search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.
    • தொழிற்சாலைகளின் உரிமையாளர்களோ உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த சில நாட்களாக ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அனகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    திருவள்ளூர் சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த இரு நாட்களாக மின்வெட்டு இருப்பதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் பிரச்சினை நான்கு மாதங்களாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    காலையில் அலுவலகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால், இரவு நேரங்களில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு தூக்கமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் இரவு மற்றும் பகலில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக தவிக்கின்றனர். தொழிற்சாலைகளின் உரிமையாளர்களோ உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.

    அம்மா ஆட்சிக் காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின் குறை மாநிலமாக மாறியிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், அம்மா ஆட்சிக் காலத்தில் பொற்காலமாக இருந்த தமிழகம் விரைவில் கற்காலமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறேன். தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
    • காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்.

    எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன, இங்குள்ள தொழிற்சாலை நிறுவளங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக தொழிற்சாலைக்குச் செல்லும் மின்மாற்றி பழுதடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கி உள்ளன. இதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்ய குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் மேலும் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது காக்களூர் மற்றும் ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் இணைப்பை துண்டித்து அதனை காக்களூர் தொழிற்பேட்டைக்கு பகல் நேரத்தில் மட்டும் வழங்க இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அடுத்த நசரத் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். நேற்று இரவும் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ரோட்டில் மரங்களை வெட்டிபோட்டு 100-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் இரு மார்க்கத்திலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் வெங்கல் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிரா மமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கிராமமக்களின் திடீர் மறியல் போராட்டத்தால் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • வாழை, தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகளும் பறந்தது.
    • மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனல் காற்று வீசி வருகிறது. இரவு நேரங்களில் கடுமையான புழுக்கம் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இரவில் மழை பெய்தாலும், காலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் உள்ளது.

    கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மழையின்போது சூறாவளி காற்றும் இடி மின்னலும் அதிக அளவில் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றில் பெருந்துறை கருக்கம்பாளையம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை பறந்தது. 3 ஆயிரம் வாழைகளும் முறிந்து விழுந்து சேதமானது. வழக்கம் போல் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையப்பாளையம், சின்ன செட்டியார் பாளையம், நல்லக்கட்டிபாளையம், அழகம்பாளையம், வரப்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது.

    மாலை 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை இடைவிடாமல் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 100 ஆண்டுக்கும் மேலான பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    நம்பியூர் மலையப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்து விழுந்தது. மலையப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இருந்த ராட்சத ஆலமரம் மற்றும் சந்தைக்கடை பகுதியில் இருந்த மரம் ஆகியவை வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மேலும் வாழை, தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகளும் பறந்தது. மேலும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் மலையப்பாளையம்-திருப்பூர் ரோட்டில் ஒரு டிரான்ஸ்பார்மரும் சாய்ந்தது. மழை பெய்யத் தொடங்கியதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சூறாவளி காற்றின்போது பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்ததால் மரம் விழுந்தபோது பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்ததால் நம்பியூர்-திருப்பூர், நம்பியூர், குன்னத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ஆலங்கட்டி மழை காரணமாக வீடுகளில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

    மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சூறாவளி காற்று, மழை நின்றதும் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் மின் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூறாவளி காற்று வீசி சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. நல்ல வேளையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீடுகளின் மேற்கூரைகளும் இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தது. எனவே சேதமான வீடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழ்நாடு மின்சார வாரியம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 6-ந் தேதி நடக்கிறது.
    • அம்மன்நகர், தாந்தோணியம்மன்நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், லிட்டில் பிளவர்நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 6-ந் தேதி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதிநகர், ஈடுவாய் கிழக்குப்பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லைநகர், இடும்பன்நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சிநகர், செல்லம்நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமிநகர், அம்மன்நகர், தாந்தோணியம்மன்நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், லிட்டில் பிளவர்நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நொய்யல், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது

    கரூர் :

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட மலைக்கோவிலூர், நொய்யல் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கோவிலூர், தடாகோவில், அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துபாளையம், காளிபாளையம், நத்தமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

    அவினாசி :

    நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (5ந் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பச்சாம்பாளையம், பரமசிவம் பாளையம்,பெரியாயிபாளையம்,பள்ளிபாளையம், பொங்கு பாளையம்,காளம்பாளையம்,ஊஞ்சபாளையம்,புது ஊஞ்சபாளையம்,குபாண்டம் பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம்,வ.அய்யம்பாளையம்,ஆயிக் கவுண்டம்பாளையம்,வேலூர்,மகாராஜா கல்லூரி பகுதி, எஸ் எஸ் நகர்,வீதிக்காடு முட்டியங்கிணறு, திருமலை நகர்,சிட்கோ,பெ.அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் 5 ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

    இந்த தகவலை அவினாசி துணை மின் நிலைய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    • திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது.
    • ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது. இதனால் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுபோன்று திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் மின்வினியோகம் வழங்கப்படுவதால் மின்சாதன பொருட்கள் சேதமடைகிறது. இது தொடர்பாக மின்வாரி யதுறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டால் சரியான தகவல் தெரிவிப்பதில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 மணி நேரம் தொடர்ந்து மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    அவினாசி :

    அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 3-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம்.

    • நொய்யல் பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • இதனால் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமலும், குடியிருப்பு வாசிகள் இரவு தூங்க முடியாமலும் அவதி அடைந்தனர்.

    கரூர்:

    புகழூர் துணை மின் நிலையத்தில் இருந்து முத்தனூர், சேமங்கி, முனிநாதபுரம், நடையனூர், சொட்டையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நொய்யல், மரவாபாளயம், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், புன்னம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், குளத்துப்பாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது.

    அப்போது அதிக காற்றின் காரணமாக நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியில் இருந்து நேற்று மதியம் 12 மணி வரை சுமார் 18 மணி நேரம் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமலும், குடியிருப்பு வாசிகள் இரவு தூங்க முடியாமலும் அவதி அடைந்தனர்.

    • வருகிற 29-ந் தேதி தேவகோட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
    • மேற்கண்ட தகவலை தேவகோட்டை உட்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக கண்ணங்குடி, கப்பலுார், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், கே.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை தேவகோட்டை உட்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    • நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது.
    • மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு ழுலு பல இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது

    கடலூர்:

    கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் கடலூர் மாவட்டம் முழுதும் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதில் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்தவேப்பமரம், தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது .

    இதே போல குறிஞ்சிப்பாடியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் மேச்சலில் இருந்த கறவை மாடு மீது மின்னல் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே அந்த மாடு உயிரிழந்தது. இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மூதாட்டி லட்சுமி என்பவர் கதறி அழுதது பலரையும் சோகத்தில் அழுத்தியது. சூறாவளிக்காற்று மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த மழை போன்றவற்றால் சற்று குளுமையான சூழல் நிலவியது.

    • நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு பாகல்மேடு ஊராட்சி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.சத்தியவேலு தலைமை தாங்கினார். அனைவரையும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரமணிகண்டன் வரவேற்றார்.

    இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதன் பின்னர்,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிலையில், பாகல்மேடு ஊராட்சியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக மாநில அயலக அணி துணைச்செயலாளர் ஜி.ஸ்டாலின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி,ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் அன்பு உதயகுமார் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் காரில் வந்து மேடை அருகே இறங்கினார்.

    அப்பொழுது அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் மின்சார சப்ளை செய்யாததால் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு செல்லலாம் என்று கூறியவண்ணம் பரிதவித்துக் கொண்டிருந்தார். இதன் பின்னர், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு புறப்பட்டார். அப்பொழுது மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் மேடையில் ஏறி 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிவிட்டு மீண்டும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இப்பிரச்சினையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×