search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stopped"

    • சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
    • தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது.

    சேலம்:

    சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

    அதேபோல அரசு போக்குவரத்து கழகம் நெல்லைக்கோட்டம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் 2001 ஜனவரி 14 முதல் தினமும் மாலை 4.15 மணிக்கு சேலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோல் மறு மார்க்கத்திலும் பஸ் இயக்கப்பட்டது.

    அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் 2014-ம் ஆண்டு பகலில் நெல்லைக்கு இயக்கிய பஸ் சேவையை நிறுத்திவிட்டது. 2021 இல் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓசூர் கிளை தொடங்கப்பட்ட நிலையில் சேலத்தில் இருந்து நெல்லைக்கு இயங்கிய பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு நீட்டிக்கப்பட்டது .

    இதனால் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது. இந்த பஸ்சிற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் நெல்லைக்கோட்ட நிர்வாகம் எந்த அறிவிப்பு இல்லாமல் சேலம் கலியக்காவிளை பஸ் சேவையை நிறுத்தியது. இதனால் சேலத்தில் இருந்து மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிநீரை காய்ச்சி பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • அதிகப்படியான நீா்க்கசிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

    உடுமலை:

    உடுமலை நகரில் நாளை 19, 20 ஆகிய 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து உடுமலை நகராட்சி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    உடுமலை நகராட்சியின் திருமூா்த்தி நகா் தலைமைக் குடிநீா் பணியிட நீரேற்று நிலைய இரண்டாவது குடிநீா்த்திட்ட பிரதானக்குழாய்களில் உடைப்பு மற்றும் அதிகப்படியான நீா்க்கசிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் உடுமலை நகரம் முழுவதும் நாளை 19, 20 ந் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை) குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும், குடிநீரை காய்ச்சி பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

    பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்று 18-வது நாளாக சாம்பல்பள்ளம் பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #PerumalStatue
    சூளகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டனர்.

    வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்து அடைந்தது. அங்கிருந்து ஊத்தங் கரை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி வந்து கடந்த 9-ந் தேதி கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாம்பல்பள்ளம் என்னுமிடத்தை அடைந்தது.

    அங்குள்ள சிறு பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டடதால், பெருமாள் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது. அந்த பாலத்தை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை.

    இதனால், பாலத்தின் அருகே, புதியதாக தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி நடந்தது. இன்று 18-வது நாளாக சாம்பல்பள்ளம் பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியை கடந்து விட்டால் சுமார் 2 கி.மீ. தொலைவில் சின்னாறு பாலம் உள்ளது. இதையடுத்து, சென்னப்பள்ளி மற்றும் கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறு பாலங்கள் உள்ளன.

    இதற்காக வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சாம்பல்பள்ளத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது, தற்காலிக பாலம் 3 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை முழுமை அடைந்தவுடன், பெருமாள் சிலை சிக்கல் இன்றி பெங்களூரு கொண்டு செல்ல முடியும்.

    இதனால் தான் சாம்பல் பள்ளத்தை கடப்பதற்கு கூடுதல் நாட்கள் பிடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே சாம்பல் பள்ளம் மற்றும் மேலும் 2 இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. #PerumalStatue 
    சூளகிரியை அடுத்த சாமல்பள்ளம் முனீஸ்வரன் கோவில் அருகே கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் தற்காலிக சாலை அமைக்க சிலை அமைப்பு குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #Vishnustatue
    சூளகிரி:

    கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் இரந்து 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் நோக்கி சென்றது.

    கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே உள்ள மார்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த கார்கோ லாரி செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி சென்றது. ஆனால் லாரியின் டயர்கள் அந்த மண்ணில் புதைந்து தொடர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    பின்னர் அந்த சாலையில் மீண்டும் ஜல்லிக்கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சிறிது மேடாக்கினர். அதன்பின், 4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி புறப்பட்டது. ஆனால் சாலை முடியும் இடத்தில் அதிக அளவில் மேடாக இருந்ததால் தொடர்ந்து சிலை ஏற்றப்பட்ட லாரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அந்த லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு கார்கோ என்ஜின்கள் 3 மற்றும் 5 ராட்சத டிப்பர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சிலை ஏற்றப்பட்ட லாரியுடன் இணைக்கப்பட்ட பின்னர் லாரி புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையை சென்றடைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். அங்கிருந்து புறப்பட்ட லாரி மேலுமலை கணவாய் வழியாக சாமல்பள்ளம் வரை சென்றது. அங்கு முனீஸ்வரன் கோவில் அருகே சிலை உள்ள கார்கோ லாரி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இன்று (9-ந் தேதி) காலை ஓசூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேரில் வந்து கோதண்ட ராமரை வழிபட்டனர். இன்னும் இந்த சிலை சாமல் பள்ளம் மற்றும் சின்னாறு ஆகிய பகுதிகளில் உள்ள 2 பாலங்களை கடக்க வேண்டியது உள்ளது. இந்த பாலங்கள் வழியாக சிலை உள்ள கார்கோ லாரி சென்றால் பாலங்கள் இடிந்து விழும் என்றும், எனவே மாற்றுப்பாதை அமைத்து சிலையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று சிலை அமைப்பு குழுவினர் சாமல்பள்ளம் மற்றும் சின்னாறு பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள ஓடைகளில் தற்காலிக பாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். தற்காலிக பாதை அமைத்த பிறகு சிலை உள்ள லாரி பெங்களூரு நோக்கி புறப்படும் என்று சிலை அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    சாமல்பள்ளத்தில் இருந்து சிலை புறப்பட இன்னும் 4 நாட்களுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #Vishnustatue


