என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 110640
நீங்கள் தேடியது "பயணிகள்"
சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் ரெயில் மீண்டும் இயக்கியதற்கு வணிகர் சங்கத்தினர் பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சேலத்திலிருந்து விருதாசலத்திற்கு 2 பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தன.கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.
இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் வணிகர் சங்க தலைவர் ரவிசங்கர் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ரெயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
வணிகர் சங்கத் தலைவர் ரவிசங்கர் கூறும்போது, சேலம்- விருத்தாச்சலம் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் கோயம்புத்தூரில் இருந்து ஆத்தூர் வழியாக எழும்பூருக்கு பகல் நேரம் சென்னை செல்ல புதிய ரெயில் ஒன்றை இயக்க வேண்டும். பெங்களூர் காரைக்கால் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.
நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும். நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும் பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது 2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.
எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.
பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.
இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X