என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம்"

    • சிவான் மாவட்டத்தில் உள்ள பாலா கிராமத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 3 பேரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    சிவான்:

    பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசாரய் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    25-க்கும் மேற்பட்டோருக்கு பார்வை பறிபோனது. இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சிவான் மாவட்டத்தில் உள்ள லகாரி நபிகஞ்ச் பகுதியில் உள்ள பாலா கிராமத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 3 பேரை அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மற்றொருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுதவிர 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் மலைப்பகுதியில் ரகசியமாக சிலர் அடுப்புகள் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாகவும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் போலீசார் சோதனைக்கு வருவதற்குள் சாராய காய்சுபவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்து தப்பி விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

    இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பரண்டு ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்தார்.

    இந்த தனிப்படையினர் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சினாலும் விற்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு செல்போன் என்னை கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து பூங்குளம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சசும் தகவல் தனிப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டு அடிக்கடி சாராய ஊறல்களை அளித்தனர்.

    நேற்று மாலையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தததை தொடர்ந்து குடியாத்தம் போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் பூங்குளம் மலைப்பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது 15 பேரல்கள் கள்ளச்சாராயம் ஊறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதிலிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை உடனடியாக போலீசார் அழித்தனர் மேலும் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த 2 அடுப்புகளையும் போலீசார் அடித்து உடைத்தனர். மேலும் லாரி டியூப் களிலிருந்த கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்

    கள்ளச்சாராய ஊறல்கள் காய்ச்சியது சம்பந்தமாக பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, செம்மட்ட சரவணன் ஆகியோர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.
    • 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதைக்கண்ட போலீசார் விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விஜயநாரா யணத்தை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 45), ஆண்டான்குளத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (32), என்பதும், தப்பி ஓடியது புதுக்குளம் நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (34) என்பதும், 3 பேரும் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
    • லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.      அப்போது போலீசாரை கண்டதும் 2 மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அப்போது போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது.

    இதனை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்திலேயே அழித்தனர். தொடர்நது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் மீண்டும் தலை தூக்கி உள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும், மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது.

    மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சிகிச்சை பெற்றுவருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.

    கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலை தூக்கியுள்ளது.

    இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன.

    அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணங்களுக்கு விடியாஅரசு பொறுப்பேற்க வேண்டும்.

    இனியாவது கள்ளச் சாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
    • கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள்.

    மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.

    எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    • போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாராயம் பதுக்கல் மற்றும் சாராயம் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்த 30 பேர்மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.
    • தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச்சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.

    உடனடியாக தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
    • தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 28 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மதியம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். மேலும், அங்கிருந்த டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்கவைத்ததே அவர்கள்தான்.

    கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக காவல்துறைக்கு அவர் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். அதனால் தான் குறைந்துள்ளது.

    தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவை அரசே விற்பனை செய்யும் என அறிவித்தார். அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கொண்டு வந்தார். அதற்கு சட்டமன்றத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது வேண்டுமென்றே அரசின் மீது குறை, பழி சொல்லவேண்டும் என ஒருவர் பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது.
    • கடலூரில் 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை.

    கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதன் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராயம் விற்றதாக கரியன் தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கள்ளச்சாராயம் விற்றதாக கரியன் தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகிய 3 பேரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் விழுப்புரம் செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 5901 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 1106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் 247 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    121 பேர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 5901 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 1106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் அதிரடி சோதனை தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    ×