என் மலர்
நீங்கள் தேடியது "Speaker Embalam Selvam"
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- மாணவ -மாணவியர்கள் காய்- கனிகள் வேடமணிந்தும் சிலம்பம் ஆடியும் வரவேற்றனர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதிக்குட்பட்ட மணவெளி மந்தை பகுதி அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த அறிவியல் கண்காட்சியின் போது 1-ம் வகுப்பு முதல் 5ம்- வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ -மாணவியர்கள் காய்- கனிகள் வேடமணிந்தும் சிலம்பம் ஆடியும் வரவேற்றனர்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைவர் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று மாணவ -மாணவியர்கள் காட்சிக்கு வைத்திருந்தவற்றை பார்வையிட்டு அது குறித்து மாணவர்கள் கூறிய விளக்கங்களை கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் கல்வித் துறையின் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் பள்ளிகளின் வட்ட ஆய்வாளர் லிங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா வரவேற்றார்.
- குழந்தைகள் ஆர்வத்துடன் அவருக்கு உணவை ஊட்டினர்.
- குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி விழாக்களை கொண்டாட வேண்டும் என சபாநாயகர் செல்வம் கேட்டு கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள ஜாலி ஹோம்ஸ் நரிக்குறவர் குழந்தைகள் பாதுகாப்பு மையம் உள்ளது.
நரிகுறவர் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் இங்குள்ள குழந்தை களுக்கு புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் காலை உணவு வழங்கி தீபாவளி கொண்டா
டினார். அப்போது குழந்தைகள் ஆர்வத்துடன் அவருக்கு உணவை ஊட்டினர்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு ஆந்திராவின் புகழ்மிக்க காக்கிநாடா காஜா, ஜாமூன் ஆகியவற்றுடன் பட்டாசு மற்றும் புத்தாடைகளை சபாநாயகர் வழங்கினார். தொடர்ந்து குழந்தைகளுடன் அவர் சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்.
அப்போழுது குழந்தைகள் தீபாவளி வாழ்த்து பாடலை பாடி சபாநாயகர் செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அரசியல் தலைவர்களும் வர்த்தக பிரமுகர்களும் இது போன்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி விழாக்களை கொண்டாட வேண்டும் என சபாநாயகர் செல்வம் கேட்டு கொண்டார்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பணியை தொடங்கி வைத்தார்
- அபிஷேகப்பாக்கம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.
புதுச்சேரி:
மணவெளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிஷேகப்பாக்கம் பகுதியில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக ஒப்புதல் பெற்று தந்தார்.
அதன்படி அபிஷேகப்பாக்கம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சிவானந்தம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் அகிலன், மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனத மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மாயகிருஷ்ணன் , ஜானகிராமன், மாறன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், ரமேஷ், உமா, கதிரேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
- அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தலைமை செயலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை நிதி, சுகாதாரம், தேர்தல் துறைகளை வைத்திருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவகரிடம் இருந்து தேர்தல் தவிர பிற துறைகள் பறிக்கப்பட்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மோரே வசம் ஒப்படைக்கப்பட்டது.
முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்காமல் தலைமை செயலர் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆவேசமடைந்தனர்.
இதையடுத்து சபாநாயகர் செல்வம், தலைமை செயலரை அழைத்து பேசினார். அப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தலைமை செயலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் தலைமை செயலர் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசின் ஒப்புதலின்றி ஜவகர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பொறுப்புகள் மாற்றப்பட்டது. தலைமை செயலரிடம் கேட்டபோது, முதல்-அமைச்சருக்கு தகவல் தெரிவித்ததாக பொய்யான தகவலை கொடுத்தார்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு சட்டசபை செயலகம் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவர் இதுவரை விளக்கம் தரவில்லை. அவர் இதுவரை சட்டசபை செயலக புகாருக்கு விளக்கம் தராதது குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விளக்கம்
- புதுவை அரசின் முதல்-அமை ச்சர் மற்றும் ஆட்சியாளர்களை தரைக்குறை வாகபேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.க்க ள் கூட்டம் கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளதா?
என்று கேள்வி எழுப்பி உள்ளார். அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள், அவர்கள் மீதான குறை பாடுகள் தெரிவிக்கவே எம்எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததின் பேரிலே கூட்டம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக புதுவை தலைமை செ யலர், நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் ஆகியோரை அழை த்து எம்.எல்.ஏ.க்க ள் கூறிய புகார்கள் குறித்து விசாரித்தோம்.
