என் மலர்
நீங்கள் தேடியது "ஆதார்"
- இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதார்’.
- இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வெண்ணிலா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆதார்'. இந்த படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், இனியா, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஆதார்
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற 20-வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 'ஆதார்' உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெற்றன. இதில் சிறந்த தமிழ் பட தயாரிப்பிற்கான விருது 'ஆதார்'திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி. சசிகுமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
- 6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
சென்னை:
ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் இந்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த வாக்காளர்களின் ஆதார் எண்ணை முழுமையாக இணைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன், தனியார் 'நெட்சென்டர்' இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இந்த பணியை வேகப்படுத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
இதுபற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்குமாறு சத்யபிரதாசாகு கேட்டுக் கொண்டார்.
- சிறப்பு முகாம்கள் நாளை முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது
- 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த ஆதார் எண்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள், தங்கள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அனைவரும் இணைய தளத்திலோ அல்லது தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களில் (வட்டாசியர், நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்) அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை (வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், இந்திய கடவுச்சீட்டு போன்றவற்றை) நேரில் தாக்கல் செய்து புதுப்பித்து கொள்ளலாம். மேலும், ஆதார் அட்டையை புதுப்பிக்க முதல் கட்டமாக சிறப்பு முகாம்கள் நாளை (2ந்தேதி) முதல் 5ம் தேதி வரை செந்துறை வட்டாட்சியர் அலுவலகம், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உடையார்பாளையம் வட்டாசியர் அலுவலகம் மற்றும் தத்தனூர் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மேற்கண்ட முகாம்களை பயன்படுத்தி ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- ஆதாரை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
புதுடெல்லி :
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆதாரை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் வக்கீல் ரவி, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த டிசம்பர் 21-ந்தேதி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து வக்கீல் ரவி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
- தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்துள்ளது.
- மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.
சீர்காழி:
சீர்காழியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை மின்வாரிய அதிகாரி ஆய்வு செய்தார்.மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் சிறப்பு முகாம்கள் அமைத்து ஆதார் எண் இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சீர்காழி வாணிவிலாஸ் துவக்கப்பள்ளியில் மின்சாரவாரியம் சார்பில் மின் நுகர்வோர்கள் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.
இந்த பணியை மின்வாரிய செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மின்வாரிய துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசித்ரா, உதவி கணக்கு அலுவலர் (பொ) செந்தாமரை, உதவி பொறியாளர் முத்துக்குமார், மின்வாரிய பணியாளர் ஆனத்தக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- பொன்னமராவதியில் ஆதார் நிரந்தர பதிவு மையம் தொடங்கப்பட்டது
- காரையூரில் ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியத்தில் தாலுகா அலுவலகத்தில் மட்டுமே ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த சேவையை ஒன்றிய அலுவலகம் மற்றும் காரையூர் பகுதியில் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் நிரந்தர பதிவு மையம் அமைக்கப்பட்டு இதன் தொடக்க விழா நடந்தது.
ஒன்றியக்குழுத்தலைவர் சுதாஅடைக்கலமணி ஆதார் பதிவு மையத்தை தொடங்கிவைத்தார். இதில் ஒன்றிய ஆணையர்கள் தங்கராசு, குமரன், ஊராட்சித்தலைவர்கள் கீதாசோலையப்பன், கிரிதரன், அழகுமுத்து, மீனாள்அயோத்திராஜா, லெட்சுமி, துணைஆணையர்கள் குமார், கற்புக்கரசி, வள்ளி, ஒன்றிய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் புதிதாக ஆதார் எடுத்தல் திருத்தம், மொபல் எண் மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட ஆதாரின் அனைத்துப்பணிகளும் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும். இதே போல காரையூரில் ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- ஆதார் எண்ணை இணைக்காமல் நிலுவையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகரிய கோட்டத்தில் உள்ள வீடு, விவசாயம், கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 463 ஆகும். இவற்றில் 80 ஆயிரத்து 364 எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 22 ஆயிரத்து 99 எண்ணிக்கை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணைஇணைக்க மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி, தஞ்சை மேற்கு, நீதிமன்றசாலை, மானம்பு ச்சாவடி, அருளானந்தநகர், ஈஸ்வரிநகர், கரந்தை, அரண்மனை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
எனவே நகரிய கோட்டத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் நிலுவையில் உள்ள 22 ஆயிரத்து 99 மின் நுகர்வோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மதுரையில் தொடங்கியது.
- ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
மதுரை
தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள், மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதனை கலெக்டர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார். இதில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
முதல்நாளான இன்று காலை 12 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட இரு பாலருக்கான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன.
திருப்பாலை பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள், பிப்ரவரி 1,2-ம் தேதி நடைபெறுகிறது. கல்லூரி மாணவ- மாணவி களுக்கான கிரிக்கெட் போட்டி, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் 2,3-ம் தேதிகளில் நடக்க உள்ளது.
