என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 115469"

    குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குமாரபாளையம் செந்தூர் பவுண்டேசன் ஆகியவை  சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் இயக்குனர் கலாவதி தலைமையில் நடந்தது. 

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலர் விஜய்கார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் பங்கேற்று இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். பெண்களுக்கான சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில்கள் கூறினார்கள். 

    இதில் விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சாலைகளில் விபத்து இல்லாமல் நாம் எப்படி பயணம் செல்லலாம் எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய  உதவிக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பரிசும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. இதில் இணை செயலர் மணிகண்டன், விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    திருப்பூர் வடக்கு தொகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை 5,83,659 ஆகும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாகவே இருந்தது. மக்கள் தொகை எண்ணிக்கையில் வாக்காளர் எண்ணிக்கை என்பது சராசரியாக 71 முதல் 72 சதவீதம் என்பது தேர்தல் கமிஷனின் கணக்கீடு.

    கடந்த 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இது 75.12 சதவீதம் என்ற அளவில் இருந்தது.பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்வதில் நிலவிய சிக்கல்கள் காரணமாக பல தொகுதிகளிலும் இந்த கணக்கீட்டுக்கு ஏற்ப ஓட்டுப் பதிவு சதவீதம் இல்லை.

    பல தொகுதிகளில் இந்த கணக்கீடு 80 சதவீதத்துக்கு மேல் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளிலும், 65 சதவீதத்துக்கு குறைவாக ஓட்டுப் பதிவான தொகுதிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது

    மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கும் மேல் வாக்காளர்கள் உள்ள 39 சட்டசபை தொகுதிகள், 65 சதவீதத்துக்கும் குறைவாக ஓட்டுப்பதிவு நடந்த 31 தொகுதிகளில் உரிய கலெக்டர் வாயிலாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை 5,83,659 ஆகும். இதில் வாக்காளர் எண்ணிக்கை 3,79,113. இதில் ஓட்டுப்பதிவு 62.44 சதவீதம். அதே போல் திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் தொகை 4,50,490. இதில் வாக்காளர் எண்ணிக்கை 2,76,473. ஓட்டுப் பதிவு 62.75 சதவீதம்.

    வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், அடையாள அட்டை பெறுதல், உரிய வாக்காளர் பெயர் நீக்கம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    நாமக்கல்லில் உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

    இப்போட்டியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் மற்றும் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் திரளாக பங்கேற்றனர். 

    இந்த மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
    திடக்கழிவு விழிப்புணர்வு பேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார்.
    மானாமதுரை

    சிவகங்கை  மாவட்டம்  மானாமதுரை  சட்டமன்ற  தொகுதியில் உள்ள இளை யான்குடி  பேரூராட்சியில்  உள்ள தெருக்களில் வீடு, வீடாக திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்க  குடியிருப்பு தாரர்களுக்கு   விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

    பேரூராட்சிதலைவர் செய்யதுஜமிமா தலைமை யில் மன்ற  உறுப்பினர்கள்,  செயல் அலுவலர் கோபிநாத்  மற்றும் சுகாதர  ஆய்வாளர்  அலுவலக பணியாளர்கள்   ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு   பரிசுகள் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.  மேலும் பிளாஸ்டிக்கை ஒழித்து  முதல்வரின் மஞ்சப்பை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து  வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர முயற்சி செய்வோம் என்று விழிப்புணர்வு பிரசாரம்  செய்யப்பட்டது.

    தொடர்ந்து மக்களி டையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்தி  பிளாஸ்டிக்கை ஒழித்து மண்வளத்தை  பாதுகாக்க வேண்டும் எனபேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார். 
    தாரமங்கலத்தில் நகராட்சி தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் நகரத்தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு கூட்டமும், அதனை தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகரை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது,  தூய்மை பணிக்காக நேரம் ஒதுக்குவது, பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது, குப்பையை வீட்டிலேயே தரம் பிரித்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. 

    பின்னர் பதாகை ஏந்தி விழிப்புணர் ஊர்வலம் நடத்தப்பட்டு பேரூந்துநிலையம் மற்றும் அதனை சுற்றிய பொது இடங்களை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர் .இந்தநிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    சீர்காழி நகராட்சியில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராஜசேகரன், முபாரக்அலி, ரம்யா, ஜெயந்தி, வள்ளி, ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செ ல்வம் பங்கேற்று தூய்மைபணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு கடையாக நெகிழி ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மஞ்சல் பைகளை எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார்.

    கைவிளா ஞ்சேரி பிரதானசாலை முதல் கச்சேரி சாலை வரையில் ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுசேகரி க்கும் பணி, நீர்நிலைகளை சீரமைக்கும் பணி,பிளா ஸ்டிக் நெகிழிபொரு ட்கள் தனியே சேகரித்து பொதும க்களுக்குவிழிப்பு ணர்வு ஏற்படுத்துவதுஆகிய பணிகளை தூய்மைப்பணி முகாமில் சுமார் 90 க்கும்மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்று மேற்கொ ண்டனர்.