மேலும் 2 அரசு செ யலர்களும் 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் கடிதம் அனுப்பி உள்ளேன். அதற்கான உரிய பதில் அளிக்க வில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் கட்சி யில் நாராயணசாமியின் நிலை என்ன ? அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார். நான் சபாநாயகர் பொறுப்பில் சரியான செயல்பட்டு வருகிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை அரசின் முதல்-அமை ச்சர் மற்றும் ஆட்சியாளர்களை தரைக்குறை வாகபேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
சந்திரபிரியங்காவின் செ யல்பாடுகள் கடந்த 6 மாத காலமாக சரியில்லை என்ற காரணத்தால் முதல்-அமைச்சர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதற்கிடையே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னரும் சந்திரபிரியங்கா தனது ராஜினாமா என்ற பெ யரில் ஒரு கடிதத்தை முதல்-அமைச்சரிடம் மட்டுமின்றி ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்திற்கு நேரடியாக அனுப்பினார்.
கவர்னரின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்ட கடிதமும், சந்திரபிரியங்கா நே ரடியாக அனுப்பிய ராஜினாமா கடிதமும் மத்திய அரசுக்கு சென்றது தான் பதவி நீக்கம் ஒப்புதலுக்கு வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இதுபற்றி நானும் (சபாநாயகர்), கவர்னர் விளக்கம் அளித்தபின் தற்போது அவர் பதவி நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- மாணவ- மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் இரு வார தூய்மை திருவிழா சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் அகிலன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர்.
நேஷனல் ஆங்கில மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
இந்த பேரணி தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையில் அருகில் இருந்து அபிஷேகப்பாக்கம் சாலை வரை நடந்தது.
இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனை டெங்கு நோடல் அதிகாரி செழியன் ஒருங்கிணைத்தார்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு
- ரூ.9.50 லட்சம் வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் பல்டி அடித்த கதை புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர்கள் வைத்திலிங்கமும், நாராயணசாமியும் தொடர்ந்து பொய்களை கூறி வருகின்றனர். இதனால் புதுவை சட்டமன்றத்துக்கு நில ஆர்ஜிதம் செய்த நிலத்தை திருப்பி கொடுத்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வைத்திலிங்கம்
எம்.பி. வேண்டுகோளை ஏற்று நானே அனுப்பி வைக்கிறேன்.
எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் இதை சட்டமன்றத்தில் விவாதிக்கவும் தயாராக உள்ளேன். என் மடியில் கனமில்லை, வழியில் எந்த பயமும் இல்லை. ஏற்கனவே ரூ.9.50 லட்சம் வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் பல்டி அடித்த கதை புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும். 9 ஆண்டாக ஆர்ஜிதம் செய்த நிலத்தை இழுத்தடித்து ஒப்படைத்தது ஏன்? என விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்ய உள்ளேன்.
2018-ல் அந்த நிலம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு அனுப்ப சட்டமன்ற செயலரிடம் மனு தயாரிக்க சொல்லியுள்ளேன். சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்தி விரைவில் மனுவை தயாரிப்பார்.
ஏற்கனவே நான் சட்டமன்றத்தில் கட்ட பஞ்சாயத்து செய்வோர் வரக்கூடாது என கூறியிருந்தேன். சமீபத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனு அளித்தனர். அதனடிப்படையில் குற்றவாளிகளை சட்டசபைக்குள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
- சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்ய நான் தயாராக உள்ளேன். 2 முறை இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியும், எந்த அதிகாரியும் விளக்கம் அளிக்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை சட்டமன்றத்தை கையகப்படுத்திய நிலத்தை திரும்ப வழங்கியதில் கையூட்டு பெறப்பட்டதாக நான் கூறியதற்கு வைத்திலிங்கம் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். நான் ஆதாரத்தை காட்டுகிறேன்.
சட்டப்பேரவை வளாகம் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலம், அப்போதைய கவர்னரால் திரும்ப பெறப்பட்டு சென்னை ஐகோர்ட்டு அதனை தள்ளுபடி செய்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
2009-ம் ஆண்டு சட்டப்பேரவை தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் அதற்கான உத்தரவை பிறப்பித்தபோது, முதல்- அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த நிலத்தை உரியவர்க ளிடம் ஒப்படைக்காமல், 2018-ம் ஆண்டு ஒப்படைத்ததன் காரணம் என்ன?
இதுசம்மந்தமாக அவர் விருப்பப்பட்டால், சி.பி.ஐ. விசாரணைக்கும் தயாராக உள்ளேன். இதற்கு அவர் பதில் கூறட்டும். 10 ஆண்டுகள் இழுத்தடித்த மர்மம் என்ன? அதில் தரப்பட்ட கையூட்டு என்ன? வைத்திலிங்கம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். 2014- ம் ஆண்டு எனது தொகுதியில் பூரணாங்குப்பம் முதல் புதுகுப்பம் வரை கேபிள் வயர் புதைப்பதற்காக டெண்டர் ரூ.11 கோடிக்கு விடப்பட்டது. ஆனால் ரூ. 2 கோடி கூட பணி நடைபெறவில்லை. 1 வருடம் கூட கேபிள் வேலை செய்யவில்லை.
