என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Spiderman"
- இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
- அதிகபட்சம் 26,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
டெல்லியில் ஆதித்யா என்ற 20 வயது இளைஞர் ஸ்பைடர்மேன் உடையணிந்து ஓடும் காரின் மேல் அமர்ந்து ஆபத்தான முறையில் அதனை ரீல்ஸ் எடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சீட் பெல்ட் அணியாமல் ஆபத்தான முறையில் கார் ஓட்டியதாக ஆதித்யா மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் கீழ் அதிகபட்சம் 26,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இல்லையென்றால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆதித்யா இதே போல் ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் ஒட்டி ரீல்ஸ் எடுத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.
- ஒரு பயனர் நகைச்சுவையாக, ‘ஸ்பைடர்மேன் அம்மா வீட்டில் இல்லை’ என்று பதிவிட்டார்.
சூப்பர் ஹீரோ 'ஸ்பைடர்மேன்' கதாபாத்திரம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் 'ஸ்பைடர்மேன்' வேடம் அணிந்து வித்தியாசமான செயல்களை செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக அடிக்கடி பரவுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் 'ஸ்பைடர்மேன்' வேடம் அணிந்த ஒருவர் மொட்டை மாடியில் அமர்ந்து ரொட்டி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பின் மொட்டை மாடியில் 'ஸ்பைடர்மேன்' வேடம் அணிந்த ஒருவர் ரொட்டிகளை உருட்டி அவற்றை அடுப்பில் வைத்து ரொட்டி சமைக்கும் காட்சிகள் உள்ளது.
வைரலாகி வரும் இந்த வீடியோ பயனர்களை ரசிக்க செய்துள்ளது. ஒரு பயனர் நகைச்சுவையாக, 'ஸ்பைடர்மேன் அம்மா வீட்டில் இல்லை' என்று பதிவிட்டார். மற்றொரு பயனர், 'ஸ்பைடர்மேன் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்' என கூறியிருந்தார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
दुनिया को बचाने से पेट नहीं भरता
— HasnaZarooriHai?? (@HasnaZaruriHai) June 18, 2024
?????? pic.twitter.com/48z01p8trE
- பெங்களூரு நகரில் திடீரென ஸ்பைடர்மேன் வேடத்தில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்ற வீடியோ பயனர்களை ரசிக்க செய்தது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பெங்களூருவில் ஸ்பைடர்மேன் வேடம் அணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது.
விஷால் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோ 'ஜே.பி. நகரில் ஸ்பைடர்மேன்' என்ற தலைப்புடன் வைரலானது. அதில், ஜே.பி. நகர் தெருக்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பயணம் செய்யும் காட்சிகள் உள்ளது. அதில் ஸ்பைடர்மேன் உடை அணிந்து மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் மகிழ்ச்சியுடன் கட்டை விரலை உயர்த்தி காட்டி செய்கை செய்யும் காட்சி உள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற பெங்களூரு நகரில் திடீரென ஸ்பைடர்மேன் வேடத்தில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த வீடியோ பயனர்களை ரசிக்க செய்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
spiderman in jp nagar pic.twitter.com/wrSCJktvBV
— Vishal (@vishalanandtwts) May 21, 2024
- ரெயில் பெட்டிக்குள் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் உள்ளது.
- வீடியோ வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தியாவில் ரெயில் போக்குவரத்தை பயணிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தொலைதூர ரெயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கூட்ட நெரிசல் அலைமோதிய ரெயில் பெட்டிக்குள் கழிவறைக்கு செல்வதற்காக வாலிபர் ஒருவர் 'ஸ்பைடர் மேன்' போன்று தாவி, தாவி சென்ற காட்சிகள் உள்ளது.
ரெயில் பெட்டிக்குள் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் உள்ளது. அப்போது பயணியால் சிறிது தூரம் கூட கடந்து செல்ல முடியாத நிலையில், அவர் பெட்டிக்குள் கம்பிகள் மீது ஏறியும், தாவியும் கூட்டத்தை கடந்து கழிவறை நோக்கி செல்லும் காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை பார்த்த பயனர்கள் பலரும், தங்களுக்கு ஸ்பைடர்மேன் ஞாபகம் வந்ததாக கருத்துக்களை பதிவிட்டனர். மேலும் பயனர்கள் பலரும் ரெயில் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சிறியதாக இருப்பதாகவும், இந்திய ரெயில்வேயில் நெரிசலுக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை இது வெளிப்படுத்துகிறது எனவும் பதிவிட்டனர்.
- மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- பள்ளி மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உரையாடி உள்ளனர்.
கான்பூர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்பைடர்மேனாக மாறி பள்ளி பால்கனியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் பாபுபூர்வா காலனியில் வசிக்கும் ஆனந்த் பாஜ்பாயின் 8 வயது மகன் விராட், வீரேந்திர ஸ்வரூப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 19ஆம் தேதி பள்ளி மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உரையாடி உள்ளனர். ஸ்பைடர்மேனின் உரையாடலைக் கேட்ட விராட் பால்கனிக்கு வந்து 'நான் ஸ்பைடர்மேன் வருகிறேன்' என்று கூறிக்கொண்டே 16 அடி உயரத்தில் இருந்து குதித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த விராட் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 73வது தளத்தை அடைந்தபோது அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர்.
- கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் என தகவல் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ளது லோட்டே வேர்ல்ட் டவர். 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக இன்று திடீரென ஒரு வாலிபர் விறுவிறுவென ஏறத் தொடங்கினார். கயிறு உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் ஏறியதைப் பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதியில் கூட்டம் கூட ஆரம்பித்தது. போலீசாரும் தீயணைப்பு படையினரும் வந்து சேர்ந்தனர். அவரை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
அந்த வாலிபர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடத்தின் மீது ஏறிய நிலையில், 73வது தளத்தை அடைந்தபோது, அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் அந்த நபர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விரிவான தகவல் எதுவும் காவல்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் என ஒரு நாளிதழில் தகவல் வெளியாகி உள்ளது. 2019-இல் லண்டனில் உள்ள ஷார்ட் என்ற கட்டிடத்தில் ஏறியதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2018 ஆம் ஆண்டில், லோட்டே வேர்ல்ட் டவரில் ஏறிய பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் அலைன் ராபர்ட், பாதி தூரம் ஏறிய நிலையில், போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்