    இதில் நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், திமுக ஒன்றிய பொறுப்பா ளர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் விஜேயே ஸ்வரன், பந்தல். முத்து, ஜெ.கே.செந்தில், இரா.தனராஜ், பாரூக், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பேளூர் பேரூராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்   நடைபெற்றது. 

    இந்த முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி  பேளூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி  தொடங்கி வைத்தார். 

    துணைத் தலைவர் பேபி, செயல் அலுவலர் ராமு மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிர தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தினர்.
    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • குழந்தை திருமண தடுப்பு சட்டம், குற்றம் செய்பவர்களுக்கான தண்டனைகள், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சி, திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

    ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, தலைமையாசிரியர் பாலு, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்எஸ்ஐ. முருகவேல், குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், மாவட்ட குழந்தைகள் அலகு உறுப்பினர் வெங்கடாஜலபதி, சைல்டுலைன் பணியாளர் செந்தில்குமார் ஆகியோர் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், குற்றம் செய்பவர்களுக்கான தண்டனைகள், குழந்தைத் திருமணம் குறித்து தகவல் அளிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    இதில் கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரவிச்சந்திரன், சேது முருகானந்தம்,ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியராஜ் செயலர் புவனேஸ்வரன் ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், அங்கன்வாடி ஆசிரியைகள், மகளிர் குழு பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச லெவல் கிராசிங் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச லெவல் கிராசிங் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் சேலம், நாமக்கல், கரூர் மற்றும் சேலம்- விருத்தாசலம், ஈரோடு- திருச்சி உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ள லெவல் கிராசிங் பகுதிகளில் மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி பாதுகாப்பாக செல்வது குறித்து பிரசாரங்களை செய்யும்.

    மேலும் வாகனத்தில் லெவல் கிராசிங் பகுதிகளில் வாகனங்கள் பாதுகாப்பாக எவ்வாறு செல்ல வேண்டும் என்பதைக் குறித்த பாடல்களும் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படும், இந்த வாகனம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது சேலம் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி பிரவீன்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்,

    நடைபெற உள்ள தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான அழைப்பிதழ் தயார் நிலையில் உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவையாகும். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,86,397 வாக்காளர்கள் வாக்களிக்க 332 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,60,294 வாக்காளர்கள் வாக்களிக்க 320 வாக்குச்சாவடி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அந்தந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கடும் வெயிலிலும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சாந்தா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி திருமண அழைப்பிதழ் போன்று அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் அது வாக்காளர்களிடம் வழங்குவதற்கு தயார் நிலையிலும் உள்ளன. அந்த அழைப்பிதழில் கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் என்கிற தலைப்பில் அன்புடையீர், நிகழும் மங்களகரமான ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை 5-ந் தேதி 18-04-2019 வியாழக்கிழமை சதுர்த்தி திதியும், ஹஸ்தம் நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் தங்கள் அருகாமையில் உள்ள வாக்கு சாவடியில் நடைபெறுவதால் 18 வயது நிரம்பிய, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது குடும்பத்தின் 100 சதவீதம் வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கின்றோம் என்றும், அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். வைபவம் பற்றிய மேல்விவரங்களுக்கு எண் 1950-ஐ தொடர்பு கொள்ளவும் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் வாக்காளர்களின் பெயர் எழுதி, அவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    அரியலூர்:

    பாராளுமன்ற தேர்தல் 2019-ஐ முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராமங்கள் தோறும் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் தேர்தல் தொடர்பான குறும்படங்கள், திரையிடப்பட்டு வருகிறது. மேலும், துண்டு பிரசுரங்கள். ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாட்டுப்புற கலைக்குழுவினர் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்தும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் எந்திரம் மூலம் செயல் விளக்கம் காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிக்குழுவின் செயலாளருமான சரவணன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜம்முவில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் மாரத்தானில் சுமார் 2000 குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். #JKChildrenMarathon
    ஸ்ரீநகர்:

    ஜம்மு மாவட்டத்தில்  பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடத்தப்பட உள்ளது. ஜம்மு பல்கலைக்கழகத்தில் வரும் 24-ம் தேதி இந்த மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

    இது குறித்து ஜம்மு காஷ்மீரின்  இளைஞர் சேவை மற்றும் விளையாட்டுத் துறை கமிஷனர் சர்மத் ஹஃபீஸ் கூறியிருப்பதாவது:

    இந்த மாரத்தானில் எங்கள் குட்டி நட்சத்திரங்கள் பங்கேற்று, ஜம்மு பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் ஓடுவார்கள். குழந்தைகள் வளரும்போது சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டுத் துறையில் பல்வேறு விளையாட்டுகளில் குழந்தைகள் பங்கு கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே இந்த மாரத்தானின் முக்கிய நோக்கம் ஆகும்.

    மேலும் இந்த மாரத்தானில், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் ஜம்மு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுமார் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #JKChildrenMarathon
    ×