    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 17 வயது சிறுமியின் திருமணத்தை சமூகநல அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் அவர் மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடாவை சேர்ந்த வாலிபரை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் போலீசாருடன் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமிக்கு திருமண வயது எட்டாததை பெற்றோரிடம் விளக்கிக்கூறினர். இதனை தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக புறப்பட்டுச் சென்ற இரண்டு பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் பம்பை திரும்பினர். #SabarimalaProtest #WomenEntry
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு மாறாக, அனைத்து வயதுடைய பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.



    இவ்வாறு பாதுகாப்புடன் செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பல பெண்கள் தங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்ப நேர்ந்தது.

    இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகியோர் இன்று காலை பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பக்தர்கள் அந்த பெண்களை முன்னேற விடாமல் நீலிமலையில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்து. இதனால், 2 பெண்களும் போலீஸ் பாதுகாப்புடன் பம்பை திரும்பினர். #SabarimalaProtest #WomenEntry
    தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள் இன்று ஓடவில்லை. #BharatBandh
    ஓசூர்:

    சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் மார்த்தாண்டம், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று அதிகாலை 2 மணியுடன் ஓசூரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 270 அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இதேபோல ஓசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் தமிழக எல்லை வரை மட்டுமே சென்று வந்தன. பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு இயக்கப்பட்ட கர்நாடக அரசு பஸ்கள் இன்று காலை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    ஓசூரில் இருந்து வழக்கமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி, சர்ஜியாபுரம், மாலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் ஓசூர் அருகே தமிழக எல்லை வரை மட்டுமே சென்று வருகின்றன.

    ஓசூரில் இருந்து சாய்பாபா ஆசிரமம் உள்ள புட்டபர்த்திக்கு இன்று காலை அரசு பஸ் இயக்கப்படவில்லை.

    பெங்களூருவில் வாடகை அதிகம் என்பதால் ஏராளமான தொழிலாளர்கள் ஓசூரில் தங்கி இருந்து பஸ் மற்றும் ரெயில் மூலம் பெங்களூரு சென்று வேலை பார்த்தனர். இன்று வேலைநிறுத்தம்  காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டனர்.

    தருமபுரி-பெங்களூரு, ஓசூர்-பெங்களூரு, சேலம்-பெங்களூரு பயணிகள் ரெயிலிலும், நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் இன்று காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று காலை ஓசூரில் இருந்து தனியார் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெங்களூருக்கு சென்றனர்.  #BharatBandh

    கன்னியாகுமரியில் சூறாவளி காற்றால் படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறுகிறது.

    நேற்று காலை வழக்கம்போல 8 மணிக்கு சுற்றுலாபயணிகளை ஏற்றிக்கொண்டு படகு போக்குவரத்து நடந்தது. இந்தநிலையில் காலை 10 மணி அளவில் திடீரென கடலில் மாற்றங்கள் ஏற்றப்பட்டது. சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

    அதன்பிறகு காலநிலையில் சகஜநிலை திரும்பியதை தொடர்ந்து பகல் 2.45 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை நடந்தது.

    இந்தநிலையில் இன்று காலை முதலே கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்றும் வீசியதால் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழுந்தது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    படகு துறையின் நுழைவுவாயிலும் பூட்டப்பட்டிருந்தது. படகு இயங்காதது தொடர்பான அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்பட்டிருந்தது. படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இன்று காலை சூரிய உதயத்தை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் முக்கடலில் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் வைகை மற்றும் முல்லைபெரியாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறையத்தொடங்கியுள்ளது. இருந்தபோதும் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நேற்றுவரை 1700 கனஅடிநீர் திறக்கப்பட்டது.

    தற்போது பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 54.69 அடியாக உள்ளது. 475 கனஅடிநீர் வருகிறது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 126.55 அடியாக உள்ளது. 187 கனஅடிநீர் வருகிறது. 900 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51.20 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 122.18 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NeetCounselling
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக ஒரே நுழைவுத்தேர்வாக நீட் அறிவிக்கப்பட்டது. இதற்கு இன்றளவும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மேலும், நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளால் மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற மிகவும் சிரமம் அடைகின்றனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. அதில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவு குறித்து முறையீடு செய்ய இருப்பதாக சி.பி.எஸ்.சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வந்த எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி தனியார் கல்லூரிகளில் நடைபெற இருந்த நிர்வாக ஒதுக்கீட்டுகான கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NeetCounselling
    தேவகோட்டை- திருச்சி இடையே ஆத்தங்குடி வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ளது ஆத்தங்குடி கிராமம். முத்துப்பட்டி ஊராட்சி, ஆற்காடுவெளுவூர், அரண்மனைப்பட்டி ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது தவிர சுற்றுலாத்தலமாக உள்ள இந்த கிராமத்தில் மிகப் பெரிய வீடுகள் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து இந்த வீட்டை காண்பதற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த கிராமத்திற்கு வந்து இந்த வீட்டை பார்த்து ரசித்து செல்கின்றனர். இது தவிர இங்கு புகழ்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் கட்டுமான தொழில்களும் நடைபெற்று வருகின்றன.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கிராமத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. குறிப்பாக இந்த பகுதியில் சரியான பஸ்வசதிகள் இல்லாததால் இப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். கிராம மக்கள் சரக்குவாகனங்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

