என் மலர்
நீங்கள் தேடியது "slug 97772"
- சனிப்பிர தோஷத்தை யொட்டி சுவாமி -அம்பாள் மற்றும் நந்திக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.
- பிரதோஷத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர்.
கடையம்:
கடையம் நித்திய கல்யாணி அம்பாள் உடனு றை வில்வவன நாத சுவாமி கோவிலில் சுவாமி அம்பாளுக்கு வருடந்தோறும் ஐப்பசி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் சனிப்பிரதோஷத்தை யொட்டி சுவாமி -அம்பாள் மற்றும் நந்திக்கு மஞ்சள் அபிஷேகம், தயிர் அபி ஷேகம், பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபி ஷேகம், இளநீர் அபிஷேகம், விபூதி அபிஷேகமும் நடை பெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம்,ஆராதனைகள் நடைபெற்றது.
பிரதோஷத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர்.
சுவாமி- அம்பாள் திருக்கல்யாணத்தை கல்யாணசுந்தர பட்டர் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரி சனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- சுவாமிக்கு விளக்கேற்றுதலும், படி கொடுத்தலும் பூஜை நடைபெற்றன.
- மங்கல இசையுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் குருக்களால் சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைள் நடைபெற்று வருகின்றன. புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையன்று முன்னதாக சுவாமிக்கு விளக்கேற்றுதலும், படி கொடுத்தலும் பூஜை நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கப்ரபாத சேவை, திருப்பள்ளியெழுச்சி, விஷ்வக் ஷேண ஆராதனை, புண்யாக வாசம், நவகலச ஸ்தாபண திருமஞ்ன சேவை, கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் , விஷ்னக் ஷேண ஆராதனை, நாராயண சங்கல்பம், புன்யாக வாசனம், ரக்ஷாபந்தனம், கண் யாதானம், ஹோமம், ஸ்ரீ நாராயண சூக்த, ஷஷ்ணு சஹஸ்ர நாம ஹோமம் மாங்கல்ய தாரணம் மஹா பூர்ணா ஹீதி, மாலை மாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு மேளதாளங்கள் முழங்க, மங்கல இசையுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது.
அத்துடன் சுவாமிக்கு மஹா தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமியின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் குடும்பதிகள் சுபநிகழ்ச்சிகளும், சகல நற்காரியங்களும், செல்வ செழிப்பு பெருகவும், நோயற்ற வாழ்வுடன்நீண்ட ஆயுள் பெருகவும், அதேபோல் திருமணமாகத கன்னி பெண்கள் விரைவில் மாங்கல்ய சுபகாரியங்கள் கூடவும் கோவிந்தா, கோவிந்தா, திருமலை வாசா, நாராயணா என்ற ஆண்மீக சொற்பொழிவு பாடலுடன் மண கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அறுசுவையுடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீநிவா பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சாமிகளின் வீதி உலா, காளைகள், குதிரைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஆண்மீக அன்பர்களும், சிவனடியார் குழுக்களும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
- இந்த திருவிழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.
- 22-ந்தேதி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
ஆத்தூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
முன்னதாக சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டகப்படிதாரர்கள் மாநில தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் ராஜேந்திரன், ஆத்தூர் ராமலிங்க பிள்ளை, நெல்லை கற்பக விநாயகம் மற்றும் திருச்செந்தூர் கோவில் முன்னாள் அறங்காவலர் அண்ணாமலை சுப்பிரமணியம், புதுகிராமம் ராஜா ராம், சுப்பிரமணியம் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலையில் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தவசுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், மாலையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சாந்தி தேவி, தக்கார் தமிழ்செல்வி மற்றும் ஆலய பணியாளர்கள், கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
- 20-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
- 22-ந்தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.
10.30 மணிக்கு கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் அம்பாள் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்டவற்றில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 20-ந்தேதி காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 22-ந்தேதி இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
- திருவிழா வருகிற 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- 20-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 22-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி காலை 6-15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. திருவிழா வருகிற 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
வருகிற 20-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி இரவு 9 மணிக்கு மேல் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முன்னதாக அன்று மாலை 6 மணிக்கு தெற்கு மாசி வீதியில் காசி விசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, நெல்லை உதவி ஆணையர் கவிதா, கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 22-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 6 மணிக்கு விளாபூஜையும், 7 மணிக்கு செண்பகவல்லி அம்மன், பூவனநாதர், பலிபீடங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு, கொடி ஏற்று விழா விமரிசையாக நடந்தது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாநாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு அம்மன் பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது.
