என் மலர்
நீங்கள் தேடியது "அம்மன்"
- அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்:
கரூர், தளவா பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல, நாணப்பரப்பு, வேலாயுதம்பாளையம், கடம்பங்குறிச்சி, தோட்டக்குறிச்சி மண்மங்கலம் பகுதிகளில் ஆகிய உள்ள அம்மன் கோவில் களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது
- சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது
திருச்சி:
திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது.
சிவன் கோவில்களில் கார்த்திகை சோம வாரங்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.
இதனையொட்டி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தாண்டு கார்த்திகை முதல் சோமவாரமான நேற்று மாலை 7 மணியளவில் திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிவன் மற்றும் அகிலாண்டேஸ்வரிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக சங்காபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்டபத்தில் 1008 வலம்புரி சங்குகள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது.
அதன் மையத்தில் தங்கபிடிப்போட்ட வலம்புரி சங்கு வைக்கப்பட்டு அனைத்து சங்குகளிலும் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்டு பின்னர் அந்த சங்குகளில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கணபதி ஹோமம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் தங்கபிடிப்போட்ட சங்கில் உள்ள புனித நீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதே போல் மீதமுள்ள சங்கில் உள்ள புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு ஜெம்புகேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இந்த மாதத்தில் வரும் 4 சோமவாரத்திலும் சங்காபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
- கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ந் தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், 25-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று பொங்கல், மாவிளக்கு பூஜையும், அம்மன் திருத்தேரில் திருவீதி உலா பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று மாலை பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பகவதி அம்மனை வழிபட்டனர்.
- ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
- 29-ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்கை கொண்டு மாவிளக்கு பூஜையும் செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு வேல் எடுத்து சென்று புனித நீராடி, தீர்த்து குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர்.
பின்னர் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. 29-ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்கை கொண்டு மாவிளக்கு பூஜையும் செய்தனர். வானவேடிக்கை நடைபெற்றது. இரவு அம்மன் ஊர் விளையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்றுகாலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊஞ்சப்பாளையம் ஊர் தர்மகர்த்தா முன்னிலையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பரமத்தி வேலூர் தாலுகா கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில்திருவிழா கடந்த சனிக்கிழமை இரவு பூச்சாட்டு தலுடன் தொடங்கியது.
- அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில்திருவிழா கடந்த சனிக்கி
ழமை இரவு பூச்சாட்டு தலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சியும், நேற்று முன் தினம் மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் பகவதி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோயில் முன்பு தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், இரவு மாவிளக்கு களை ஊர்வலமாக கொண்டு சென்றும் அம்மனை வழிபட்டனர்.
நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாலை
மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடு களை கோவில் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி:
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி விழா கொண்டா டப்படுவது வழக்கம். அதேபோல மார்கழி மாதத்துக்கான பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
பின்னர் காலை ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்து டன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. மாலை சாயராட்சை தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, துளசி, தாமரை உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது.
இரவு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகா ரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்த நிகழ்ச்சி நடந் தது. அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அம ரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சி யும் அதைத்தொ டர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரா தனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வா கத்தினர் செய்திரு ந்தனர்.
- கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
- குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்தி திருவிழா நடத்தப்படுகிறது.
நாகர்கோவில்:
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்தி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தூக்கத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்ப டுகிறது. மாலை 3 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன் திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் எழுந்தருள்வார்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது, பின்னர் தூக்கத்திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச் சிக்கு கோவில் தலைவர் ராம சந்திரன் நாயர் தலைமை தாங்குகிறார். கேரள கவ ர்னர் ஆரிப் முகம்மது கான் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் ஹரிஹர சம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள் ஆன்மிக உரையாற்றுகிறார். கன்னியாகுமரி தொகுதி எம். பி. விஜய் வசந்த், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கிள்ளியூர் எம். எல். ஏ. ராஜேஷ்குமார், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நமஸ்காரம் 19-ந்தேதி காலையில் தூக்க நேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக் கிறது. அன்று இரவு 9மணிக்கு தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடைபெறும். 21-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் பண்பாட்டு மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கிவைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஜேக்கப், கேரள முன்னாள் சுகாதார துறை மந்திரி சிவகுமார், நடி கர் கரமனை சுதீர், நாகர்கோவில் இந்து கல்லூரி செயலாள ரும், தாளாளருமான நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
23-ந்தேதி காலை 7.30 மணி முதல் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. 24-ந் தேதி மாலையில் வண்டியோட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடக்கிறது.
