என் மலர்
நீங்கள் தேடியது "கடல் சீற்றம்"
- மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக கடற்கரை கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்ற தகவல் பங்கு தந்தைகள் மற்றும் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் மூலமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் நாட்டுப் படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று கடல் சீற்றமாகவும் காணப்பட்டது. ராட்சத அலைகள் வேகமாக எழும்பியது. கடற்கரை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர்கள் மீது வேகமாக மோதி சென்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது இதனால் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம், வானூர், மற்றும் கோட்டக்குப்பம் ஆரோவில்,ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக மரக்காணம், கோட்டக்குப்பம், கூனி மேடு, மஞ்சக்குப்பம் பொம்மையார்பாளையம் ஆரோவில், ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் ஆரோவில் கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரையில் குளிக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
புதுச்சேரி:
வங்கக்கடலில் ஏற்பட்டு ள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடல் 3வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால், காரைக்காலிலி ருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால், பெரு ம்பாலுமான விசைப்ப டகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரை க்கால் அரசலாற்றின் கரையோ ரமும், மீனவ கிராம ங்களிலும் பாதுக்கா ப்பாக நிறுத்தி வைக்க ப்பட்டு ள்ளது. 3 -வது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க ப்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
- அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம்:
மரக்காணம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தினால் மணல் திட்டு 5 மீட்டர் கரைந்து சென்றது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளையும் பைபர் படகு போன்றவை கரையில் நிறுத்தி வைக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அழகன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியார் குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், ரங்கநாதபுரம் குப்பம் போன்ற மீனவ கிராமங்களில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது
கடந்த 30 ஆண்டு பிறகு தற்போது கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. இதனால் கடலோரப் பகுதியில் வசிக்கும் விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே துறை சார்ந்த அதிகாரிகள இப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான உதவிகளை செய்ய அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
- மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்.
கடலூர்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் மீன் வரத்து மிக மிக குறைந்த காரணத்தினால் மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலையில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு பொது மக்கள் இல்லாததால் வெறி ச்சோடி காணப்பட்டது. மேலும் குறைந்த அளவு இருந்த மீன்களும் சரியான முறையில் விற்பனையாகாததால் மீன் வியாபாரிகள் சோக த்துடன் காணப்பட்டனர். மேலும் மீன்வரத்து குறைவானதால் தற்போது இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது.
- மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
- திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுக பகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர், நவ.20-
வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. எனவே கடலில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். கடலின் சீற்றம் அதிகம் இருக்கும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை மற்றும் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்று காலையிலும் தாழங்குடா, தேவனா ம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.
எனவே மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகளை டிராக்டர் மூலம் இழுத்து மேடான பகுதிக்கு கொன்டு சென்றனர். தொடர்ந்து கடல் சீற்றம் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருப்பதால் கடலோர கிராம மீனவர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர். தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகம் உள்ளது. எனவே போலீசார் அங்கு ரோந்து சென்று கடலில் யாரும் குளிக்கவேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூரில் உள்ள திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுகபகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறி ச்சோடி காணப்பட்டது.
- நாட்டுப்படகு மூழ்கியதன் காரணமாக ரங்கநாதன் கடலில் மூழ்கி இறந்தார்.
- மீனவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம் மீன்வளத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வசவன் குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50). இவர் இன்று அதிகாலை வழக்கம்போல் தனதுக்கு சொந்தமான நாட்டுப்படையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரது நாட்டு படகு கடலில் மூழ்கியது. இதனைப்பார்த்த அருகில் இருந்த சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அவரது நாட்டுப்படகு மூழ்கியின் காரணமாக ரங்கநாதனும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் உடல் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம் மீன்வளத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் முடிவு அடைந்த நிலையில் தமிழ கத்தில் பல்வேறு இடங்க ளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்நிலை யில் தற்போது வட தமிழக வங்க கடலில் நாளை காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வங்காள விரிகுடா பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த வங்காள விரிகுடா பகுதியில்19 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விசைப்படகு பைபர் படகு உள்ளிட்ட படகுகளில் இந்த பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை உருவாக உள்ள நிலையில் மரக்காணம் பகுதிகளில் காலை முதலே கடல் சீற்றமாக காணப்படுகிறது. மேலும் அதிகாலையிலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து விட்டு விட்டு தூரல் மழை பெய்து வருகிறது.
கடல் சீற்றமாக கொந்தளி ப்புடன் காணப்படுவதால் இந்த பகுதியில் உள்ள அனைத்து மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் தங்களது படகுகளை கடற்கரை ஓரம் மேடான பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக சில நாட்களாக கனமழை கொட்டியதால் இந்த பகுதி யில் உள்ள உப்பளத்தில் உப்பு உற்பத்தி நடை பெறாமல் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளது குறிப்பிட த்தக்கதாகும். இந்த மழை யால் மீனவர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.
விழுப்புரம்:
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மணிலா, தர்பூசணி போன்ற விவசாய பயிர்களை நடுவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோல் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத் துறை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மரக்காணம் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் போன்ற மீன்பிடி உபகரணங்களை கடற்கரை ஓரத்தில் இருந்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் இன்று முதல் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறையும். இதனால் மீன் விலை அதிகரிக்கும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது.
- கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.
தரங்கம்பாடி:
மாண்டஸ் புயலால் தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் பல அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் கடலோர வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் சந்திரபாடி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழக எல்லைக்கும், புதுக்சேரி மாநிலம் காரைக்கால் எல்லைக்கும் நடுவே உள்ள பகுதியாகும்.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தாரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றி வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.
சீர்காழி அடுத்த தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
மழை நீர் வெளியேறாத நிலையில் இன்று காலை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வெளியேற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களை மீட்டு பாதுகாப்பாக தொடுவாய் அரசு பள்ளி மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.
இதனால் அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம்
சேதராப்பட்டு.
மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கோட்டக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் சின்னமுதலியார் சாவடி, தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 3-ம் நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டு படகுகள் மேடான பாதுகாப்பாக இடங்களில் கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்தது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் புதுவை பிள்ளைச்சாவடி மீனவ பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீனவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். பொம்மையார் பாளையத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர் மோகன் 24 மணி நேரமும் பேரிடர் மீட்பு குழு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் புதுவை பகுதியான பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ஊருக்குள் வந்த கடல் நீரால் அங்கு வசிக்கும் மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ராட்சத அலையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததையடுத்து ஊர் மக்கள் மற்றும் மீனவ குப்பத்து மக்கள் இணைந்து புதுவை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுவைப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே கடல் சீற்றத்திலிருந்து கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என கோரிக்கை வைத்தனர்.
காலாப்பட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது.
- மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள "மாண்டஸ்" புயலால் இன்று காலை முதல் மாமல்லபுரம் பகுதியில் மழை பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடும் இரைச்சலுடன் அலைகள் சுமார் 40 அடி உயரத்துக்கு எழுகின்றன. கடற்கரை கோயில் தென் பகுதியில் உள்ள திறந்தவெளி கடைகள் வரை கடல்நீர் புகுந்து கடைகளை கடலுக்குள் இழுத்து சென்றது. கரையோரத்தில் நிறுத்தப்பட்ட படகுகளையும் கடலுக்குள் இழுத்து சென்றன. மீனவர்கள் தங்களது படகுகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக மேடான பகுதியில் நிறுத்தி கட்டி வைத்து உள்ளனர்.
இருந்தும் கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது. தொடர்ந்து கடல் அலை கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மீட்பு பணியில் அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.