கபடி, சிலம்பம், கூடைப் பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து ஆகிய போட்டிகள் 4,5-ந் தேதி களிலும், கால்பந்து 5,6-ந் தேதிகளிலும், தடகளம் 7-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவி களுக்கான இறகு பந்து, மேசைப்பந்து ஆகியவை 6,7-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளி களுக்கான தடகளப்போட்டி 6-ம் தேதியும், இறகுப்பந்து, கபடி எறிபந்து, கைப்பந்து ஆகியவை 7-ம் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.அரசு ஊழியர் களுக்கான கைப்பந்து, இறகுப்பந்து, கபடி, செஸ் போட்டிகள் 8,9-ந் தேதிகளிலும், தடகளம் 11-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினருக்கான கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் 11,12-ந் தேதிகளில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. அதே தேதிகளில் திருப்பாலை பள்ளிக்கூட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்.
தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டி களில் ஆன்லைன் பதிவு பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும் என தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி விளை யாட்டு வீரர் வீராங்கனை கள் இன்று காலை முதலே ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
மதுரை மாவட்ட விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவருக்கு 3 ஆயிரம் ரூபாயும், 2-ம் இடம் பெற்றவருக்கு, ரூ. 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மதுரை மாவட்ட விளை யாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் அரசு சார்பில் பங்கேற்பார்கள்.
- தமிழக அரசும் தனது பல்வேறு திட்டங்களில் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கி வருகிறது
- தமிழக சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
மத்திய அரசு திட்டங்களின் பயனை அடைவதற்காக அதன் பயனாளிகள் தங்களின் ஆதார் எண்ணை அந்த திட்டங்களில் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசும் தனது பல்வேறு திட்டங்களில் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கி வருகிறது. குறிப்பாக, உதவித்தொகை, ஓய்வூதியம், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல திட்ட பலனை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தி உள்ளது. அதை மேலும் பல திட்டங்களில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளின் ஆதார் எண் இணைப்பையும் கட்டாயமாக்கி சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறையின் அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசின் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தமிழக சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அந்த துறையின் சார்பில் பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் தொகையை வைப்புத்தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் வைக்கப்படுகிறது. 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை செலுத்தப்படுகிறது. அந்த வைப்புத்தொகைக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.
தற்போது மத்திய அரசு விதிகளின்படி, திட்டப்பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ்வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதார் எண்ணுக்காக பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக்கொண்டு திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்தபோது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் எண்ணை பெறுவதற்கான விண்ணப்பத்தின் நகலை வைத்து இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
அதோடு, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தாசில்தார் உள்ளிட்ட சான்றொப்ப அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது
- மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதியும் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் நகரியம், கிராமியம், கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூர், லெப்பைக்குடிகாடு, குன்னம் உபகோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் வீடு, விவசாயம், குடிசை மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.
இதுவரை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத 82 மின் நுகர்வோர்கள் முகாமில் கலந்து கொண்டு இணைத்து கொண்டனர். மேலும் மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த 12 மின் நுகர்வோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ்ச்செல்வன், செல்வராஜ், ரவிக்குமார், கலியமூர்த்தி, சுப்பிரமணியன், கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் எண் இணைக்கக்கூடிய மின் இணைப்புகளின் எண்ணிக்கை மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 604 ஆகும். அதில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 596 மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்டத்தில் 91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதியும் நடைபெறவுள்ளது. அதில் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் இணைப்பு சம்பந்தமான வருவாய் ஆவணங்கள் மற்றும் ஆதார் எண், செல்போன் எண், மின் இணைப்பு எண், ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் வருகிற 15-ந்தேதி ஆகும் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பல்லடம் தபால் அலுவலகம் மற்றும் பணிக்கம்பட்டி தபால் அலுவலகம் ஆகியவை இணைந்து 3 நாட்கள் ஆதார் முகாம் நடைபெறுகிறது.
- பொதுமக்கள் சிறப்பு ஆதார் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பல்லடம் தபால் அலுவலகம் மற்றும் பணிக்கம்பட்டி தபால் அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு ஆதார் முகாம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை, ஆதாருடன் மொபைல் எண் இணைப்பு, கைரேகை பதிவு, முகவரி, பெயர் மாற்றம் மற்றும் பிறந்த தேதி பதிவு போன்ற முக்கிய திருத்தங்கள் பதிவு செய்யப்படுகிறது.
பொதுமக்கள் இந்த சிறப்பு ஆதார் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
- சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை.
- இன்றைக்குள் இணைக்காவிட்டால், மின்கட்டணம் செலுத்தமுடியாது.
சென்னை :
தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்காக, மின்கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரம் பயன்படுத்துவோர் 2 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களில் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 65 லட்சம் பேர், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்த்துவிட்டனர்.
சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்காத நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே, 3 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டதால், மேற்கொண்டு வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே கூறிவிட்டார்.
இன்றைக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால், மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் வழியாக ஆதார் எண்ணை இணைத்தவர்கள் சிலருக்கு, ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்று குறுந்தகவல் சென்றுள்ளது. எனவே, உடனடியாக அவர்கள் மீண்டும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும்.
இதேபோல், வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி வேறு ஒருவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால், அதையும் சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.