என் மலர்
நீங்கள் தேடியது "ஒடிசா"
- கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது.
- விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது. அதோடு பயணிகள் எழுப்பிய கூக்குரலம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது.
இதனை கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு ஓடிவந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாலசோர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்க இடம் கொடுத்ததோடு, அவர்களுக்கு உணவும் வழங்கினர். குழந்தைகளுடன் வந்த பயணிகள் பாலசோர் பகுதி மக்களின் அன்பில் நெகிழ்ந்தனர்.
- தமிழக அரசு ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
- 132 பேரில் 90-ல் இருந்து 100 பேர் வகையில் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்து நாடு முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் அதிக அளவில் தமிழக பயணிகள் இருந்துள்ளனர். இந்த ரெயிலில் மொத்தம் 867 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த பலரும் முன்பதிவு செய்து பயணம் செய்திருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் 127 பேர் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து சென்ட்ரல் வரும் வழியில்தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கி உள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இந்த ரெயிலில் சென்னை நோக்கி பயணம் செய்துள்ளனர். அப்போதுதான் அவர்களில் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதேபோன்று ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழக பயணிகள் 5 பேர் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 132 தமிழர்கள் 2 ரெயில்களிலும் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசு ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
அதே நேரத்தில் காயம் அடைந்த தமிழர்கள் எத்தனை பேர் என்பது பற்றிய தகவல்களையும் அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். இது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக 5 அல்லது 6 மணி நேரம் கழித்தே தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பற்றிய விவரங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக ஒடிசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 132 பேரில், 90-ல் இருந்து 100 பேர் வகையில் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சுமார் 35 பேரின் செல்போன் இணைப்புகள் மட்டும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளன என்று வருகிறது. இவர்கள்தான் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
- அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் செய்யப்பட்டனர்.
- 15 குழுக்களை சேர்ந்த 500 பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
வேலூர்:
ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ரெயில் விபத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் செய்யப்பட்டனர். 15 குழுக்களை சேர்ந்த 500 பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
ஒடிசா ரெயில் விபத்து சம்பந்தமாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தை செர்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரெயில்களில் பயணித்திருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை அவர்களின் உறவினர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 0416 2258016 என்ற தொலைபேசி எண்ணிலும், 9384056214 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் சிஸ்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.
- விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்ட ரெயில்வேதுறை மந்திரி, விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. சுமார் 16 மணி நேரம் இடைவிடாத மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட இன்று காலை 11 மணியளவில் மீட்புப்பணிகள் நிறைவடைந்தன.
இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த மோசமான சம்பவத்தில் 238 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரெயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முதலில் மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.
தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் பெட்டிகள் கிடந்த தண்டவாளத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்புரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா சென்ற அதிவேக ரெயில், கோரமண்டல ரெயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரெயிலும் தடம் புரண்டது.
மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு ஒரு பெட்டி மீது இன்னொரு பெட்டி இடித்துக் கொண்டிருந்தன. பல பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தனர்.
தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணம் உள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலும், இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இந்த கோர விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனிதத் தவறா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எழுப்பப்படும் கேள்விகள்:-
1. அனைவருடைய பார்வையிலும் ஒரே இடத்தில் அடுத்தடுத்த விபத்து, அதுவும் மூன்று ரெயில்கள் ஒரே இடத்தில் மோதியது எப்படி? என்பதுதான்.
2. சரக்கு ரெயில் நின்று கொண்டிருக்கும்போது, அதே ரெயில்பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்தது எப்படி?. இது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதத்தவறா?
3. பலர் சிக்னல் தவறு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
4. ரெயில்வே அமைச்சகம் விபத்துகளை தடுப்பதற்கான 'கவாச்' சிஸ்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரெயில் சிக்னலை தாண்டும்போது, மோதலுக்கான வாய்ப்புகள் இருக்குமெனில் எச்சரிக்கை தகவலை அனுப்பும். அப்போது எதிரே வரும் ரெயிலை அறிந்து டிரைவர் சுதாரித்துக் கொண்டு பிரேக் மூலம் ரெயில்களை நிறுத்த முடியும்.
இப்படி இருக்கும்போது 3 ரெயில்கள் எப்படி ஒரே இடத்தில் மோதியது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் சிஸ்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்ட ரெயில்வேதுறை மந்திரி, விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பின்புதான் முழுத் தகவல் தெரியவரும்.
- ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
- விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி, "நெஞ்சு பதைபதைக்கிறது... என்ன கொடுமை இது !! இறந்தவர்களின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.
