என் மலர்
நீங்கள் தேடியது "tag 111022"
பிரதமர் மோடி நடிகர் அக்ஷய் குமாருக்கு மனம் திறந்த பேட்டி அளித்தார்.
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், “அனைவருக்கும் யதார்த்தம் தெரிகிறபோது, எந்த நடிப்பும் உதவாது. மக்களை ஏமாற்ற முடியாது என்பதை காவலாளி உணர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் திரைப்பட துறையில் மாற்று வேலை வாய்ப்பை நாடுவதுபோல தெரிகிறது. அக்ஷய் குமார் சிறந்த நடிகர். நம் அனைவருக்கும் அவரை பிடிக்கும். தோற்றுப்போன அரசியல்வாதி, அக்ஷய் குமாரை விட சிறந்த நடிகர் ஆக முயற்சிக்கிறார்” என கூறினார். #RahulGandhi #PMModi #AkshayKumar
ரபேல் ஒப்பந்த முறைகேட்டில் காவலாளியே திருடன் என சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக்கொண்டுள்ளது என்று கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தனது வருத்தத்தை தெரிவித்தார். இனி எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தில் கோர்ட்டு உத்தரவை குறிப்பிடமாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதே நாளில் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில், “மே 23-ந் தேதி தாமரை ‘பிராண்டு’ காவலாளி (பிரதமர் மோடி) தான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு முடிவு செய்யும். நீதி நிலைநிறுத்தப்படும். ஏழைகளின் பணத்தை திருடி தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியவர் தண்டனையை சந்திப்பார்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி நேர்மையானவராக இருந்தால், ரபேல் ஒப்பந்தத்தில் அவர் ஒன்றும் செய்யவில்லை என்றால் அவர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க பயப்படத் தேவையில்லை. அவர் என்னுடன் 15 நிமிடம் மட்டும் அவர் முடிவு செய்யும் இடத்திலேயே நேருக்கு நேர் விவாதிக்கட்டும். பின்னர் நாட்டு மக்கள் காவலாளியின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்வார்கள்.
இந்த பிரச்சினை குறித்து வேறு எதுவும் நான் கூற விரும்பவில்லை. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) உங்கள் மனதில் இருப்பதை சொன்னால், பிரதமர் உங்களை அடிப்பார். நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த தேர்தலில் மோடி வெளியே சென்றுவிடுவார். நாங்கள் வந்ததும் நீங்கள் விரும்புவதை எழுதலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அமேதி, ரேபரேலி உள்பட உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூட்டத்தினரை பார்த்து, 2014-ம் ஆண்டு ‘நல்ல நாள் வரும்’ என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் பிரசாரம் காவலாளி என்று கூறினார். உடனே கூட்டத்தினர், திருடன் என குரல் எழுப்பினர். தொடர்ந்து, அமேதியில் 150 தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், இங்கிருந்து வெளியேற்றப்பட்ட உணவு பூங்கா மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் ராகுல் காந்தி கூறினார். #RahulGandhi #Modi #Chor #LokSabhaElection2019
சென்னை:
ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து நானும் காவலாளி தான் என்ற ஒரு பிரசாரத்தை பா.ஜ.க.வினர் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் டுவிட்டரில் சவுக்கிதார் (காவலாளி) நரேந்திர மோடி என பெயரை மாற்றி உள்ளார். அமித்ஷா, அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் தங்களது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றி உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி.க்கு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சவுக்கிதார் என்ற பெயர் மாற்றத்தை கட்சியினர் செய்து வர நீங்கள் மட்டும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சுப்பிரமணியசாமி சர்ச்சையான பதிலை அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் காவலாளி ஆக முடியாது. பிராமணர்கள் காவலாளிகளாக முடியாது.
இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே காவலாளிகளின் பணியாகும். இதைதான் சவுக்கிதார்களிடம் எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதனால் நான் காவலாளியாக முடியாது.
இவ்வாறு அவர் சர்ச்சையாக கூறியுள்ளார். #SubramanianSwamy #BJP
வடமதுரை:
வடமதுரை அருகே நாடுகண்டனூர் பிரிவு பகுதியில் பண்ணாரி அம்மன் மில் உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு மில்லில் இருந்து சுவர் ஏறி குதித்து 2 இளம்பெண்கள் தப்பி ஓடினர். காவலாளி அவர்களை பிடிக்க முயன்றும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று மறைந்தனர்.
விசாரணையில் தப்பி ஓடியது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த பிச்சை முத்து மகள் சந்தியா (வயது 28), முத்துப்பாண்டி மகள் சரண்யா (18) என தெரிய வந்தது. இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய இளம்பெண்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இளம்பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
வறுமை காரணமாக குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் இங்கு பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள், 8 மணி நேர வேலை உள்ளிட்டவைகள் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குறியே. மேலும் வேலை செய்யும் இடத்தில் இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பிரச்சினையில் வடமாநில வாலிபர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இதனைத் தொடர்ந்து மில் வளாக விடுதியிலேயே ஒரு பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மர்மமான முறையில் இறந்தார்.
தொடர்ந்து இது போன்ற சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மில் வேலைக்கு செல்லும் இளம்பெண்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வறுமை காரணமாக வேறு வழி இல்லாமல் அவர்கள் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இருந்தபோதும் வேலைப்பளு மற்றும் பாலியல் தொல்லை காரணமாக அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் இப்பகுதி மில்களில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள மேல அரசூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 29). இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலையில் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 பேர் தியேட்டரின் கேட்டை திறந்து உள்ளே வர முயன்றனர்.
