search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசா ரெயில் விபத்து- உயிரிழந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஒடிசா ரெயில் விபத்து- உயிரிழந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

    • ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர்.
    • ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன.

    இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர்.

    ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 70 பேரில் யாரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    இன்னும் 167 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

    பாலசூரில் சிகிச்சை பெறுபவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×