இதேபோல் காலாப்பட்டு தொகுதியில் கடலோர கிராமங்களில் புதைவட கேபிள் போட ரூ.23 கோடியில் ரூ.2 கோடி கூட செலவு செய்யவில்லை. இதற்கும் சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டும். சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்ய நான் தயாராக உள்ளேன். 2 முறை இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியும், எந்த அதிகாரியும் விளக்கம் அளிக்கவில்லை.
அரசு விழாக்களிலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை மதித்து அழைக்கிறோம். ஒரு சில இடங்களில் தவறு நடந்திருந்தது. ஆனால் அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமியும், எதிர்கட்சி தலைவரும் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது அதனை நாங்கள் பெற்றுத் தந்திருக்கிறோம். இதற்கு மத்திய அரசுக்கும், கவர்னருக்கும் முதல்- அமைச்ருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இந்த ஆட்சி இருக்கும் போதே மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாராயணசாமி வீண் விளம்பரம் தேடுகிறார். மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரசின் கடைசி முதல்- அமைச்சராக நாராயணசாமி இருப்பார் என கூறியிருந்தார். அதுதான் நடந்தது.
ராகுல்காந்தி புதுவைக்கு வந்து மீனவ கிராமத்தில் பேசியபோது, அரசை பெண்மணி ஒருவர் குற்றம் சாட்டினார். அதை கூட நாராயணசாமி, ராகுலிடம் மாற்றி கூறினார். அப்படிப்பட்ட நபர் நாராயணசாமி.
இன்னும் 2 நாட்களில் கியாஸ் மானியம் வழங்கப்படும். அதிகாரிகள் செய்த சிறு பிழை காரணமாக மானியம் தடைப்பட்டுள்ளது. 2 நாளில் சரி செய்து வழங்கப்படும்.
இன்னும் 1 மாதத்தில் புதிய சட்டப்பேரவை கட்ட டெண்டர் வைக்கப்படும். டிசம்பர் மாதம் பிரதமர் மோடி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைப்பார்.2 ஆண்டுகளில் புதிய சட்டபேரவை கட்டி முடிக்கப்பட்டு, முதல்- அமைச்சர் ரங்கசாமியால் திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.
- புதுச்சேரி, தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கு பெற்று விளையாடின.
- பா.ஜனதா பிரமுகர்கள் டி. எம். வருண், முருகன் என்கிற பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை கால்பந்து நண்பர்கள் கழகம் சார்பில் நடத்திய 21-ம் ஆண்டு சுதந்திர தின கால்பந்தாட்ட போட்டிகள் புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கு பெற்று விளையாடின. போட்டிகள் அனைத்தும் நாக்கவுட் முறையில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் புதுச்சேரி பி.கே. பிரதர்ஸ் அணியும் விளையாடின.
இதில் 2 அணிகளும் போட்டி நேரத்தில் சமநிலையில் இருந்ததால் டை பிரேக்கர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் திருச்சி சென் ஜோசப் கல்லூரி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றனர். பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் விவிலியன் ரிச்சர்ட் ஜான்குமார், வி.பி. ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசினை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா பிரமுகர்கள் டி. எம். வருண், முருகன் என்கிற பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் தனது ஏற்பாட்டின் பேரில் அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்கினார்.
- புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார் மணவெளி பகுதி கலைவாணன், தங்கதுரை மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழா நிறைவை முன்னிட்டும் 76 -ம் ஆண்டு சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை போற்றும் வகையிலும் சுதந்திர திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொ ண்டுள்ளார்.
மேலும் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்தை தொடங்கி வைத்து அனைவர் இல்லங்களிலும் இன்று முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் தனது ஏற்பாட்டின் பேரில் அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்கினார்.
புதுக்குப்பம் பகுதியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைத்து வீடுகளுக்கும் தேசியக் கொடியை வழங்கி அவரே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணவெளி பகுதியில் தேசியக் கொடியை ஏற்றி வீடுகளுக்கு தேசிய கொடி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமி காந்தன் கூட்டுறவு கடன் வழங்கும் சங்க தலைவர் தட்சிணா மூர்த்தி, புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார் மணவெளி பகுதி கலைவாணன், தங்கதுரை மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதுவை அரசு பொதுப்பணி த்துறை மூலம் தவளக்குப்பம் லக்கம் அவென்யூ பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாரணி, இளநிலை பொறியாளர் சிவானந்தம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் அகிலன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமாரன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆழ்துளை கிணறு திட்டத்தின் மூலம் சுமார் 5000 பேர் பயன்பெறுவார்கள்.
- அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு
- குப்பைகள் தேங்காமல் இருக்க அவற்றை உடனடி யாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுச்சேரி:
புதுவையில் பெய்து வரும் தொடர் மழையால் மணவெளி தொகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர்கள் சரஸ்வதி, அகிலன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மணவெளி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குப்பைகள் தேங்காமல் இருக்க அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.