என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "அ.தி.மு.க."
- தி.மு.க. முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை.
மதுரை:
மதுரை மாவட்டம் பரவையில் பக்தர்களுக்கு நிழற்குடை அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பூமி பூஜை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச் செயலாளர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அவர் மேற்கொள்வார். அவர் வழியில் நாங்கள் பணியாற்றுவோம்.
இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன், என் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன். என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலியுங்கள் என கூறி அனைவருக்கும் அன்பு தின காதலர் தின வாழ்த்துக்கள்.
வழக்கில் இருக்கும் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பா? ஜாமீன் மனுவில் வந்தவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து என்ன பயன்? செந்தில் பாலாஜியிடம் சுப்ரீம் கோர்ட் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றது.
தி.மு.க. முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தூக்கிவிட்டு இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்.
ஜாமீன் வாங்கி இருக்கும் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு கட்சி பணியை பார்க்க சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரை, கலைஞர் பேசாத முதலமைச்சர் என்று கூறினார். ஆனால் ஒரே இரவில் 10 அமைச்சர்களை மாற்றியவர் எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க.வில் பிளவுகள் இல்லை. விஜய் ஒரு பிரபலமான நடிகர். மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சி என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். தி.மு.க. ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்பதால் நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்த சூழ்ச்சியாலும் அ.தி.மு.க. சின்னத்தை முடக்க முடியாது.
- தி.மு.க., அ.தி.மு.க.வின் பலத்தை குலைக்க சதி செய்து வருகிறது.
சென்னை:
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்களின் ஒருவரான செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். மறைவின்போது, ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து அவருடன் பணியாற்றிய முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர். செங்கோட்டையன் கட்சியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர்.
அ.தி.மு.க.வில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட போதும் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பணியாற்றிய அவர், எந்த நேரத்திலும் அ.தி.மு.க. இயக்கத்திற்காக கடைசி வரையில் நிச்சயமாக உறுதுணையாக இருப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா கொடுத்த அதே மரியாதையை எடப்பாடி பழனிசாமியும் கொடுத்து வருகிறார்.
ஓ.பி.எஸ் நிபந்தனை இன்றி அ.தி.மு.க.வில் இணைய தயார் என்று கூறும் அதே நேரத்தில் மற்றொருபுறம் இரட்டை இலை சின்னத்தை கேவிட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார். இதில் என்ன இரட்டை மனநிலை இரட்டை நாக்கு என காட்டமாக கூறினார்.
மேலும் நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு விசாரிக்கலாம் என்பதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற, மாநிலங்கள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியினுடைய அதிகாரமிக்க பொதுக் குழு உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் அ.தி.மு.க. சின்னம் குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை.
தேவையற்று சிலர் அவுளை மெல்லுவது போல் பேசக் கூடாது என்பதற்காக தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல் செய்தோம்.
மேலும் எந்த சூழ்ச்சியாலும் அ.தி.மு.க. சின்னத்தை முடக்க முடியாது என்றும் கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி சட்ட முறைப்படி வெல்லுவார்.
தி.மு.க. ஏதாவது ஒரு வகையில் அ.தி.மு.க.வின் பலத்தை குறைக்கவும் ஒற்றுமையை குலைக்க சதி செய்து வருகின்றனர்.
இதேபோல் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதால் கூட்டம் அதிகமாக சேரும் என்பதால் மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது என்பது முழுக்க முழுக்க அவரது பாதுகாப்புக்காக என்றால் அதில் எந்த கருத்தும் இல்லை, சந்தோசம். ஆனால் மாறாக சுயநலமாக பா.ஜ.க. அரசு அவரை தன் வசம் இழுத்துக் கொள்ளு மேயா னால் அது குறித்த கருத்துக் களை பா.ஜ.க.வின் வரலாற்றை திரும்பி பார்த்தால் உங்களுக்கு தெரியும்.
எந்த ஒரு மாற்று அரசியல் கட்சி தலைவர்களின் கருத் துக்களை பெற்று கட்சியை வழிநடத்தக் கூடிய இடத்தில் அ.தி.மு.க. இல்லை. அ.தி.மு.க. கட்சி விவகாரம் குறித்து ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கோட்டையன் குறித்து மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த உதயகுமாரும் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. எனவே அவர் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்துவார்.
செங்கோட்டையன் பொறுத்தவரை அ.தி.மு.க.வில் மூத்த தலைவர். அவரை நாங்கள் அனை வரும் மதிக்கிறோம்" என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்ட பரவையில் நிரு பர்களுக்கு பேட்டியளிக்கையில், "அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை. அனைவரும் ஒற்றுமை யாக இருக்கிறோம்" என்று கூறினார்.
அ.தி.மு.க.வில் செங் கோட்டையன் எழுந்துள்ள சர்ச்சை நாளுக்கு நாள் அதிக ரித்து உள்ளது. அவர் அவர் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவர் அ.தி.மு.க. வை பாதிக்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபட மாட்டார் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் திருப்பூர் வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கவுன்சி லர்கள், கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் பழைய பஸ் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பஸ் நிலையம் என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பஸ் நிலையம் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டி பணிகள் நடக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அந்த பஸ் நிலையத்துக்கு தியாகி திருப்பூர் குமரன் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட் டது. உயிர் பிரியும் வரை கையில் தேசியக்கொடி ஏந்தி திருப்பூரின் பெருமையை இந்திய தேசம் எங்கும் கொண்டு சேர்த்த சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத்தலைவர் பழ னிசாமி, துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், பட்டுலிங்கம், கருணாகரன், திலகர்நகர் சுப்பு, அரிகரசுதன், மகேஷ்ராம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்டவர்கள் உடன் வந்தனர்.
இதுபோல் 42-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரும், எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி, அ.தி.மு.க. கவுன்சிலர்களும் மாநகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாமன்றத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 18 பேர் உள்ளோம். எங்களுக்கு உரிய முன்னுரிமை கொடுத்து மாமன்ற கூட்ட அரங்கில் இடமளிக்க வேண்டும். அதில் பாரபட்சம் காட்டக்கூடாது. எதிர்க்கட்சிக்கு உரிய முக்கி யத்துவம் அளிக்க வேண்டும்.
சொத்துவரி உயர்வுக்கு எந்தெந்த கட்சியில் எத்தனை பேர் ஆட்சேபனை தெரிவித்தனர் என்பதை பதிவு செய்து மாநகராட்சி நிர்வாகம், சொத்துவரி உயர்வுக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.