அவர்களை காவலாளி பார்த்திபன் தடுத்துள்ளார். அப்போது அவரை அந்த நபர்கள் குடி போதையில் அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து பார்த்திபன் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர். #tamilnews
விழுப்புரம் சிக்னல் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவரச சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் பல பிரிவுகள் உள்ளன.
இந்த ஆஸ்பத்திரிக்கு விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியின் காவலாளியாக ராஜா (வயது 35). என்பவர் நேற்று இரவு இருந்தார்.
இரவு 11 மணியளவில் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்ற வாலிபர் குடிபோதையில் ஆஸ்பத்திரியின் கேட்டில் நின்று கொண்டு காவலாளியிடம் கதவை திறக்கும்படி கூறினார். ஆனால் ராஜா கதவை திறக்காமல் இருந்தார்.
அப்போது ஆத்திரம் ராமச்சந்திரன் கேட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே புகுந்தார். பின்பு பிரசவ வார்டு அருகே சென்ற அவர் அங்கு இருந்த கதவை உடைத்து ரகளை செய்தார். அப்போது அந்த அறையில் இருந்த நர்சுகள் கிரேசி, வசந்தி, மலர்விழி மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அந்த வாலிபரிடம் ஏன் இங்கு வந்து ரகளை செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டனர். அவர்களையும் ராமச் சந்திரன் ஆபாசமாக பேசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு இருந்த நர்சுகள் அலறிஅடித்துக்கொண்டு ஆஸ்பத்திரி அருகில் இருந்த புறக்காவல் நிலையத்திற்கு சென்று புகார் கூறினர். இதை அறிந்ததும் ராமச்சந்திரன் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்பு அவர் சிறிது நேரம் கழித்து தனது அண்ணன் இளையபெருமாள் (29), உறவினர் ஸ்ரீகாந்த் (32) ஆகியோருடன் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்பு அவர்கள் அங்கிருந்த காவலாளி ராஜாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காவலாளி ராஜா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்று காலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணிக்கு வழக்கம் போல் வந்தனர். ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வாலிபர் காவலாளியை தாக்கி விட்டு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் திடீரென்று பணி செய்யாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 டாக்டர்கள், 18 நர்சுகள், 30 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரிக்குள் வாலிபர்கள் புகுந்து அடிக்கடி ரகளை செய்வதை தடுக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், பட்டாபிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் சாந்தி கூறினார். அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர்.
அதனைதொடர்ந்து போராட்டம் நடத்திய டாக்டர்கள், நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் பெரும் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளி ராஜாவை தாக்கிய ராமச்சந்திரன், இளையபெருமாள், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்குதலில் காயம் அடைந்த காவலாளி ராஜாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கிய சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, தான் பிரதமர் ஆக விரும்பவில்லை, நாட்டின் காவலாளியாக இருக்கவே விரும்புவதாக கூறினார். ஆனால், காவலாளி ஒரு திருடன் என்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்.

அந்த அளவுக்கு ‘ரபேல்’ விமான பேரத்தில் இந்த அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப்பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையாவை தப்ப விட்டுள்ளது.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கை என்ற பெயரில், மோடி சாதாரண மக்களை வங்கி முன்பு வரிசையில் நிற்க வைத்தார். 15 தொழில் அதிபர்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். அவரால் விவசாயிகள் கடனை ரத்து செய்ய முடியாதா? இவ்வாறு அவர் பேசினார். #RahulGandhi #Modi #CountryWatchman
வாலாஜா:
ராணிப்பேட்டை டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்புக்கு நடுவில் வனச்சரக அலுவலகம் உள்ளது. வனச்சரக அலுவலகம் எதிரில் கோர்ட்டும் உள்ளது. வனச்சரகராக இருந்த விஜய், கடந்த 7-ந் தேதி பணியிடமாற்றப்பட்டார்.
தற்போது, கந்தசாமி என்பவர் வனச்சரக அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். விஜய் வனச்சரகராக இருந்த போது 3 மாதத்திற்கு முன்பு வாலாஜா ஜே.ஜே. நகரில் 750 கிலோ எடை கொண்ட 17 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தார்.
இந்த செம்மரக்கட்டைகள் வனச்சரக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு நேர காவலாளியாக, கத்தாரி குப்பம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சம்பத் என்பவர் (வயது 59) உள்ளார்.
நேற்றிரவு சம்பத் வழக்கம் போல் காவல் பணியில் இருந்தார். நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் அயர்ந்து தூங்கிவிட்டார்.
அப்போது, 4 பேர் கும்பல் வந்தனர். காவலாளியை கை, கால்களை கட்டி தூக்கி கொண்டு சென்று வனச்சரக அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் உள்ளே தள்ளி பூட்டினர்.

வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்திய காட்சி.
பிறகு, வனச்சரக அலுவலக வளாகத்தில் இருந்த 17 செம்மரக் கட்டைகளில் ½ டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை தங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றி கொண்டு தப்பிச் சென்றனர். கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் வனச்சரக அறையில் இருந்து காவலாளி அலறிய சத்தம் கேட்டு, போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் சென்று பார்த்தார்.
அப்போது அறையில் கை, கால்கள் கட்டிய நிலையில் கிடந்த காவலாளியை கட்டை அவிழ்த்து மீட்டார். தகவல் அறிந்த டிஎஸ்.பி. கலைச் செல்வம் மற்றும் வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வனச்சரக அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்.
மாவட்ட உதவி வன பாதுகாவலர்கள் பால சுப்பிரமணியம், சரவணன் ஆகியோரும் விரைந்து வந்து கடத்தல் சம்பவம் குறித்து காவலாளியிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கடத்தல் கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #semmaram