    இது குறித்து ஆத்தங்குடியைச் சேர்ந்த சாகுல் என்பவர் கூறியதாவது:- பொதுவாக இந்த வழியாக காரைக்குடியில் இருந்து தினந்தோறும் 6ஏ, 9ஏ, 5,8, 2சி ஆகிய 4அரசு டவுன் பஸ்களும், காரைக்குடி-திருமயத்திற்கு தனியார் பஸ் ஒன்றும் இயங்கி வருகிறது.

    இதுதவிர கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று காரைக்குடி மற்றும் ஆத்தங்குடி வழியாக திருச்சிக்கு சென்று வந்துக்கொண்டிருந்தது. இந்த பஸ் தேவகோட்டையில் தினந்தோறும் அதிகாலை 3.50மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வழியாக ஆத்தங்குடி கிராமத்திற்கு காலை 4.30மணிக்கு வரும். அதன் பின்னர் கோனாப்பட்டு வழியாக திருச்சிக்கு காலை 6.45மணிக்கு சென்றடையும், மறு மார்க்கத்தில் திருச்சியில் காலை 10மணிக்கு புறப்பட்டு ஆத்தங்குடி கிராமத்திற்கு காலை 11.45மணிக்கு வந்து சேரும்.

    மகளிர் பஸ்

    அதன் பின்னர் தேவகோட்டைக்கு மதியம் 1மணிக்கு சென்றடையும். 1.30மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5 மணிக்கு சென்றடையும். இவ்வாறு தினந்தோறும் விரைவு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் ஆத்தங்குடி, கோனாப்பட்டு, பலவான்குடி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன் அடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த பஸ் ஆத்தங்குடி வழியாக செல்வது நிறுத்தப்பட்டு திருச்சியில் இருந்து பை-பாஸ் சாலையில் காரைக்குடி நோக்கி செல்கிறது. இதனால் இந்த கிராமப்புற மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிஅடைந்து வருகின்றனர்.

    மேலும் இந்த அரசு பஸ் திருச்சியில் இருந்தோ அல்லது தேவகோட்டை, காரைக்குடி பஸ் நிலையத்தில் புறப்படும்போது அதன் கண்டக்டர் ஆத்தங்குடி செல்லாது என்று கூறி பின்னர்தான் பஸ்சை இயக்குகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் அதற்கு தகுந்த பதில் கூறுவதில்லை. மேலும் ஆத்தங்குடி பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 60 பேர் காரைக்குடி, பள்ளத்தூர், திருப்பத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

    காலை நேரங்களில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த கல்லூரி மாணவிகள் அந்த பஸ்சில் செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கல்லூரி மாணவிகளுக்கு என்று மகளிர் பஸ் ஒன்று இந்த வழியாக இயக்க வேண்டும்.

    நடவடிக்கை

    இது தவிர புகழ்பெற்ற ஆத்தங்குடி நகருக்கு பலவான்குடியில் இருந்து வரும் சாலை ஒருவழி சாலையாகவும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் சில அரசு பஸ்கள் ஊருக்குள் வராமல் சென்று விடுகின்றன. மேலும் ஆத்தங்குடியில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டுமானால் இந்த பகுதி மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள காரைக்குடியில் இருந்தோ அல்லது சுமார் 7கிலோ மீட்டர் தூரம் உள்ள குன்றக்குடிக்கு சென்று அதன் பின்னர்தான் செல்ல வேண்டும்.

    இது தவிர ஆத்தங்குடியில் இருந்து குன்றக்குடிக்கு நேரடியாக அரசு பஸ்கள் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் கனரக சரக்கு வாகனத்தில் தினந்தோறும் உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே காரைக்குடியில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்கனவே தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, ஆத்தங்குடி வழியாக இயக்கப்பட்ட இந்த அரசு விரைவு பஸ்சை தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தங்குடி வழியாக ஒரு வழிச்சாலையாக உள்ள சாலையை விரிவுப்படுத்த சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

    இதையொட்டி திருமண ஏற்பாடுகளில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, திண்டிவனம் தாசில்தார் கீதா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் ஊரல் கிராமத்துக்கு விரைந்து சென்று மணமகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி திருமணம் நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

    இதனையேற்ற மணமகளின் பெற்றோர், திருமணத்தை நிறுத்திக்கொள்வதாக அதிகாரிகளிடம் கூறியதோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, அந்த சிறுமியை மீட்டு சமூக நலத்துறை மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதன் மூலம் இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    ×