தூக்க நேர்ச்சை 25-ந் தேதி சனிக்கிழமை அதிகாலையில் தூக்கக்காரர் களின் முட்டுகுத்தி நமஸ்கா ரம், அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைக ளுக்கு தூக்க நேர்ச்சை நிறை வேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்தி ரன் நாயர், செயலாளர் மோகன் குமார், இணை செய லாளர் பிஜூ குமார். துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் சீனி வாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
- தூக்க திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது
- இரு நேரம் கடலில் குளித்துவிட்டு நமஸ்காரம் செய்து விரதமிருந்து அம்மனை வணங்குவர்
கன்னியாகுமரி :
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் தூக்க வில்லில் ஏறும் தூக்ககாரர்களின் மருத்துவ பரிசோதனை நேற்று முடிவடைந்து சான்றிதழ் கொடுக்கப்பட்டன.
தேர்வு செய்யப்பட்ட தூக்ககாரர்கள் இன்று முதல் கோவில் வளாகத்திலேயே தங்கி இரு நேரம் கடலில் குளித்துவிட்டு நமஸ்காரம் செய்து விரதமிருந்து அம்மனை வணங்குவர்.
இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் பள்ளியுணர்தல், திருநடைதிறத்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷபூஜையும் 5.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 6.30க்கு சோபானசங்கீதம், 8 மணிக்கு பூஜை, 8.30 முதல் தூக்கநேர்ச்சையின் பெயர் பதிவு செய்துள்ளவர்களின் குலுக்கல் மற்றும் தூக்ககாரர்களின் காப்புகட்டு நடந்தது.
மாலை 6.30 மணிக்கு தீபாராதனை 9 மணிக்கு தூக்ககாரர்கள் குளித்துவிட்டு மூலஸ்தான ஆலயத்திற்கு சென்று வினாயகருக்கு தேங்காய் உடைத்துவிட்டு, அங்கிருந்து வெங்கஞ்சி ஆலயம் வந்து நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 9.30 மணிக்கு இரவு பூஜை, எழுந்தருளுதல், பின்னர் நடை அடைக்கப்படுகிறது.
- புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த செல்லமுத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது தினந்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.
சுமார் 1 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- சிம்மவாகனத்தில் வந்த ஆனந்தவல்லி அம்மனை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
- திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடை பெறும்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் விழாவில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட அரங்கில் ஆனந்தவல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பின் ரதவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. வைகைஆற்றில் திரண்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, முன் னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், தொழில் அதிபர் நடராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர் உள் ளிட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.
- மாரியம்மன் கோவில் பால்குட உற்சவ விழா நடந்தது.
- அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் பால்குட உற்சவ விழா நடந்தது. மூங்கில் ஊரணியில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து பால்குடங்கள் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் குண்டு முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
உற்சவ விழா, அம்மன், Festival, Amman
இதைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் (கல் தூண்களால்) அமைக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீ சக்கர பீடத்தைப் பூஜித்து, ஆதி சங்கரர் அன்னையின் அருள் பெற்றார் என்று கோவில் வரலாறு கூறுகின்றது.
காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் (கல் தூண்களால்) அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில், நாம் தரிசனம் செய்யக்கூடிய சந்நிதிகள் இருபத்துநான்கு. அவையாவன:
காயத்ரி மண்டபம்
காமகோடி காமாட்சி (கருவறையில்)
காமகோடி பீடமாகிய ஸ்ரீ சக்கரம் (கருவறையில்)
தபஸ் காமாட்சி
பிலாகாசம்
அரூப லக்ஷ்மி எனப்படும் அஞ்சன காமாட்சி
வராஹி
சந்தான ஸ்தம்பம்
அர்த்த நாரீஸ்வரர்
ரூப லக்ஷ்மியும், கள்ளர் பெருமாளும்
அன்னபூரணி
தர்ம சாஸ்தா
ஆதி சங்கரர்
துர்வாச முனிவர்
உற்சவ காமாட்சி
துண்டீர மகாராஜா
(அஷ்ட புஜ) மகா சரஸ்வதி
தர்ம ஸ்தம்பம்
காசி கால பைரவர்
துர்க்கை
காசி விஸ்வநாதர்
பஞ்ச கங்கை
பூத நிக்ரக பெருமாள்
அகஸ்தியரும், ஹயகிரீவரும்
மேற்கண்ட சந்நிதிகளுள், முக்கியமாகக் கருதப்படும் சில சந்நிதிகளைப்பற்றி விபரமாகப் பார்ப்போம்.
காயத்ரி மண்டபம்
காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் (கல் தூண்களால்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் மத்தியில்தான், காமாட்சி அம்மன் மூல விக்கிரகமாக அழகுற அமர்ந்திருக்கிறாள்.
காமகோடி காமாட்சி
மேற்படி காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அன்னை காமாட்சி அம்பாள் தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். அவளது திருக்கரங்களில், பாசம், அங்குசம், மலர் அம்பு (புஷ்ப பாணம்), கரும்பு வில் முதலிய ஆயுதங்களைத் தாங்கி இருக்கின்றாள். இங்கு, மூலமூர்த்தியாகிய அம்பிகையே ஸ்தூல வடிவத்தில், தன்னுடைய பக்தர்கள் தன்னைத் தரிசித்த மாத்திரத்திலேயே சகல வரங்களையும் தந்து அருள் புரிவதால், அன்னை காமகோடி காமாட்சி என்னும் திருநாமத்துடன் விளங்குகின்றாள்.
காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். அந்த சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர்.
அரூப லக்ஷ்மி என அழைக்கப்படும் அஞ்சன காமாட்சி
மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லக்ஷ்மியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.
(அழகே உருவான லக்ஷ்மி தேவி அரூப உருவம் கொண்டது ஏன்? இக் கேள்விக்குரிய பதிலாக, ஒரு சுவையான கதை நமது புராணங்களில் காணப்படுகின்றது. அந்தக் கதையைப் பின்னர் படியுங்கள்.)
காமகோடி பீடம் என அழைக்கப்படும் ஸ்ரீ சக்கரம்
அன்னை காமாட்சியின் காரண வடிவமான ஸ்ரீ சக்கரம், கருவறையினுள், மூலவரான காமாட்சி அம்பாளின் எதிரில் காட்சியளிக்கின்றது. (அதனால், இத் திருத்தலம் ஸ்ரீ சக்கர பீடத் தலம் என அழைக்கப்படுகின்றது). அன்னை காமாட்சியே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்குகின்றாள். வட்ட வடிவமான தொட்டி போன்று சக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லக்ஷ்மிகளின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஸ்ரீ சக்கர பீடத்தைப் பூஜித்து, ஆதி சங்கரர் அன்னையின் அருள் பெற்றார் என்று கோவில் வரலாறு கூறுகின்றது.
சந்தான ஸ்தம்பம்
காமாட்சி அன்னையின் இடது புறத்தில் உள்ள வராஹி தேவியின் எதிரில், சந்தான ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது அம்பாளின் அருள்வாக்கு.
அர்த்தநாரீஸ்வரர்
காயத்ரி மண்டபத்தில், தேவிக்கு வலது பக்கத்தில் தெற்குத் திசை நோக்கியவண்ணம் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி உள்ளது.
காசி விஸ்வநாதர்
காமாட்சி அன்னை ஆலயத்தின் மூன்றாவது பிரகாரத்தில், கிழக்குப் பக்கத்தில், கிழக்குத் திசையை நோக்கியவண்ணம் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.
மகிஷாசுரமர்த்தனி
காமாட்சி அன்னையின் ஆலயத்தில் மூன்றாவது பிரகாரத்தில், கீழ்க் கோபுரத்தின் உட்புறம், தேவியை நோக்கியவண்ணம், மகிஷாசுரமர்த்தனி தேவி நின்ற கோலத்தில் அருள் புரிகின்றாள்.
அன்னபூரணி
காமாட்சி அன்னையின் முதல் பிரகாரத்தில், காயத்ரி மண்டபத்துக்குச் செல்லும் வழியில் அன்னபூரணி அன்னையின் சந்நிதி கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ளது.
அழகே உருவான லக்ஷ்மி தேவி, காஞ்சிபுரத்தில் அரூப லக்ஷ்மியாக வடிவம் கொண்டது ஏன்? நமது புராணங்கள் கூறும் சுவையான கதையை இப்போது படியுங்கள்.
முன்னொரு காலத்தில், அமுதத்தை அடைவதற்காக, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து, பாற்கடலைக் கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்கள் ஒருபுறமாகவும், அசுரர்கள் மறு புறமாகவும் நின்று, பாம்பை இருபக்கமும் மாறி மாறி இழுத்து, பாற்கடலைக் கடைந்தார்கள். வலி தாங்க முடியாமல் வாசுகிப் பாம்பு விஷக் காற்றைக் கக்கியது. அந்த விஷக்காற்றின் தாக்கத்தால், மகாவிஷ்ணுவின் திரு மேனி (உடல்) கறுப்பாக மாறி விட்டது.
பாற்கடலை மேலும் கடைந்தபோது, அங்கே லக்ஷ்மி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்துகொண்டார். அப்போது, லக்ஷ்மி, மகாவிஷ்ணுவின் கறுத்த மேனியைப் பார்த்துப் பரிகாசம் செய்தாள். அவர் தன்னைவிட அழகில் குறைந்தவரே என்று கேலி செய்தாள்.(லக்ஷ்மி தேவி அழகிய பொன் நிற மேனியை உடையவள்.)
லக்ஷ்மியின் கர்வத்தை அடக்க விரும்பிய மகாவிஷ்ணு, "நீ கர்வம் கொண்டு என்னைப் பரிகாசம் செய்ததால், உன்னுடைய அழகு அரூபமாகப் போகக் கடவது" என்று சாபமிட்டார்.
மனம் வருந்தி அழுது, மன்னிப்புக் கோரிய லக்ஷ்மியிடம், "நீ காமகோட்டம் (காஞ்சிபுரம்) சென்று தவம் செய்" என்று கூறினார்.
அவ்வாறே, தாங்கமுடியாத மனவருத்தத்துடன், காமகோட்டம் வந்துசேர்ந்த லக்ஷ்மியை வாழ்த்தி வரவேற்ற அன்னை காமாட்சி, அவளுக்கு" அஞ்சன காமாட்சி" என்று பெயரிட்டு, தன இடது பக்கத்தில் அமர்ந்திருக்குமாறு இடம் கொடுத்தாள்.
மேலும், "என்னை வணங்க வரும் பக்தர்கள் பெறும் அர்ச்சனைக் குங்குமத்தை உன் திருவடிகளில் சமர்ப்பிக்கும்போது, அந்த அர்ச்சனைக் குங்குமத்தின் மகிமையெல்லாம் ஒன்றுசேர்ந்து, உன் உண்மையான வடிவத்தைப் பெறுவாயாக. மேலும், உன்னை உள்ளன்புடன் வணங்கும் பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்கி, அவர்களுக்கு நல்ல வாழ்வை வழங்குவாயாக" என்று கூறி அன்னை லக்ஷ்மி தேவிக்கு அருள் புரிந்தாள்.
அன்றுமுதல், மங்கள நாயகியாம் அன்னை காமாட்சியின் அருட்பார்வையாலும், குங்குமப் பிரசாத மகிமையாலும், இழந்த அழகையெல்லாம் மீண்டும் பெற்று, லக்ஷ்மி தேவி அழகுருக்கொண்டு விளங்கினாள்.
காமாட்சி அன்னையின் திருக்கோவிலில், அன்னை காமாட்சிக்கு நடைபெறும் மாசி மாதப் பிரமோத்சவம் மிகவும் விசேடமானது. இவ்விழாவின் இறுதிநாள் உதயம் விசுவரூப சேவை மிகவும் முக்கியத்துவமும், விசேடமும் உடையது.
தன்னை நாடி வரும் பக்தர்களின் இன்னல்களைப் போக்கி, இன்பத்தை நல்கும் மங்கள நாயகியாய், வேண்டுவார்க்கெல்லாம் வேண்டுவன நல்கும் அருள் வடிவினளாய் விளங்கும் அன்னை காமாட்சியின் பேரெழிலை வர்ணித்துப் போற்ற வார்த்தைகள் போதாது. அந்த அன்னையின் திருவடித் தாமரைகளைத் தினமும் வணங்கி, அவளது பேரருளைப் பெற்று, துன்பங்களையெல்லாம் அகற்றி, இனிய நல்வாழ்வைப் பெறுவோமாக.