என் மலர்
நீங்கள் தேடியது "மந்திரம்"
- யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை விமான கும்பத்தை அடைந்தனர்.
- வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ ஓம் சக்தி மா காளியம்மன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 9ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து மறுநாள் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக தினமான நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.
அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் விழா குழுவினர்கள் ரெத்தினசபாபதி சிவநேசன், தென்னரசு, சீனு, செந்தில், பழநிவேல், கலியமூர்த்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டது.
- கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கும்பகோணம்:
108 வைணவ தலங்களில் 3-வது தலமாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களான தினமும் சாமி விதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.
- கடம் புறப்பாடு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.
- கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது.
1951-ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமான இக்கோயிலில் கடைசியாக 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி நிறைவுற்றது. இதையடுத்து, புதன்கிழமை காலை விக்னேஸவர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
கும்பாபிஷேக தினமான நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.
விக்னேஷ் சிவாச்–சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் கருவறையில் உள்ள கார்கோடகநாதர் சிவலிங்கதிற்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் ஆலய அர்ச்சகர் கனேச சிவம் குருக்கள், ஐ.ஏ.எஸ். ஜெயந்தி ரவி, ராமமூர்த்தி ஐயர், சுந்தரேசர் ஐயர், ஆகியோர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஊராட்சி மன்ற தலைவர், கவிஞர் ராதா கிருஷ்ணன், தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் முத்துகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.
- குலதெய்வத்தின் அருள் இருந்தால் எந்த பிரச்சனைகளும் நம்மை அண்டாது.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
'ஓம் பவாய நம,
ஓம் சர்வாய நம,
ஓம் ருத்ராய நம,
ஓம் பசுபதே நம,
ஓம் உக்ராய நம,
ஓம் மஹாதேவாய நம,
ஓம் பீமாய நம,
ஓம் ஈசாய நம'
என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.
- இந்த மந்திரத்தை தினமும் 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
- கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள்.
கணவன் - மனைவி ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம். ராமர் - சீதையை சேர்த்து வைத்தது போல் பிரிந்திருக்கும் கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள். கீழே உள்ள மந்திரத்தை தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை எத்தனை முறை முடியும் அத்தனை முறை சொல்வதால் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும்
ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாபீய சாதராத்
புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்
பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா
புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்
ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ
க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந், புபுஜே ப்ரியயாஸஹ
இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் 7 பேருக்கு சுந்தரகாண்ட புத்தகத்தை வாங்கி கொடுக்கவும்
- ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
- 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர் கொள்ளக்கூடியவர்கள் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும். ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
மேஷம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
ரிஷபம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மிதுனம் :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கடகம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
சிம்மம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கன்னி :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
துலாம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
விருச்சிகம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
தனுசு :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மகரம் :
தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கும்பம் :
தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மீனம் :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
- வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி.
- கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.
சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வராஹி புராணம். வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.
வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. வராஹியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வீட்டில் விளக்கேற்றி வராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
வராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வராஹி கன்யகாயை நம:
எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வராஹி தேவ்யை நம:
க்லீம் வராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,
லூம் வராஹி லூம் உன்மத்த பைரவீம்
பாதுகாப்பாம். ஸ்வாஹா
எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.
வராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும். வராஹி தேவியை போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள்.
- ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு.
மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த காசை சிறுக சிறுக சேமித்து வைத்து, அதிலிருந்து சிறு தொகையை எடுத்து ஒரு பொருளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அதையும் அடகு வைக்கும் நிலைமை வரும் பொழுது நமது மனதிற்குள் ஏற்படும் மனக் குமுறல்களை சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற பெண்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறார்கள்.
நகையை அடகு வைப்பதாக இருந்தால் அதற்கான சரியான காரணம் இருந்தால் மட்டுமே அடகு வைக்க வேண்டும். ஏனென்றால் ஜோதிடத்தின் படி பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு. இவர்களுடைய ஸ்தானம் ஜாதகத்தில் பாதகமாக இருந்தது என்றால் அந்த நேரத்தில் நகையை அடகு வைக்க வேண்டிய நிலைமை உண்டாகும். இவற்றை அறிந்து கொள்ள நம்மை நாமே சற்று கவனமாக சிந்திக்க வேண்டும். அதிகமாகக் கோபப்படுவது, குழப்பம் அடைவது, அதிக ஆசை கொள்வது, வருகின்ற கோபம் உச்சத்தை அடைவது இவ்வாறான வெளிப்பாடுகள் இருந்தது என்றால் அது நமது ஜாதகத்தில் சரியான நிலைமை இல்லை என்பதை தெரிந்து கொள்வதாக அமைகிறது.
ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலாவதாக ராகு திசை நடக்கிற பொழுது நகையை வைத்து ஏதேனும் தொழிலில் முதலீடு செலுத்துவதாக இருந்தால் அந்தப் பணம் விரையம் தான் ஆகும். இரண்டாவதாக குரு திசை நடக்கின்ற பொழுது அடகு வைக்கின்ற நகை நூற்றுக்கு 70 சதவிகிதம் மறுபடியும் நமது கைக்கு வராமல் போய்விடும்.
அவ்வாறு நூற்றுக்கு 70 சதவீதம் சுக்ர திசை நடப்பவர்களுக்கும், நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் கேது திசை நடப்பவர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு நகை ஒரு முறை அடகிற்க்கு சென்று விட்டது என்றால் அது மீண்டும் மீண்டும் அடகு வைக்க சென்றுகொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக நகையைக் முதன் முதலில் வாங்கி அணிகின்ற பொழுது ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லி அணிய வேண்டும்.
மந்திரம்
"ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி
வசம் வசம் வசம் வா ஸ்ரீம் மம
தநூகரன புவாய நமோ நம".
அதேபோல் நகையை அடகு வைத்தவர்கள் இந்த மந்திரத்தைதினமும் சொல்லி வந்தால் விரைவில் அடகு வைத்த நகையை மீட்டெடுக்கலாம்.
- தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.
- தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம்.
வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நாள். விரதம் இருந்து சக்தியை வணங்க வேண்டிய அற்புதமான நாள். அதனால்தான் வெள்ளிக்கிழமையை, மங்கலகரமான செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு அம்பிகையைக் கொண்டாடுகிறோம்.
வெள்ளிக்கிழமை என்றில்லாமல், தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.
வீட்டில் விளக்கேற்றுங்கள். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் சூட்டி அலங்காரம் செய்யுங்கள்.
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏய்யேஹி
ஏய்யேஹி சர்வ
ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.
இதேபோல்,
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம;
என்கிற மந்திரத்தைச் சொல்லுங்கள்.
அம்பாள் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். கோலமிடுங்கள். நெய் தீபமேற்றுங்கள்.
அம்பாள் படத்துக்கு முன்னே, கண்கள் மூடி அமர்ந்து, இந்த மந்திரங்களைச் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம். 108 முறையும் சொல்லலாம். அப்போது குங்குமம் கொண்டும் அர்ச்சிக்கலாம். இன்னும் விசேஷம். மாங்கல்ய பலம் கிடைக்கப் பெறுவீர்கள்.
- வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும்.
- அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
சிலரது வாழ்வில்பலவிதமான எதிர்பாராத துன்பதுயரங்கள்வாட்டி வதைக்கும். அது போன்ற சமயங்களில் நம்முடைய வாழ்வை காப்பாற்ற ஒரு மஹா சக்தியின் அனுக்கிரகமே நம்முடைய முக்கிய தேவையாகும். அது போன்ற சமயங்களில் நம்மை காப்பாற்ற கூடிய சக்திகளில் நரசிம்மரின் சக்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது. கீழ்கண்ட மந்திரத்தை சொன்னால் நல்லதே நடக்கும்.
ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச
முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும் நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.
வராத நல் வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும்.அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
- அருணகிரி நாதரின் இந்த இரண்டு பாடல்களை நாள்தோறும் பாராயணம் செய்யுங்கள்
- அருணகிரிநாதரின் அந்தப் பாடல்கள்:-
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது; அவர் தினந்தோறும் பூஜையில் சொன்னது; "அருணகிரி நாதரின் இந்த இரண்டு பாடல்களை நாள்தோறும் பாராயணம் செய்யுங்கள்! மன சஞ்சலம் தீரும்! அமைதியை அருள்வார் ஆறுமுகன்" என்பார். அருணகிரிநாதரின் அந்தப் பாடல்கள்:-
1)எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ!
சிந்தாகுலம் ஆனவை தீர்த்தெனையாள்!
கந்தா! கதிர் வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறை நாயகனே! (கந்தர் அனுபூதி)
2)அதிருங்கழல் பணிந்துன் அடியேனும்
அபயம் புகுவதென்று நிலை காண
இதயந் தனிலிருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!
எதிரங்கொருவர் இன்றி நடமாடும்
இறைவன் தனது பங்கின் உமை பாலா!
பதியெங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே - திருப்புகழ்
(இதயந்தனில் இருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே-என்று நிறைவு செய்யவும்)
- பூச்சந்தை சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
- தமிழ் அர்ச்சகர்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தெய்வ தமிழ்ப் பேரவை நகர அமைப்பாளர் பழ.ராசேந்திரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் பூக்கார தெரு பூச்சந்தை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ளது.
இந்த குடமுழுக்கின் போது நிகழும் வேள்விச்சாலை, கருவறை, கோபுரகலசம் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும்.
வேள்விசாலை, கோபுர கலசம் ஆகிய இடங்களில் சமஸ்கிருத அர்ச்சகர் எண்ணிக்கைக்கு இணையாக தமிழ் அர்ச்சகர்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும். எனவே குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்து உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.