என் மலர்
நீங்கள் தேடியது "snake bite"
- கடந்த 17-ந் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.
- பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார்.
கோவை:
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40). இவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை 20 ஆண்டுகளாக செய்து வந்தார். கடந்த 17-ந் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சந்தோஷ் அங்கு சென்றார். அவர், அங்கு பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று அந்த நாகப்பாம்பு அவரை கடித்தது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாம்பு கடித்து, பாம்பு பிடி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோசுக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
- சத்தியம்மா சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்.
- மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது.
கரூர்
குளித்தலை அடுத்த, பாலவிடுதி சிங்கம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மனைவி போதும்பொன்னு. இவர்களுக்கு, சத்தியம்மா (வயது 10) என்ற மகள் உள்ளார். இவர் சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளியில் படித்து வந்தார். காலை வழக்கம்போல் சக்தியம்மா பள்ளிக்கு சென்றார்.
பின் மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது. இதனால் வலி தாங்கமுடியாமல், சத்தியம்மா வகுப்பறைக்கு ஓடி வந்தார்.
இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் மோகன்ராஜ், மாணவியின் பெற்றோ ருக்கு தகவலளித்தார். பின் சந்தியம்மாவை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவி சந்தியம்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பாம்பு பிடிக்க சென்றபோது விபரீதம்
- திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருப்பத்தூர்:
திருப்பத்தூரை அடுத்த கருப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோழனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நாகப் பாம்பு இருப்பதாக திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன், சிறப்பு நிலைய அலுவலர் முருகன் மற்றும் வீரர்கள் சென்று பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தீயணைப்பு வீரர் சரவணன் (வயது 26) என்பவரை பாம்பு கடித்து விட்டது. சரவணன் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.
அவரை சகதீயணைப்பு வீரர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.
- சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த அவல்பூந்துறை வடக்கு வெள்ளியம்பாளையம் புது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (65). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
சம்பவத்தன்று கொலாங்காட்டுவலசு பருத்திக்காரர் தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.
இதனால் வலியால் அலறி துடித்த அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- வேலைமுடிந்து தனசேகர் ஒத்தையடி பாதையில் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
- அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் அருகே உள்ள பொன்னான்டா வலசு பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மகன் தனசேகர் (25). தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் இரவு வேலைமுடிந்து ஒத்தையடி பாதையில் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது. இது தெரியாமல் தனசேகர் இருந்து வந்தார்.
பின்னர் பெருந்துறை அரசுஆஸ்பத்திரிக்கு சென்ற போது தான் தனக்கு பாம்பு கடித்தது என்பது தனசேகருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனசேகர் பரிதாபமாகஇறந்தார்.
இது குறித்து காஞ்சி கோவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தி வருகிறார்.
- தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் மாரிமுத்து ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.
- அப்போது திடீரென அவரை பாம்பு கடித்து விட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி, கரிய கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (62). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து அதே பகுதியில் ஒரு தோட்டத்தில் விவசாய கூலி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் மாரிமுத்து ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரை பாம்பு கடித்து விட்டது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாரிமுத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதா பமாக மாரிமுத்து இறந்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார்.
- அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பாக்கியமணி பரிதாபமாக இறந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் தோமஸ் (வயது57). இவரது மனைவி மேரி பாக்கியமணி (53). இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
இதற்காக வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் வைக்கோல் படப்பு வைத்து ள்ளனர். சம்பவத்தன்று மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது.
இதனைதொடர்ந்து அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பாக்கியமணி பரிதாப மாக இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவளக்கொடி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
- அப்போது பாம்பு ஒன்று அவரது கையை கடித்து விட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த விராலிமெடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பவளக்கொடி (52). இவர்களுக்கு ராதா என்ற மகள் உள்ளார்.
ராதாவுக்கு திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். சுப்பிரமணி- பவளக்கொடி இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவளக்கொடி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது கையை கடித்து விட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கவுந்தப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக பவளக்கொடியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பவளக்கொடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் கொட்டகையில் இரவில் முருகவேல் தூங்குவது வழக்கம்.
- திடீரென முருகவேல் வலது கையில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
ஈரோடு:
விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் புதுநகர், மாசியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகவேல் (48). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் வேலை சம்மந்தமாக ஒவ்வொரு ஊராக சென்று வருவது வழக்கம்.
அதன்படி தற்போது முருகவேல் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மாரங்காட்டூர், சிலுவம்பாளையம் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் தங்கி கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
அங்குள்ள மோட்டார் கொட்டகையில் இரவில் முருகவேல் தூங்குவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்றும் இரவில் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முருகவேல் வலது கையில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ளவர்கள் முருகவேலை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற இருந்த முருகவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாராயணசாமி தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூச்சலிட்டார்.
- இதனைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள மைலம்பாடி புது காலனி பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று நாராயணசாமி தனது வீட்டின் அருகில் மறைவான இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.
உடனே நாராயணசாமி தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூச்சலிட்டார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாராயணசாமி பரிதாபமாக இறந்து விட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மனைவி வளர்மதி பவானி போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இடது குதிகாலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சீரங்காயி (52).
கடந்த 1-ந் தேதி கணவன்-மனைவி மற்றும் அதே ஊரை சேர்ந்த சிலர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பி.கே.வலசு குமரப்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வந்தனர்.
இதேபோல் சம்பவத்தன்று சீரங்காயி தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அவரது இடது குதிகாலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீரங்காயி பாம்பு.. பாம்பு.. என்று கத்தினார்.
அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சீரங்காயி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜாவின் வலது கெண்டைக்காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
- வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (49). இவரது மனைவி தேவயானி. ராஜா மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் சம்ப வத்தன்று சங்கராபாளையம் கிராமத்தில் உள்ள தப்பக்காரன் தோட்டம் தாமரை செல்வி கரும்பு தோட்டத்திற்கு பூச்சி மருந்து அடித்து கொண்டிருந்தபோது ராஜாவின் வலது கெண்டைக்காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக ராஜா கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.