என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94943"

    • தேங்கி கிடக்கும் திடக்கழிவுகள் மழை நீர் செல்வதில் பெரும் தடையாக உள்ளது.
    • டெங்கு பாதிக்கும் நபர் வசிக்கும் வீடுகளை சுற்றி, கொசு மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியிலுள்ள 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், ஆயிரக்கணக்கான வர்த்தக, தொழிற்சாலை கட்டடங்கள் உள்ளன. பெரும்பாலான முக்கிய ரோடுகளில் பிரதான கழிவு நீர் கால்வாய்களும் மற்ற பகுதிகளில் கிளை கால்வாய்களும் அமைந்துள்ளன.இவற்றில் சேகரமாகும் திடக்கழிவுகள் நீண்ட காலமாக தேங்கி, கழிவு நீர் செல்ல வழியின்றி மழை நாட்களில் பெருக்கெடுத்தும், தாழ்வான பகுதியில் தேங்கியும் அவதியை ஏற்படுத்துகிறது.

    நகரில் மையப்பகுதியில் கடந்து செல்லும் நொய்யல் ஆறும், அத்துடன் சென்று சேரும் ஜம்மனை ஓடை, மந்திரி வாய்க்கால், சபரி ஓடை, சங்கிலி பள்ளம் ஆகிய முக்கியமான நீர் வழிப்பாதைகளாக உள்ளன.

    இவற்றில் கழிவுநீர் செல்ல தடையாக இருந்த நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகள் கடந்த சில மாதங்களில் அகற்றப்பட்டன. மேலும் ஓடைக்கரைகள் மற்றும் மையங்களில் வளர்ந்து பரவிக்கிடக்கும் புதர்கள், தேங்கி கிடக்கும் திடக்கழிவுகள் மழை நீர் செல்வதில் பெரும் தடையாக உள்ளது.

    தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதற்காக பகுதிவாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு எந்திரங்கள், வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவ்வகையில், மண்டல வாரியாக தலா 8 ஜே.சி.பி., தலா 2 டிராக்டர் மற்றும் டிப்பர் மற்றும் ஒரு ரோலர் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இது தவிர 6 செயின் டோசர் வாகனங்கள், குறுகலான பகுதிகளில் தூர்வாரும் வகையில் பாப் கேட் எந்திரங்கள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் நொய்யல் ஆறு மற்றும் ஓடைகளில் துார் வாரும் பணியை மேற்கொண்டுள்ளன.

    இந்நிலையில் குடியிருப்பு மற்றும் வர்த்தக பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் வகையில் எந்திரம் பொருத்திய இரு புதிய வாகனங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.இவற்றை மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் துவக்கி வைத்தனர்.

    இதுதவிர புனேவிலிருந்து அதிக திறன் கொண்ட ஸ்லிட்டிங் எந்திரம் பொருத்திய வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான எந்திரங்கள் மூலம், பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு நீக்கம் செய்து, தூர்வாரவும் முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் மற்றும் அவிநாசியில் சில நாட்களாக இரவில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியிருக்கிறது.

    இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ் கூறுகையில்,கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று, கொசுப்புழு உருவாகாத வகையில், 'அபேட்' மருந்து தெளித்து வருகின்றனர். மழைநீர் தேங்கி நிற்காதவாறு, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

    • டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருண் பிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு, இன்புளூயன்சா தொற்று பரவி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் 3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் பற்றி பொதுமக்களோ, மாணவர்களோ அச்சப்பட தேவையில்லை. தற்போது மழைக்காலம் நெருங்குவதால் பள்ளி மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதால் கொசுக்கடியில் இருந்து கொசுவலை, கொசு மருந்து கிரீம்களை பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், அருண்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • இந்த காய்ச்சல் முதல்முறையாக வரும்போது ஆபத்து வராது.
    • இரண்டாம் முறையாக வரும்போதுதான் ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.

    மழைக்கால மாதங்களில் மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடம் உண்டு.

    கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்கு பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கான அறிகுறிகள். எலும்புகளை முறித்து போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படும்.

    ஆனால், இந்த நோயை இனம் காட்டுவதில் வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள்.

    அடுத்து உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்பு புள்ளிகள் தோன்றும். பெரும்பாலானோருக்கு 7-ம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

    டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு கூட நேரலாம்.

    பொதுவாக இந்த காய்ச்சல் முதல்முறையாக வரும்போது ஆபத்து வராது; இரண்டாம் முறையாக வரும்போதுதான் ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள். கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் அதிக விழிப்புணர்வுடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

    டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்தஅழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க தகுந்த சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.

    • கோபிசெட்டிபாளைய நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட்டப்பாக்கள், உடைந்த மண்பாண்டங்கள் டயர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், கொசுப்புழுக்களை காண்பித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி, மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயராம் நடுநிலைப் பள்ளிகளில் டெங்கு, மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் மற்றும் ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ் முன்னிலையில், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மொடச்சூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும்,

    துப்புரவு ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான குழுவினர் நகராட்சி ஜெயராம் நடுநிலைப் பள்ளியிலும் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.

    இதில் கொசு முட்டைகள் இட்டு வளரும் இடங்களான தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாக்கள், முட்டை ஓடுகள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட்டப்பாக்கள், உடைந்த மண்பாண்டங்கள் டயர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், கொசுப்புழுக்களை காண்பித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம்.
    • அராங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பதால் கொசுக்களை வெளியிடுவதில் தாமதமாகிறது.

    டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது.

    புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு செய்து அதற்கான பணிகளை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து ஐசிஎம்ஆர்- விசிஆர்சி மருத்துவர் அஷ்வனி குமார் கூறுகையில், " டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம். ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண் கொசுக்களை விடுவிப்போம். இது வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உருவாக்கும். நாங்கள் கொசுக்கள் மற்றும் முட்டைகளை உருவாக்கியுள்ளோம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.

    இதற்கான ஆய்வு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு இப்போது முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன" என்றார்.

    கே.பி.சி நகர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. பொதுமக்கள் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கே.பி.சி நகர் பகுதியை  சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

    இதனால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை  செய்தனர். அப்போது அந்த சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    டெங்கு பரவுவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருப்பூர் வீரபாண்டி ராமபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் மற்றும் ஸ்ரீநகர் பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்த 11 வயது சிறுவன் ஆகிய 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி உள்ளது. இதனால் மீண்டும் டெங்கு பாதிப்பும் ஏற்பட தொடங்கியுள்ளது.

    அதன்படி திருப்பூர் வீரபாண்டி ராமபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் மற்றும் ஸ்ரீநகர் பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்த 11 வயது சிறுவன் ஆகிய 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 2 பேரும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கிய நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுபோல் டயர்கள், தேங்காய் சிரட்டைகள், தண்ணீர் தொட்டிகளில் மழைநீர் தேங்க விடாமல் பார்த்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஏற்கனவே ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ×