என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tablet"

    • ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    • புதிய ஒன்பிளஸ் பேட் மூலம் அந்நிறுவனம் டேப்லெட் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஒன்பிளஸ் பேட் மாடல் மீண்டும் உருவாக்கப்பட்டு வருவதாக ஒன்பிளஸ் டிப்ஸ்டரான மேக்ஸ் ஜேம்பர் தெரிவித்து இருக்கிறார். ஒன்பிளஸ் பேட் மூலம் அந்நிறுவனம் டேப்லெட் சந்தையில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் என்ற போதிலும், கடந்த ஒரு வருடமாக இந்த மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ் ஹார்டுவேர் வளர்ச்சி பிரிவும் ஒப்போ நிறுவன சாதனங்கள் வளர்ச்சி பிரிவு நெருங்கிய பரஸ்பரம் கொண்டிருக்கும் நிலையில், ஒப்போ பேட் மாடல் மேற்கத்திய பகுதிகளில் ஒன்பிளஸ் பேட் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. "ஒன்பிளஸ் பேட்" பெயரை அந்நிறுவனம் டிரேட்மார்க் செய்து இருக்கிறது.

    ஒன்பிளஸ் பேட் மாடல் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் மேக்ஸ் ஜேம்பர் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை 2022 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. ஒன்பிளஸ் தனது முதல் டேப்லெட் பற்றி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

    ஒப்போ நிறுவனம் இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒப்போ பேட் 11 இன்ச் 2.5K LCD 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஒப்போ பேட் ஏர் மாடல் 10.36 இன்ச் 2K LCD 60HZ ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் பேட் மாடல் ஒப்போ பேட் போன்று சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இதில் ஆண்ட்ராய்டு 12L ஒஎஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய டேப்லெட் மாடலுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் வசதி உள்ளிட்டவைகளை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • புதிய சாம்சங் டேப்லெட் ஸ்டைலஸ் சப்போர்ட் மற்றும் LCD டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    செப்டம்பர் மாத வாக்கில் சாம்சங் நிறுவனத்தின் SM-X506B மாடல் நம்பர் கொண்ட டேப்லெட் விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது இந்த டேப்லெட் மாடல் FE பிராண்டிங் கொண்டிருக்கும் என டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்ட் தெரிவித்து இருக்கிறார்.

    மேலும் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் S8 FE மாடலில் LCD டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இது அதன் முந்தைய மாடலில் இருந்ததை விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. கேலக்ஸி டேப் S8, S8 பிளஸ் மற்றும் S8 அல்ட்ரா மாடல்களில் சாம்சங் நிறுவனம் AMOELD டிஸ்ப்ளே வழங்கி இருக்கிறது. மேலும் டேப் S8 FE மாடலில் ஸ்லைடஸ் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் மீடியாடெக் 900டி பிராசஸர், மாலி G68 MC-4 GPU வழங்கப்படுகிறது. இது டிமென்சிட்டி 900 பிராசஸருக்கு இணையான ஒன்று ஆகும். மேலும் இத்துடன் 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி இந்த டேப்லெட் கேலக்ஸி டேப் S8 FE மாடலின் 5ஜி வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் வைபை வெர்ஷன் மட்டுமே இடம்பெற்று இருக்கும் என்றும் இது SM-X500 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி டேப் S8 FE மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், ஒன் யுஐ 5, 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி டேப் S7 FE மாடலின் பேஸ் வேரியண்டிலும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. FE மாடல் என்பதால் இதன் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்–சினைகளை தவிர்க்கலாம்.
    • முடிவில் மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்–பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சீனிவாசபுரம் காமராஜர் ரோட்டில் உள்ள லட்சுமி நாராயணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம்,  அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு காவேரி லயன்ஸ் சங்கம் தலைவர் முருகப்பன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலரும் லயன்ஸ் சங்க நிர்வாகியுமான தமிழ்வாணன், லயன்ஸ் சங்கம் மலேசியா சுந்தரம் ஜுவல்லரி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண் சிகிச்சை முகாமை முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி., தொடங்கி வைத்தார். சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நல்லெண்ணத்தூதுவர் முகமது ரபி தொடங்கி வைத்தார்.லயன் சங்க நிர்வாகிகள் சிவகுமார், பாலமுருககுப்தா, பார்க்கவன் பச்சமுத்து, தலைமை கண் மருத்துவர் ஞான செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி., பேசியதாவது:-

    இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்ததற்கு பெருமைப்படுகிறேன். அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்–சினைகளை தவிர்க்கலாம்.

    இதேபோல் சர்க்கரை நோய்க்கும் ஆரம்பத்திலே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    முகாம் நடைபெறும் சீனிவாசபுரம் லட்சுமி நாராயணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு 2 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு எனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க உள்ளேன். வருகின்ற கோடை விடுமுறை காலத்தில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்க உள்ளது.

    விடுமுறை காலத்திற்குள் அந்த பணி நிறைவடையும். புதிய கட்டிடங்களுக்கு தேவையான மேசை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து வகையான பர்னிச்சர்களையும் காவேரி லயன் சங்கம் உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு லயன் சங்கங்களும் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பரிசோதனை முகாம் மாலை வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பரிசோதனை முடிவில் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை காவேரி லயன்ஸ் சங்கம் தலைவர் முருகப்பன், செயலர் சிவ சண்முகசுந்தரம், செயலர் (சேவை) ராதாகிருஷ்ணன், பொருளாளர் மனோகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சியோமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    • இதன் ப்ரோ மாடலில் ஃபிளாக்‌ஷிப் தர பிராசஸர், 120Hz AMOLED ஸ்கிரீன், குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்படலாம்.

    சியோமி நிறுவனம் 2021 வாக்கில் டேப்லெட் சந்தையில் களமிறங்கியது. முதற்கட்டமாக சியோமி பேட் 5 மற்றும் சியோமி பேட் 5 ப்ரோ என இரு மாடல்களை சியோமி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. தற்போது இரு மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனை சியோமி உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை சியோமி பேட் 6 மற்றும் பேட் 6 ப்ரோ பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இரண்டு புது டேப்லெட் மாடல்களும் பிபா மற்றும் லிக்வின் எனும் குறியீட்டு பெயர்களில் உருவாக்கப்பட்டு வருகிறது. இவை சியோமி பேட் 6 மற்றும் பேட் 6 ப்ரோ பெயர்களில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இரு மாடல்களில் பேஸ் வேரியண்ட் ஆன சியோமி பேட் 6 குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதே சிப்செட் ஒப்போ, விவோ மற்றும் லெனோவோ நிறுவன டேப்லெட் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லீக் ஆன அம்சங்கள்:

    சியோமி பேட் 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய சியோமி பேட் 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வழங்கப்படுகிறது. இத்துடன் சியோமி பேட் 6 டேப்லெட் M82 மாடல் நம்பர் கொண்டிருப்பதாகவும், இது சீனா, இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த டேப்லெட்டில் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    டாப் எண்ட் மாடலான சியோமி பேட் 6 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 120Hz AMOLED டிஸ்ப்ளே, 1880x2880 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது. இது முந்தைய பேட் 5 ப்ரோ மாடலில் இருந்த IPS LCD டிஸ்ப்ளேவில் இருந்து மிகப்பெரும் அப்டேட் ஆகும். மேலும் புதிய சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் குவாட் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த டேப்லெட் M81 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த மாடல் பிரத்யேகமாக சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என xiaomiui தெரிவித்து இருக்கிறது. தற்போது சியோமி பேட் 5 மாடல் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • ரியல்மியின் புது டேப்லெட் பற்றிய விவரங்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

    இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட், ரியல்மி மினி மற்றும் ரியல்மி பேட் X மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் புது டேப்லெட் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புதிய ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் விரைவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு ஸ்கிரீன்ஷாட்டில் ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் லிஸ்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ரியல்மி பேட் ஸ்லிம் மாடலில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, வைபை, 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி, கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இவைதவிர ரியல்மி பேட் ஸ்லிம் மாடலின் இதர அம்சங்கள் ரியல்மி பேட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.

    ரியல்மி பேட் மாடலில் 10.4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல், 8MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 7100 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. ரியல்மி பேட் மாடல் இரண்டு எல்டிஇ மாடல்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ரியல்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகும் என ரியல்மி ஏற்கனவே அறிவித்து விட்டது. எனினும், ரியல்மி பேட் ஸ்லிம் வெளியீடு பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.

    • லெனோவோ நிறுவனத்தின் புது டேப்லெட் 5ஜி கனெக்டிவிட்டி, குவாட் ஜெபிஎல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
    • இந்த டேப்லெட் 7700 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    லெனோவோ டேப் P11 5ஜி டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் P11 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய மாடலை விட புது மாடலில் அதநவீன ஹார்டுவேர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லெனோவோ டேப் P11 5ஜி மாடலில் 11 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு உள்ளிட்ட சாதனங்களுக்கான சப்போர்ட் கொண்டுள்ளது. இது டூயல் டோன் பேக் பேனல், ஒற்றை கேமரா சென்சார் உள்ளது.

    ஆடியோவை பொருத்தவரை லெனோவோ டேப் P11 5ஜி மாடல் குவாட் ஜெபிஎல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சவுண்ட் டியுனிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புது டேப் P11 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், அட்ரினோ 619 GPU, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த டேப்லெட் 7700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட், 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய லெனோவோ டேப் P11 5ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் ஸ்டாம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை லெனோவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

    • ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம், திருத்துறைப்பூண்டி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து இலவச இருதய, சர்க்கரை மற்றும் பொது மருத்துவ முகாம் திருத்துறைப்பூண்டி எஸ்.வி.எஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.

    முகாமிற்கு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்க தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன் தலைமை தாங்கினார்.

    ராய் டிரஸ்ட் நிறுவன தலைவர் லயன் துரை ராயப்பன் முகாமை தொடங்கி வைத்தார். அரிமா சங்க சாசன தலைவர் லயன் மருத்துவர் முகம்மது ஆரிப், மண்டல தலைவர் லயன் ஸ்ரீநாத், வட்டார தலைவர் லயன் கண்ணன், பொருளாளர் லயன் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நூற்றாண்டு அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் மூத்த ஆலோசகர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 850-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும், 85- க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    இதில் சங்க உறுப்பினர்கள் லயன் நிஜாம் முகமது, லயன் கார்த்திகேயன், லயன் மாதவன், பொறியாளர் லயன் ரகு, லயன் மகேஷ், லயன் அகல்யா மணி , லயன் பார்த்திபன், லயன் ராஜ்மோகன், லயன் மாரியப்பன், கீழையூர் லயன் மோகன், லயன் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரிமா சங்க செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.

    • ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த மாத துவக்கத்திலேயே பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • ஸ்மார்ட்போன், டிவி, இயர்பட்ஸ் என தொடர்ந்து புது சாதனங்கள் வெளியீட்டை ஒன்பிளஸ் அறிவித்து வருகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் "கிளவுட் 11" நிகழ்வை பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன்கள், ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் மெக்கானிக்கல் கீபோர்டு என ஏராளமான சாதனங்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வரிசையில், ஒன்பிளஸ் நிறுவனம் மற்றொரு சாதனத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

    புது சாதனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் ஆகும். இது ஒன்பிளஸ் பேட் என அழைக்கப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பேட் விவரங்களை இதுவரை அறிவிக்கவே இல்லை. எனினும், இந்த டேப்லெட் விவரங்கள் ஒன்பிளஸ் 11 5ஜி மைக்ரசைட்-இல் இடம்பெற்று இருக்கிறது.

    ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடலுக்கென பிரத்யேக பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இதில் புது டேப்லெட் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் பேட் மாடலின் மூன்று புறங்களிலும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் பேட் பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், புது சாதனத்தின் வெளியீடு தற்போது உறுதியாகி விட்டது. இந்த டேப்லெட் டெஸ்டிங் இம்மமாத துவக்கத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக 2021 வாக்கில் ஒன்பிளஸ் பேட் டேப்லெட் மாடல் EUIPO டிரேட்மார்க் பெற்று இருந்தது. மேலும் இந்த டேப்லெட் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒப்போ டேப்லெட்களின் ட்வீக் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது டேப்லெட் அலுமினியம் அலாய் ஃபிரேம் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது.
    • ஒன்பிளஸ் பேட் விலை மற்றும் முழுமையான அம்சங்கள் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் கிளவுட் 11 நிகழ்வு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் பேட் மாடலுக்கான புது டீசரை ஒன்பிளஸ் வெளியிட்டு உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் 11R 5ஜி, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ போன்ற மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.

    புது டேப்லெட் பற்றி அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், புது டீசரின் படி ஒன்பிளஸ் பேட் டேப்லெட் ஸ்டைலஸ் வசதியுடன் அறிமுகமாகும் என்றும் இதில் மெல்லிய பெசல்கள் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் டேப்லெட் மாடல் கிரீன் நிற ஷேட், வளைந்த எட்ஜ் மற்றும் பட்டன் கொண்டிருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பேட் மாடலில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், மத்தியில் கேமரா, எல்இடி ஃபிளாஷ், வட்ட வடிவ கேமரா மாட்யுல், 13MP சென்சார், 5MP செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 25 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் நிர்ணயம் செய்யப்படலாம்.

    புதிய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்றும், 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 59 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 66 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலின் விலை ரூ. 35 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    • ஒன்பிளஸ் நிறுவனம் புது டெல்லியில் நடைபெற்ற கிளவுட் 11 நிகழ்வில் தனது முதல் டேப்லெட்-ஐ அறிமுகம் செய்தது.
    • புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் டால்வி விஷன் மற்றும் டால்பி ஆடியோ வசதிகளை கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் கிளவுட் 11 நிகழ்வில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் பேட் மாடலில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் 9000 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 9510 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஒன்பிளஸ் ஸ்டைலோ மற்றும் மேக்னடிக் கீபோர்டு சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கும் ஒன்பிளஸ் பேட் மாடலில் குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளது.

    ஒன்பிளஸ் பேட் அம்சங்கள்:

    11.6 இன்ச் 2800x2000 பிக்சல் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் 9000 பிராசஸர்

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

    5ஜி கனெக்டிவிட்டி

    குவாட் ஸ்பீக்கர்கள்

    டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்

    9510 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் ஹலோ கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் பேட் விலை விவரங்கள் இன்றைய நிகழ்வில் அறிவிக்கப்படவில்லை. ஒன்பிளஸ் பேட் மாடலின் முன்பதிவு ஏப்ரல் மாத வாக்கில் துவங்க இருக்கின்றன.

    • ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஹெச்டிசி டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    அலுவல் பணிகளை மேற்கொள்வது, படிப்படி என பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பலரும் டேப்லெட்களை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இந்த டிரெண்ட் காரணமாக டேப்லெட் சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில், ஹெச்டிசி A102 பெயரில் புதிய டேப்லெட் அறிமுகமாக இருக்கிறது.

    கூகுள் SMS சான்றளிக்கும் தளத்தில் புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஹெச்டிசி டேப்லெட் தற்போது டெஸ்டிங் கட்டத்தில் உள்ளது. மேலும் இது பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் மிட்-ரேன்ஜ் அல்லது பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

     

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹெச்டிசி A102 மாடலில் 4ஜி வைபை வசதி, 11.0 இன்ச் 2K டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், Arm கார்டெக்ஸ் A75 மற்றும் Arm கார்டெக்ஸ் A55 கோர்கள் முறையே 2GHz மற்றும் 1.8GHz இயங்குகின்றன. இத்துடன் 20MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் ஃபேஸ் டிடெக்ஷன் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் வசதி, ஆண்டராய்டு 12, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் 8000 எம்ஏஹெச் பேட்டரி, ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை வசதி, யுஎஸ்பி டைப் சி 3.0 போர்ட், OTG சப்போர்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு மற்றும் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு ஏற்ற பட்ஜெட் பிரிவில் புதிய டேப்லெட் வாங்க நினைப்போருக்கு ஏற்ற மாடலாக இது இருக்கும் என தெரிகிறது. புதிய ஹெச்டிசி A102 மாடல் முதற்கட்டமாக ஆப்ரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது.

    Photo Courtesy: Gizmochina

    • கூகுள் நிறுவனம் விரைவில் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • புதிய பிக்சல் டேப்லெட் கூகுள் நிறுவனத்தின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் தனது முதல் டேப்லெட் எப்படி இருக்கும் என்பதை கூகுள் 2022 IO நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போது கூகுள் தனது முதல் பிக்சல் டேப்லெட் 2023 வாக்கில் விற்பனைக்கு வரும் என அறிவித்து இருந்தது. எனினும், சரியான வெளியீட்டு தேதியை அப்போது கூகுள் நிறுவனம் அறிவிக்கவில்லை.

    சில நாட்களுக்கு முன் தான், கூகுள் நிறுவனம் 2023 கூகுள் IO நிகழ்வு மே 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் கூகுள் IO நிகழ்வில் கூகுள் தனது முதல் பிக்சல் டேப்லெட்-ஐ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

     

    ஒருவேளை கூகுள் IO நிகழ்வில் அறிவிக்கப்படவில்லை எனில், பிக்சல் டேப்லெட் வெளியீட்டு தேதி இதில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 கூகுள் IO நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடலில் கூகுள் டென்சார் சிப்செட் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 12L அல்லது ஆண்ட்ராய்டு 13L ஒஎஸ் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த ஆண்ட்ராய்டு ஒஎஸ் டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் டேப்லெட் மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் தடிமனான பெசல்கள், தவறுதலாக ஏற்படும் டச்களை தவிர்க்க செய்கிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரில் பிக்சல் டேப்லெட் கிரீன் நிறம் கொண்டிருக்கிறது.

    ×