்ப கால வசிப்பிடம் மூணாறு வனப்பகுதியை ஒட்டியே இருந்தது. எனவே அதனை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் இருந்தவரை அரிசி கொம்பனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால் பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது என்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
- உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
- விவசாயிகள் , பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் விவசாயிகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளைநில பகுகளில் 5-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு ஆர்பாட்டங்கள் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் விவசாயிகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாய உபகரணங்கள் கலப்பை மற்றும் விவசாய உபகரணங்கள் கருப்பு கொடி பறக்க விட்டு 154-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
- புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
- அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.
சேலம்:
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 44-வது டிவிசன், புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் அளித்த உத்தரவின்படி, உடனடியாக சாலை, சாக்கடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செய லாளர் செல்வக் கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் சூரிய மூர்த்தி, மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன், துணைத் தலைவர்கள் பழனி, பெரியசாமி, மண்டல தலைவர் பால கஜேந்திரன், செயலாளர் சம்பத்குமார் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்மா பேட்டை போலீசார், அவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இத னால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தனியாா் வீட்டுமனைப் பிரிவு சாா்பில் தீண்டாமை சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
- 18க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன.
பெருமாநல்லூர் :
பெருமாநல்லூா் அருகே அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருமாநல்லூா் நான்கு வழிச் சாலை சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் கூறியதாவது: - ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட முட்டியங்கிணறு ஆதிதிராவிடா் காலனியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தனியாா் வீட்டுமனைப் பிரிவு சாா்பில் தீண்டாமை சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவற்றை ஒட்டிய பகுதியில் தனியாா் வீட்டுமனைப் பிரிவின் சாக்கடை நீா் வெளியேறுவதால் 18க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமானவா்கள் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றனா். இந்தப் போராட்டத்தில் பொறுப்பாளா்கள் ஏ.பி.ஆா். மூா்த்தி, தமிழ்வேந்தன், பழ.சண்முகம், ரேவதி, பட்டுரோஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.
- வள்ளலை பணி இடைநீக்கம் செய்து இதற்கு முன்பு இருந்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குனராக இருந்த வள்ளலை பணி இடைநீக்கம் செய்து இதற்கு முன்பு இருந்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ரத்து செய்த கனிமவளத்துறை இயக்குனர் மீண்டும் வள்ளலுக்கு அதே இடத்தில் பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஊழலுக்கு வழிவகுக்கும் கனிமவளத்துறை இயக்குனர் மற்றும் அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று திரண்டனர். மேலும் அதிகாரி வள்ளல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விவசாயிகளை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
- இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் ஏராளமான குடிநீர்தி ட்டப்பணிகளும், விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பவானி சாகர்அணை நீர்தேக்க பகுதிக்கு வந்து ஆய்வுக்காக தண்ணீர் மாதிரியை எடுத்து சென்றனர்.
இந்நிலையில் பவானியை காப்போம் என்ற இயக்கம் சார்பில் இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர், சத்திய மங்கலம், ராஜன்நகர், பண்ணாரி, அய்யன் சாலை, புதுபீர்கடவு, கொத்தமங்கலம், படுகுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொது மக்கள், பூ மார்க்கெட் விவசாயிகள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், டாக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் தாசில்தாரிடம் மனு கொடுக்க உள்ளனர்.
- 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
- 6 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அங்கு திரண்டு சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
ஊத்துக்கோட்டை:
பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.
இந்த சாலை கண்ணிகை பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம் உட்பட 21 கிராமங்கள் வழியாக சித்தூர் வரை அமைகிறது.
இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 276 ஏக்கர் நிலப்பரப்பில் விளை நிலங்கள் கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள், 200க்கும் மேற்பட்ட வீடுகள், 13 ஏரிகள், 3 குளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். எனினும் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பருத்தி மேனிகுப்பத்தில் 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அங்கு திரண்டு சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் வசந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யபாமா ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கழிவுகளில் உள்ள ராசாயனங்களால் பவானி ஆற்றின் தண்ணீர் நஞ்சாகி மாசடைந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- பவானி ஆற்றின் தண்ணீரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
நீலகிரி மலைப்பகுதியில் பவானி ஆறு உற்பத்தியாகி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை வரை சுமார் 150 கிலோ மீட்டர் செல்கிறது. பவானி ஆற்று தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி பயணித்து வருகிறது.
இந்த பவானி ஆறு நீலகிரி மாவட்டம் முக்காலியில் தொடங்கி அட்டப்பாடி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையை அடைகிறது. அந்த அணையில் திறந்து விடப்படும் பவானி ஆற்று தண்ணீர் அங்கு இருந்து தேக்கம் பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, மூலத்துறை வழியாக பவானிசாகர் அணையை அடைகிறது.
பவானி ஆற்றின் தண்ணீரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இதன் மூலம் தொட்டப்பாளையம், திருப்பூர், எலத்தூர், நம்பியூர், பெருந்துறை என 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பவானிசாகர் அணை மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று பயன் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கலக்கப்படுவாக கூறப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், குப்பை கழிவுகள் கலப்பதாகவும் தெரிகிறது. அதே போல் அந்த பகுதிகளை சேர்ந்த சிலர் ஆலை மற்றும் மருத்துவ கழிவுகளையும் பவானி ஆற்றில் நேரிடையாக கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கழிவுகளில் உள்ள ராசாயனங்களால் பவானி ஆற்றின் தண்ணீர் நஞ்சாகி மாசடைந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், ஆலை கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டுபடுவதால் ஆறு மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. பவானி ஆற்றில் கழிவுகளை கலப்பதை தடுக்க அரசு ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.
எந்த காரணம் கொண்டும் பவானி ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை அனுமதிக்க கூடாது. கழிவு கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசியல் அமைப்புகள், பொது நல அமைப்புகள் ஒண்றிணைந்து பவானியை காப்போம் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த அமைப்பு பொதுமக்களிடம் விழிப்புணர்வ ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில் பவானியை காப்போம் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்த நிறுத்த வலியுறுத்தி பவரிசாகரில் கூடுவோம் என முழக்மிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
இதையொட்டி நாளை 5-ந் தேதி (திங்கட்கிழமை) பவானிசாகர் பகுதியில் போராட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதை வலியுறுத்தி பவானி நதியில் ஆலை கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த பவானிசாகரில் கூடுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் பவானிசாகர் பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்