search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "son death"

    • வினய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
    • ஒரேநாளில் மகனும், தந்தையும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வந்தவர் வினய் குண்டகாவி(வயது 38). இவர் டாக்டர் ஆவார். இவர் உப்பள்ளியில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். அவருடைய மனைவியும் டாக்டர் ஆவார்.

    வினயின் தந்தை வீரபத்ரய்யா. இவரும் டாக்டர். இவர் ஹாவேரி என்ற இடத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அங்கேயே சொந்தமாக ஒரு ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் வினய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலையில் திடீரென வினய் மயக்கம்போட்டு விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த அவருடைய மனைவி, வினயை பரிசோதனை செய்தார். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

    அவரும், அவரது பிள்ளைகளும் கதறி அழுதனர். வினய் இறந்துவிட்ட தகவல் அவருடைய தந்தை வீரபத்ரய்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது. மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட வீரபத்ரய்யா, மகன் இறந்த செய்தி கேட்டதும் பதற்றம் அடைந்தார்.

    சிறிது நேரத்தில் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். மயங்கி கீழே விழுந்தார். அவரை, ஆஸ்பத்திரியில் இருந்த சக டாக்டர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மகன் இறந்த செய்தி கேட்ட வீரபத்ரய்யா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரேநாளில் மகனும், தந்தையும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
    • இது குறித்து புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அந்தியூர் அடுத்துள்ள எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (72). இவரது மகன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த சின்னம்மாள் கடந்த 23-ந் தேதி அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி குள்ளனூரில் வசிக்கும் தனது மகள் ஜோதிலட்சுமி வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சின்னம்மாள் கோவிலூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லாமல் இருந்தது ஜோதிலட்சுமிக்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து ஜோதிலட்சுமி சின்னம்மாளை தேடி வந்த நிலையில் பூதப்பாடி அருகே உள்ள வாய்க்கால் கரையில் சின்னம்மாள் மாத்திரை சாப்பிட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் ஜோதிலட்சுமி மற்றும் அவரது மகன் நேரில் சென்று பார்த்த போது மாத்திரை சாப்பிட்டு கிடந்தது தெரியவந்தது.

    உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருச்செந்தூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள என்.முத்தையாபுரம் மேல தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது52). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2-வது மகன் கணேஷ் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 

    அதில் இருந்து இசக்கியம்மாள் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இசக்கியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருச்செந்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கபப்ட்டது. 

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அருகே கண்ணாம்மூச்சி விளையாடிய போது தண்ணீர் தொட்டியில் விழுந்து மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் அருகே உள்ள சி.வி.சி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பூவிதா. இவர்களுக்கு தேவதர்சினி (4) என்ற மகளும், தேஜூ அஸ்வீன் (2) என்ற மகனும் உள்ளனர். நேற்று இரவு வீட்டில் இருந்த மணிகண்டன் தனது மகள், மகனுடன் சேர்ந்து கண்ணாம்மூச்சி விளையாட்டு விளையாடி கொண்டு இருந்தார்.

    அப்போது தேவதர்சினி வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகில் சென்று ஒளிந்து கொண்டார். தேஜூ அஸ்வீன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் அருகில் ஒளிந்து கொள்ள சென்றார். அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியானான். குழந்தைகளை தேடி வெளியே வந்த மணிகண்டன் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி தனது மகன் தேஜூஅஸ்வின் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் தனது மகனின் சாவுக்கு தானே காரணமாகி விட்டோமே என மனவேதனை அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தந்தை மற்றும் தம்பியை தேடி மாடியில் இருந்து இறங்கி வந்த தேவதர்சினி தந்தை தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். குழந்தையின் சத்தம் கேட்டு சமையல் செய்து கொண்டு இருந்த பூவிதா ஓடிவந்து பார்த்த போது கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூவிதாவை சமாதானம் செய்தனர். பின்னர் தேஜூ அஸ்வினை தேடினர். ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தேஜூஅஸ்வினை வீடு முழுவதும் தேடினர்.

    அப்போது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் மணிகண்டன், தேஜூஅஸ்வின் ஆகியோரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தபகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தவறான அறுவை சிகிச்சையால் மகன் இறந்த 20 ஆண்டுக்கு பிறகு தாயாருக்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சேலத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி கண்ணன், இவரது மகன் கே.ரவிக்குமார் (28). இவர் கடுமையான காது வலியால் அவதிப்பட்டார்.

    எனவே கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் காது, மூக்கு, தொண்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்காக ஈஸ்வரி கண்ணன் ரூ.21,600 கட்டணம் செலுத்தினார். இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் இரவு ரவிக்குமாருக்கு ஆபரேசன் நடத்தப்பட்டது.

    அப்போது ரவிக்குமாருடன் அவரது சகோதரி இருந்தார். ஆனால் அவரிடம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆபரேசன் முடிந்த ஒரு வாரத்தில் அவர் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் அவர் கடுமையான தலை வலியால் அவதிப்பட்டார். எனவே, அவரை பிப்ரவரி 15-ந்தேதி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாட்களுக்கு பிறகு அவர் மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து சென்னை நுகர்வோர் கோர்ட்டில் ரவிக்குமாரின் தாயார் ஈஸ்வரி கண்ணன் புகார் செய்தார். தவறான ஆபரேசன் மற்றும் சிகிச்சையால் தனது மகன் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

    வழக்கு விசாரணை நுகர்வோர் கோர்ட்டு தலைவர் கே.ஜெயபாலன் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடந்தது. இறுதியில் ஈஸ்வரிகண்ணனுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

    ரவிக்குமார் மரணம் அடைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. உடனே வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    மகன் இறந்த சோகத்தை மறப்பதற்குள் மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கெங்கனந்தல் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வேட்டவலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் கிணறு ஆழப்படுத்தும் பணியில் கெங்கனந்தல் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் சீத்தாராமன், தங்கராஜ், குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சீத்தாராமன் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    வெடி விபத்தில் சீத்தாராமன் இறந்ததால் அவருடைய தாய் சரோஜா (வயது 66) மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். மனவேதனை தாங்க முடியாமல் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    சரோஜாவை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வேட்டவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இறந்தவர்களின் சோகத்தை மறப்பதற்குள் சரோஜா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கெங்கனந்தல் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×