என் மலர்
நீங்கள் தேடியது "SPEECH COMPETITION"
- சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது.
- 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2021- 22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் (பதின்மப் பள்ளிகள் உள்பட) படித்து வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய), அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) படித்து வரும் மாணவர்களுக்கும் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமையன்று) சிவகங்கை மருது பாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில்் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும்் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாவர்கள் இருவரை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்் வழங்கப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களு க்கான பேச்சுப் போட்டிகள் 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கியும்், கல்லூரி மாணவர்களுக்்்கான பேச்சு போட்டிகள் 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியும் நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியா், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும்் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80198) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளி குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவி மரிய புஷ்பத்தை பள்ளி தாளாளர் சாமுவேல பாஸ்கர் ராஜ், முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
நெல்லை:
உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளி குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இதில் பாளை பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி மாணவி மரிய புஷ்பம் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவருக்கு கேரள முதல்-அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனருமான சந்திர தத்தன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
வெற்றி பெற்ற மாணவி மரிய புஷ்பத்தை பள்ளி தாளாளர் சாமுவேல பாஸ்கர் ராஜ், முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
- வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.
சீர்காழி:
சீர்காழி கிளை நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய தேசிய நூலக வார நிறைவு விழா இரண்டாம் நிலை நூலகர் ஜெ.ஜோதி தலைமையில் நடைபெற்றது.
காழிகம்பன் வெங்கடேசபாரதி, ச.மு.இ.மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் எம்.தங்கவேலு, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சு.வீழிநாதன், ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.
தொடர்ந்து மாணவ-மாணவிகளின் நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவில் நூலக பணியாளர் க.ரகு நன்றிக்கூறினார்.
- மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.
- ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.
சீர்காழி:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட பள்ளி
மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இதில் வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஜெ.தர்ஷினி, மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.
பரிசு பெற்ற மாணவியை பள்ளியின் புரவலர் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளியில் நிர்வாக குழு தலைவர் ராஜேஷ், செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், முதல்வர் ஜெகதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
- கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 250 கோரிக்கை மனுக்கள் பெற்றார். பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில் சிறந்த 3 விடுதிகளுக்கு கேடயமும், விடுதி களை நல்ல முறையில் நிர்வகிக்கும் காப்பாளருக்கு பரிசுத்தொ கையையும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா, மகாத்மா காந்தி ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
சென்னையில் நடந்த அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இணைப்பில்லம் -கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வைரவன்கோவில் - ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காந்திநகர்- மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கண் பரிசோதனை முகாமை கலெக்டர் தொடங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
- மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நெல்லை:
முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டிகள் நடத்தப் படுகிறது.
இதற்காக சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்ட அளவில் பேச்சுப்போட்டிக் நடத்தப்படுகின்றன.
இதில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதேபோல் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2 -வது பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். இப்போட்டிகளை சென்னையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்ட பொறுப்பாளராக செய்யது அகமது, ஒருங்கி ணைப்பாளராக நான்
( விஜிலா சத்தியானந்த்) பொறுப்பாளராக அந்தோணி செல்வராஜ், அனீஸ் பாத்திமா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் smcelocution@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். போட்டிகள் வருகிற 1-ந் தேதி தொடங்கி ஜூலை 3-ந்தேதி முடிவடைகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்குகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.
- போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.
திருப்பூர் :
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புத்தக கல்வியோடு சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனையை மேம்படுத்தவும் இணை செயல்பாடு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் மன்றங்களை மீண்டும் புதுப்பித்து மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.
இதன்படி திருப்பூா் மாவட்ட அளவிலான 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தொடங்கிவைத்தாா்.
பேச்சுப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள், கட்டுரைப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள் என மொத்தம் 100 மாணவா்கள் பங்கேற்றனா். பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி, கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி என மொத்தம் 4 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இதில் இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் செங்கப்பள்ளி தலைமை ஆசிரியா் உதயகுமாா், பிச்சம்பாளையம் தலைமை ஆசிரியா் லட்சுமிபதி ஆகியோா் கலந்து கொண்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.
- எண்ணறிவு பயிற்றுவிக்க18 ஆயிரத்து 142 கற்போர் கண்டறியப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
- 'வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி' எனும் தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பேச்சுப் போட்டி கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவருக்கு, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க, மாவட்டத்தில் 18 ஆயிரத்து 142 கற்போர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி' எனும் தலைப்பில் பேச்சு போட்டி நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அண்ணாதுரை போட்டிகளை துவக்கி வைத்தார். வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, பயிற்றுநர்கள் பங்கேற்று, தங்கள் பேச்சுத்திறனைக் காட்டினர்.
- கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
- போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி வருகிற 27-ந் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிரப்பி முதல்வர், துறைத்தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கு தலா ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே ஒரு கல்லூரியில் இருந்து பங்கேற்க முடியும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் மொத்த பரிசு தொகையாக ரூ.66 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- உலகநுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் ஒருங்கிணைப்புடன் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.
- இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர் பா.செல்வம் பங்கேற்று, மூன்றாவது பரிசான ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.
திருச்செந்தூர்:
உலகநுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் ஒருங்கிணைப்புடன் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர் பா.செல்வம் பங்கேற்று, மூன்றாவது பரிசான ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசனிடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவர் மற்றும் ஆதித்தனார் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஏ.செல்வக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் மு.திலீப்குமார் ஆகியோரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் பாராட்டினார்.
- பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
- நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த மாதம் இந்த போட்டி நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 181 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கடந்த மாதம் நடந்தது. இந்த போட்டியில் பெரியபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி பேத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் மகளுமான பெரியபட்டினம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவி அர்ஷியா வெற்றி பெற்றார்.அவருக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் சிறப்பு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சபீர்பானு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
- புதுக்கோட்டையில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது
- அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லுரி யில் சிறுபாண்மையினர் ஆணையத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.பின்னர் அமைச்சர் பேசும் போது,தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபா ண்மையினர் நலன் காப்பதற்காக மாநில சிறுபாண்மை நல ஆணை யத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.
பேச்சுக் கலை என்பது எண்ணங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்றவர்கள் முன்பாக நல்ல வாதமாக எடுத்துவைப்பதற்கு சமமாகும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆற்றல் கொண்டிருப்பா ர்கள். எழுத்தாற்றல், பேச்சாற்றல், இசை, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு ஆற்றல்களில் ஏதேனும் ஒரு ஆற்றலில் சிறந்தவர்களாக மாணவர்கள் இருப்பார்கள். தங்களிடம் உள்ள ஆற்றலை வளர்த்து கொண்டு எதிர் காலத்தில் சிறந்தவர்களாக, வல்லவர் களாக இந்த நாட்டிற்கு பயன்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, பிற்படுத்தப்பட்டோர மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி சிறுபாண்மையினர் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட் அந்தோணிராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.