என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Souvenir"
- மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- பயனாளிகளுக்கு, கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் உயர்சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை வழங்கிய ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனை உள்ளிட்ட மருத்துவ மனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையும், 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கான அட்டையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 காப்பீட்டு திட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகே சன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சகாய ஸ்டீபன் ராஜ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மேலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்புபவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வது நல்ல பலன் அளிக்கும்.
- இரத்த தானம் செய்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
தஞ்சாவூர்:
ரத்த தானத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 14 உலக ரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் செஞ்சிலுவை சங்கம் தஞ்சை கிளை சார்பில் தஞ்சையில் உலக ரத்ததான தின விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு ஆலயத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, குழந்தை இயேசு தேவாலயத்தின் பங்குத் தந்தை அம்புரோஸ், செஞ்சிலுவை சங்க ஆலோசகர் மரு.வரதராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
மேலும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பால முருகன், ரத்த மண்டல வங்கி மருத்துவர் ஆர்த்தி, அவசர சிகிச்சை துறை தலைவர் மரு.சரவணவேல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்மக்களிடம் ரத்ததானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணியில் பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்புபவர்கள், உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது போன்ற விஷயங்களை மேற்கொள்வதோடு மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வதும் நல்ல பலன் அளிக்கும்.
அவ்வாறு தானம் செய்யப்படும் இரத்தம், பல உயிர்களைக் காப்பாற்ற பயன்படும். குறிப்பாக இரத்த தானம் செய்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. சிறிது நேர ஓய்வுக்குப்பின் தனது அனைத்து வேலைகளையும் அவர் செய்யலாம். இந்த நடைப்பயணத்தில் நடைபயண சங்க உறுப்பினர்கள், ரோட்டரி - லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்ற நடைபயணம் மீனாட்சி மருத்துவமனையின் வளா கத்தில் முடிவடைந்தது. மேலும் இந்தாண்டின் ரத்ததானம் வழங்கிய கல்லூரி களுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடைப்பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் செய்திருந்தனர்.
- ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
- ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்க ளிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து மாவட்ட அளவில் நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்று அதில் தேர்வான 4 மாணவ-மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு அறிவியல் பேரவையின் சார்பில் "வானவில் அறிவியல்" விருதினையும் தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி சாதனை படைத்திட வேண்டும் எனவும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்களையும் பாராட்டி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
அப்போது சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி தாளாளர் வாசன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- அப்துல்கலாம் குடும்ப குழந்தைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே உள்ள பேக்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவு இல்லத்துடன் கூடிய அருங்காட்சியகம் உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றினர்.
பின்னர் அப்துல் கலாம் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவிடத்தை இதுவரை ஒரு கோடி பேர் பார்வையிட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியைத் தாண்டி ஒரு கோடியே 1 மற்றும் 2-ல் அடி எடுத்து வைத்த குழந்தைகள் அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்த சே.ஆசில் லியானா, சே.ஆசில் மிப்ரா ஆகியோர் சாதனை நிலையை நிகழ்த்தி உள்ளனர்.
அவர்களுக்கு அப்துல் கலாம் தேசிய நினைவகத்தைச் பராமரித்து வரும் மத்திய அரசின் அங்கமான டி.ஆர்.டி.ஓ. நிர்வாக அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
- என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
- பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறையின் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கம் சார்பில் ''என்ஜினீயரிங் மாணவர்ளுக்கான செயற்கை நுண்ணறிவியல் துறையில் உள்ள வாய்ப்புகள்'' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.
பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தொடக்க உரையாற்றினார். டீன் மாரிச்சாமி சிறப்புரையாற்றினார்.
மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், என்டர்ஜி நிறுவனத்தின் ஆலோசகர் ராஜராஜன் ஆறுமுகம் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் தமது துறைசார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப துறையானது மிகவும் வளர்ந்து வரும் நிலையில், மாணவர்கள் அதில் தங்களை தகுதிப்படுத்துவதற்கு தேவையான மென்பொருள் பற்றிய விழிப்புணர்வும், செயற்கை நுண்ணறிவின் வேலைப்பாடு, செயல்முறை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஆங்கில புலமை மிகவும் அவசியம் என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கார்த்திகேயன், பேராசிரியர் தனம் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்