நெஞ்சு பதைபதைக்கிறது... என்ன கொடுமை இது !! இறந்தவர்களின் குடும்பத்தினர் க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். #OdishaTrainTragedy#TrainAccident pic.twitter.com/GQsPrsGSCT
— Actor Soori (@sooriofficial) June 3, 2023
- விபத்து பகுதிக்கு அருகே வரை சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
- அழைத்து வரும் சிறப்பு ரெயில்கள் நாளை காலை சென்னை ரெயில் நிலையம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசாவில் பாலசோர் பகுதியில் ரெயில் விபத்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரெயிலில் சுமார் 2 ஆயிரம் பயணிகள் பயணித்தது தெரிய வந்து உள்ளது. அவர்களில் பாதி பேர் காயம் அடைந்து உள்ளனர். சுமார் 1000 பயணிகள் அந்த பகுதியில் நேற்று இரவு தவிக்க நேரிட்டது. பலர் உடனடியாக பஸ்களை பிடித்து மற்ற பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து எப்படி செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களை குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் இன்று காலை செய்தனர். இதற்காக விபத்து பகுதிக்கு அருகே வரை சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு வங்காளத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்தும் சிறப்பு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அந்த ரெயில் பத்ரக் நகரம் வரை சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்னை திரும்பும் என்று தெரிய வந்துள்ளது.
அந்த ரெயிலில் 250 பயணிகள் அழைத்துவரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல புவனேஸ்வரத்தில் இருந்தும் மற்றொரு சிறப்பு ரெயில் சென்னைக்கு இயக்கப்படுகிறது. அந்த ரெயிலில் 133 பேர் அழைத்துவரப்படுகிறார்கள். மொத்தம் 383 பேர் ஒடிசாவில் இருந்து சென்னை திரும்புகிறார்கள்
இவர்களை அழைத்து வரும் சிறப்பு ரெயில்கள் நாளை காலை சென்னை ரெயில் நிலையம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒடிசா மாநிலம் ரெயில் விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், "ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) June 3, 2023
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச்…
- ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
- அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் 261 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சுமார் 16 மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணிகள் இன்று காலை 11 மணியளவில் நிறைவடைந்தன.
விபத்தில் சிக்கிய 2 ரெயில்களிலும் 132 தமிழக பயணிகள் பயணம் செய்தனர். இதில் 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
- விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் 867 பயணிகள் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர்.
- சென்ட்ரல் விசாரணை மையத்திற்கு ஆயிரத்திற்கும் மேலான போன்கள் வந்துள்ளன.
சென்னை:
ஒடிசா ரெயில் விபத்து குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் 867 பயணிகள் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் குறித்து கேட்ட றிந்து வருகிறோம். சென்ட்ரல் விசாரணை மையத்திற்கு ஆயிரத்திற்கும் மேலான போன்கள் வந்துள்ளன. உறவினர்களுக்கு உரிய தகவல், விவரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.
- சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு கோர மண்டல் மற்றும் பெங்களூரு ரெயில்களின் பெட்டிகள் அருகில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலுடன் மோதி நொறுங்கின. இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.
மீட்கப்பட்ட பயணிகள் பாலசோர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ கோபால்பூர் மற்றும் காந்தா படா பகுதிகளில் அமைந்து உள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரம் செல்ல செல்ல காயம் அடைந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று காலை ரெயில்கள் விபத்தில் 238 பயணிகள் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணியளவில் தென்கிழக்கு ரெயில்வே அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், '3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது' என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 650 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தென்கிழக்கு ரெயில்வே செய்தி தொடர்பாளர் ஆதித்ய சவுத்ரி தெரிவித்தார்.
2-வது நாளாக இன்று காலை மீட்பு பணி தீவிரமாக நடந்தது. 11 மணிக்கு அது நிறைவு பெற்றது. அதன்பிறகு அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலையில் தான் கடைசி ரெயில் பெட்டி துண்டிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர்.
- ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர்.
ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 70 பேரில் யாரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் 167 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
பாலசூரில் சிகிச்சை பெறுபவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
- முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரம் ரெயில்வேயில் இருக்கும்.
- ஒடிசா ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருந்தவர்கள் தான் அதிகமாக இறந்துள்ளார்கள்.
ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் பெயர் விபரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பது பற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரம் ரெயில்வேயில் இருக்கும். எனவே எளிதில் கண்டு பிடித்து விடலாம்.
ஆனால் ஒடிசா ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருந்தவர்கள் தான் அதிகமாக இறந்துள்ளார்கள். அவர்கள் பெயர் விபரம் ரெயில்வேயில் இருக்காது. எனவே தான் விபரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பலரது உடல்கள் உறவினர்கள் அடையாளம் காட்டினால் தான் தெரிய வரும் என்றனர்.