என் மலர்
நீங்கள் தேடியது "sub inspector"
- ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
- இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற காவலர் ஜாகிர் உசேன் கொலை வழக்கு குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை பிடித்தது.
நெல்லை ரெட்டியார்ப்பட்டியில் பதுங்கியிருந்த குற்றவாளி முகமது தௌபிக் பிடிக்கச்சென்ற போது தலைமைக்காவலர் ஆனந்தை அவர் அரிவாளால் வெட்டமுயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கிருஷ்ண மூர்த்தியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
- ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
- இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை தொடர்பாக டவுண் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
- ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
- ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர்.
- சொத்து தகராறில் கும்பல் வெறிச்செயல்.
நெல்லை:
நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57). இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றார்.
பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து வந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்தது.
பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, டவுன் உதவி கமிஷனர் அஜிகுமார் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது முகம் மற்றும் பின் தலை பகுதிகள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள தொட்டிப்பாலம் தெருவை அடுத்த பிரதான சாலையில் 36 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை முற்றிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜாகீர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் 2 தரப்பினருக்கும் இடையே மேலும் முன்விரோதம் அதிகரித்த நிலையில், எதிர்தரப்பினர் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களினால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலிக்கு மனைவி, 1 மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
நெல்லை மாநகரின் முக்கிய இடத்தில் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- ரெட்டியார்பட்டி அரியநாயகிபுரம் கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 61). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.
- கோவிலை நிர்வகிப்பது, வரவு செலவு கணக்குகளை பார்ப்பது தொடர்பாக வேல்முருகனுக்கும், சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
நெல்லை:
ரெட்டியார்பட்டி அரியநாயகிபுரம் கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 61). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் நேற்று இரவு பாளை அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் பாளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேல்முருகனுக்கு குலதெய்வ கோவில் பாளை கோட்டூர் ரோட்டில் உள்ளதாக தெரிகிறது.
இந்த கோவிலை நிர்வகிப்பது, வரவு செலவு கணக்குகளை பார்ப்பது தொடர்பாக வேல்முருகனுக்கும், சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 ஆண்டுகளுக்கு மேலான 201 போலீசார் கடந்த இரு வாரம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலான 201 போலீசார் கடந்த இரு வாரம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது 14 சப்-இன்ஸ்பெக்டர்களை மாநகருக்குள் இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படிவடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரஜினிகாந்த் கட்டுப்பாட்டு அறைக்கும், வடக்கு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், தெற்கு எஸ்.ஐ., இளஞ்செழியன் வடக்குக்கும், தெற்கு ராமசாமி வடக்கு குற்றப்பிரிவுக்கும், கொங்கு நகர் அனைத்து மகளிர் எஸ்.ஐ., கனகவள்ளி தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், கே.வி.ஆர்., நகர் சப்- இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் கொங்கு நகர் மகளிருக்கும், கலாவதி கே.வி.ஆர்., நகர் மகளிருக்கும், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மத்திய போலீஸ் நிலையத்திற்கும், கட்டுப்பாட்டு அறை சப்- இன்ஸ்பெக்டர் கேசவன் மத்திய குற்றப்பிரிவுக்கும், திருமுருகன்பூண்டி ராஜூ வடக்குக்கும், நல்லூர் கிருஷ்ணமூர்த்தி வீரபாண்டிக்கும், மத்திய குற்றப்பிரிவு அப்பாகுட்டி திருமுருகன்பூண்டிக்கும், வீரபாண்டி சாம் ஆல்பர்ட் மத்திய குற்றபிரிவுக்கும் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு பாண்டிதுரை ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- பாளை ஆயுதப்படையில் முத்துராஜ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
- முத்துராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூர் களக்குடியை அடுத்த திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 52).
சப்- இன்ஸ்பெக்டர்
இவர் கடந்த 1993-ம் வருடம் தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து பதவி உயர்வு பெற்று தற்போது பாளையில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
இதனையடுத்து அங்குள்ள போலீஸ் புதிய குடியிருப்பில் மனைவி ஜெயா மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரும் என்ஜினியரிங் முடித் துள்ளனர்.
'திடீர்' சாவு
முத்துராஜுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்த முத்துராஜ் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் முத்துராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து பெரு மாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே முத்துராஜ் உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் இன்று மாலை அவரது சொந்த ஊரான திருமலாபுரத்தில் போலீசாரின் இறுதி அஞ்சலியுடன் உடல் அடக்கம் நடைபெறுகிறது.
- 1998-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
- கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கோவை,
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியம் (வயது 55). இவர் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு 11.45 மணியளவில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுப்பிரமணியம் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பணியின் போது இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கடந்தூர். இவர் 1998 -ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு அல்லிராணி என்ற மனைவியும் 1 மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மாரடைப்பில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் உடலுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அஞ்சலி
- கோமதி நாயகம் என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா, கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.
நெல்லை:
பாளை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது42), வியாபாரி. இவர் தனக்கு சொந்தமான 246 பவுன் தங்க நகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கே.டி.சி. நகரை சேர்ந்த கோமதி நாயகம் (41) என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார். இதனால் கோமதி நாயகம் நகைகளை மீட்டு ரமேஷ்குமாரிடம் கொடுக் காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
பலமுறை ரமேஷ்குமார் தன்னிடம் நகைகளை தருமாறும், அதற்குரிய பணத்தை தருவதாக கூறியும் அவர் கொடுக்கவில்லை. மேலும் நகைகளை கொடுக்க மறுத்த கோமதி நாயகம் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையாவிடம் விவரம் கூறினார்.
பின்னர் சகோதரர்கள் சேர்ந்து ரமேஷ்குமாரை மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தர வின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா மற்றும் அவரது சகோதரர் கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணை யாவை சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
- விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.
- சிறப்பு அழைப்பாளராக சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
கடையம்:
கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலை ஓரத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமுத்திரகனி, வசந்த், காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெய சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார்.இதில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் பணித்தள பொறுப்பாளர்கள் ரஞ்சித் ராணி, அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிவசங்கரன் காரை வழிமறித்தனர்.
- பலத்த காயமடைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போரூர்:
சென்னை நுங்கம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 31). சப் - இன்ஸ்பெக்டரான இவர் மாதவரம் போலீஸ் நிலைய சட்டம்-ஒழுங்கு பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.
சிவசங்கரன் நேற்று இரவு தனது நண்பர்களுடன் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கிளப் ஒன்றிற்கு சென்றார். பின்னர் மது அருந்திவிட்டு பணம் கட்ட சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் "எனது பில்லுக்கும் சேர்த்து பணத்தை கட்டு" என்று சிவசங்கரனிடம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் சிவசங்கரன் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவரை 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிவசங்கரன் காரை வழிமறித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய சிவசங்கரனை சரமாரியாக தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி சென்ற கும்பலை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது.
- சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.
இவர், தற்போது பணிபுரிந்து வரும் பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர்நகரில் சுமார் 40 குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காடுகளுக்கு சென்று விறகு வெட்டியும், தேன் எடுத்து விற்றும், அரிசி ஆலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்தும் வருகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைகளை குல தொழில்களிலேயே ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதையறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் நேற்று அந்த பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் 11 குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே இல்லை என்பதை அறிந்தார்.
இதையடுத்து அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து பேசியதாவது:-
தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்படி குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரலாம். எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.
வேண்டுமானால் அவர்களுடைய கல்வி செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு உதவ பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். யார் காலில் விழுந்தாவது உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறேன். உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.
இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.
இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது 11 குழந்தைகளையும் பென்னாலூர்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்த்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி சப்-இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.