search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart class"

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளியில் தற்போது 28 மாணவர்கள் படித்து வருகின்றனர்
    • ரூ.10 லட்சத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பள்ளியாக மேம்படு த்தப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஏ.சி.ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் அரசு தொடக்கப்பள்ளியை மேம்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் புதுக்கோட்டை விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மேம்படுத்தும் பணியில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இரு வகு ப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தில் வண்ணம் தீட்டப்பட்டது. புதிய வயரிங், பால் சீலிங் அமைக்கப்பட்டது. மேலும் கதவு மற்றும் ஜன்னல் பகுதிக்கு கண்ணாடி கதவு பொருத்தப்பட்டது.

    கரும்பலகையை அகற்றி விட்டு வெள்ளை நிற பலகை பொருத்தப்பட்டது. மேலும் நமக்கு நாமே திட்டத்தில் இருந்து தரை தளத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அதே திட்டத்தில் இரு வகுப்பறைகளுக்கும் தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பணி புரியும் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரி யர் சார்பில் இரு வகுப்பறை களுக்கும் ஏ.சி.வசதி ஏற்படு த்தப்பட்டுள்ளது. மின்த டையில்லா நிலையை உருவாக்குவதற்காக இன்வெர்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

    இதன் மூலம் ரூ.10 லட்சத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பள்ளியாக மேம்படு த்தப்பட்டு வருகிறது. இது குறித்து புது க்கோட்டை விடுதி பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பம் கூறியது:- பள்ளியில் தற்போது 28 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊர் மக்க ளின் முயற்சியால் சகல வசதிகளுடன் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட பள்ளியாக மேம்ப டுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள ஒரிரு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற உள்ளது என்றார்.

    • சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று விரைவில் பள்ளிக்கு ஒரு பொது அரங்கம் அமைத்து தருவதாக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் உறுதி கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து 18 தொடக்க பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக கயத்தாறு அருகே உள்ள சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் கணினி பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் தொடுதிரை கணினி பலகையை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு எழுது பொருட்களையும் வழங்கினார். மேலும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று விரைவில் பள்ளிக்கு ஒரு பொது அரங்கம் அமைத்து தருவதாக உறுதி கூறினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குருராஜ், தலைமை ஆசிரியர் ராஜ குருவம்மாள், உதவி ஆசிரியை சுதா, மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன், கிளைச் செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், ராஜாபுதுக்குடி பால்ராஜ், ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் காளியம்மாள், ஒன்றிய மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மஞ்சுளா, ஆசிரியர்கள் கற்பகம், சுபத்ரா, ஜான் ஆபிரகாம், சத்துணவு அமைப்பாளர் சண்முகையா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தலைமை ஆசிரியை மோட்ச அலங்காரம் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்

    கோத்தகிரி,

    கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும்.

    இந்த பள்ளி தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த மாதம் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1985 ஆம் ஆண்டு 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் ரூ.1½ லட்சம் மதிப்பில் பள்ளிக்கு நவீன வசதிகளுடன், ரெக்கார்டிங் வசதி கூடிய தொடுதிரை ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மோட்ச அலங்காரம் தலைமை வகித்து, வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி நூற்றாண்டு விழா கமிட்டியை சேர்ந்த சசிகுமார், சந்தோஷ், ஓய்வு பெற்ற ஆசிரியைகள் மீராபாய், அமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாணவர்கள் முகமது அலி, ராவணன், மைதிலி, சாதிக் அலி, நாகராஜ், பரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து சென்னையை சேர்ந்த பொறியாளர் கார்த்திகேயன் ஸ்மார்ட் வகுப்பறையின் சிறப்பு அம்சங்கள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் கடந்த 37 வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறை மட்டுமின்றி, தினமும் பள்ளியில் குழந்தைகள் திருக்குறள் எழுதி வைக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை மற்றும் ஒயிட் போர்டு ஆகியவற்றையும் அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் சுந்தர் நன்றி கூறினார் 

    • அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • குன்னத்தூரில் நியாயவிலை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நெல்லை:

    பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் நெல்லை டவுனை அடுத்துள்ள குன்னத்தூரில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நியாயவிலை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டுவிழா ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதேபோல் சீவலப்பேரி பஞ்சாயத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி திறப்புவிழா விழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பள்ளி கல்வி அதிகாரி முருகன், தலைமையாசிரியர் மனோகர், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கணேசன், பஞ்சாயத்து தலைவர்கள் வெங்கடேஷ் உமாமகேஷ்வரி, அனுசியா, குமரேசன், மின்சார வாரியத்தின் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் ஜாண்பிரிட்டோ, முத்து குமார், முருகேசன் மற்றும் மின் வாரிய ஊழியர்கள், முன்னீர்ப்பள்ளம், குன்னத்தூர், பகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தனபால் கோயில்பிச்சை, நந்தகோபால், ஜெயசேகர், பிச்சுமணி, இசக்கிபாண்டி, தசதாசிவம், தங்கவிநாயகம், மாரியப்பன், மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் மாற்றுக்கட்சியிலிருந்து வெளிவந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

    அவர்களுக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தியும் டி-சட்டைகள் வழங்கியும் கவுரவித்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நல்லமழை பெய்து ஏரி குளங்கள் அணை நிரம்பியுள்ளதே தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. மாணவர்களுக்கு மடிக்கணினி மிதிவண்டி வழங்கும் சிறப்பான பல அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகிறது.

    தமிழகத்தில் தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது. மத்திய அரசின் ஐசிடி நிதியுதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும் கணினிகள் அமைக்கவும் நேற்றைய முன்தினம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் டெண்டர்கள் முடிவடைந்து பணிகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடையும் போது இந்தியாவே திரும்பிப் பார்கின்ற ஒரு மாற்றத்தை தமிழகம் உருவாக்கும்.

    இந்த டெண்டர்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் ஸ்மார்ட் வகுப்பறைகள் கணினிகள் அமைந்து நான்கு ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாசிரியர்கள் கலந்தாய்வு விரைவில் நடைபெறும். அது முடிந்தவுடன் சிறப்பாசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.


    நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் மாணவர்கள் சந்திக்கும் வகையில் 40 சதவிகித பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    வருகிற இடைத்தேர்தலுக்காக கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூத் கமிட்டியில் ஏராளமான இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் பூத் கமிட்டிபோல் மத்தியில் உள்ள தேசிய கட்சிகளில் கூட இல்லாத அளவிற்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    வரும் நவம்பருக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதி நவீன ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதைத்தொடர்ந்து கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது. இது புதுமையான திட்டம் ஆகும்.

    இதன் மூலம் அனைத்து மாணவர்களும் புரிந்து கொண்டு படிக்கலாம். மாணவர்கள் பல்வேறு உலக செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

    தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. வரும் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புதிய சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.

    கோப்புப்படம்

    வரும் நவம்பருக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். மேலும் 9.11,12 ஆகிய அனைத்து வகுப்புகளும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

    இந்த ஆண்டு முதல் பிளஸ்-2வில் 600 மதிப்பெண் எடுத்தாலே உயர் கல்விக்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இயங்கி வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    பேட்டியின்போது ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியன் உடனிருந்தார். #ADMK #TNMinister #Sengottaiyan #smartclass
    ×