search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அப்துல்கலாம் குடும்ப  குழந்தைகளுக்கு நினைவு பரிசு
    X

    சுதந்திர தினவிழாவில் அப்துல்கலாம் குடும்ப குழந்தைகளுக்கு டி.ஆர்.டி.ஓ. சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    அப்துல்கலாம் குடும்ப குழந்தைகளுக்கு நினைவு பரிசு

    • அப்துல்கலாம் குடும்ப குழந்தைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் அருகே உள்ள பேக்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவு இல்லத்துடன் கூடிய அருங்காட்சியகம் உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றினர்.

    பின்னர் அப்துல் கலாம் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவிடத்தை இதுவரை ஒரு கோடி பேர் பார்வையிட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியைத் தாண்டி ஒரு கோடியே 1 மற்றும் 2-ல் அடி எடுத்து வைத்த குழந்தைகள் அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்த சே.ஆசில் லியானா, சே.ஆசில் மிப்ரா ஆகியோர் சாதனை நிலையை நிகழ்த்தி உள்ளனர்.

    அவர்களுக்கு அப்துல் கலாம் தேசிய நினைவகத்தைச் பராமரித்து வரும் மத்திய அரசின் அங்கமான டி.ஆர்.டி.ஓ. நிர்வாக அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×