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி வரும் 19-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், 22-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8.25 மணிக்குள் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், இதனைத் தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைபிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- 22-ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
- 23-ந்தேதி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
நெல்லை, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி பெருந்திருவிழா, ஆடிப்பூர உற்சவம், ஆவணி மூலத்திருவிழா, பங்குனி உத்திரத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும், சிறப்பு பூஜையும் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையிலும் சிறப்பு அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார். 22-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பா நதியில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் 23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. ஐப்பசி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- சோழவந்தான் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருக்கல்யாணம் நடந்தது.
- மாப்பிள்ளை வீட்டாராக அர்ச்சகர் சீத்தாராமன் என்ற ஸ்ரீபதியும், பெண்வீட்டாராக அர்ச்சகர்கள் கிருஷ்ணஹரி என்ற பரதன், ரகுராமனும் செயல்பட்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவ விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
3-ம் சனிக்கிழமை நாளில் சீனிவாசபெருமாள், தாயார் ஸ்ரீதேவி, பூதேவியர்களின் திருக்கல்யாண உற்சவம், பஜனை மண்டபத்தில் நடந்தது. இதில் மாப்பிள்ளை வீட்டாராக அர்ச்சகர் சீத்தாராமன் என்ற ஸ்ரீபதியும், பெண்வீட்டாராக அர்ச்சகர்கள் கிருஷ்ணஹரி என்ற பரதன், ரகுராமனும் செயல்பட்டனர். மாலை மாற்றுதல் நிகழ்ச்சியுடன் ஸ்ரீதேவிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கபட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது. அலங்கரிக்கபட்ட ஊஞ்சலில் சீனிவாசபெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவியார்கள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பக்தர்களுக்கு, பூ, துளசி, மஞ்சள், குங்குமம் மாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுதா, பணியாளர்கள் முரளிதரன், விக்னேஷ் ஆகிேயார் செய்திருந்தனர்.
- இன்று காலை 11 மணிக்கு உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி திருமஞ்சனம் நடைபெறும்.
- பக்தர்களுக்கு தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் பிரசாதம் வழங்கப்படும்.
சென்னை, சூளை, ஆலத்தூர் சுப்பிரமணி தெருவில் உள்ள சுந்தரராஜ பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகோவிலில் இன்று (சனிக்கிழமை) 12-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவமும், திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளது.
இன்று காலை 11 மணிக்கு உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6 மணிக்கு சீர்வரிசை பொருட்கள் மேள, தாளங்கள் முழங்க கொண்டுவரப்படும். அதன் பிறகு ஸ்ரீசுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
விருப்பமுள்ள பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்திற்கு தங்களால் முடிந்த சீர்வரிசை பொருட்களை கொண்டு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் பிரசாதம் வழங்கப்படும். இன்று இரவு 8 மணிக்கு ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருவீதி புறப்பாடு நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவிலின் ஸ்ரீபாதம் தாங்கி நண்பர்கள் நலச் சங்கம் செய்துள்ளது.
- சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.
- கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண விழா 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 22- ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், 23-ந்தேதி கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதமாக கால்கோள் நடும்விழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் திருக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் திருக்கால் கோவிலை சுற்றி வலம் வந்து, காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மண்டபத்தில் கால்நாட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
- இந்த நிகழ்ச்சியில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
லால்குடி அருகே அரியூரில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பெருமாளும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்டு திருமண மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு மாலையுடன் சென்று, இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இதனால் இந்த நிகழ்ச்சியில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியூர் கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
- ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை தேவராயன்பேட்டையில் அமைந்துள்ள சுகந்த குந்தளாம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் கோவிலில் 12-ம் ஆண்டு வருஷாபிஷேக திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மகா தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து மகாமாரியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பூக்கள், பழ வகைகள், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.