என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை"

    • அதிகளவில் காலா மீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.
    • மீன்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதா ரண்யம் கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    தற்போது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில்யில் தாங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 10 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற கோடியக்கரை மீனவர்களது வலையில் அதிக அளவில் காலாமீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால், உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.

    இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் காலா மீன் கிலோ ரூபாய் 500, வாவல் மீன் ரூ. 700, இறால் ரூ. 200,நீலக்கால் நண்டு ரூ. 700, புள்ளிநண்டு ரூ.200க்கும், ஏலம் போயின.

    ஒரே நாளில் 5 டன்மீன்கள் கிடைத்ததாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மீன்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஐஸ் வைத்து அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்தது.
    • ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4-ம், சவரனுக்கு ரூ.32-ம் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ 4,925-க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.4,921-க்கு விற்பனை ஆகிறது. நேற்று பவுன் ரூ.39,400-க்கு விற்பனை ஆன தங்கம் இன்று ரூ.39,368 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4-ம், பவுனுக்கு ரூ.32-ம் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிராம் ரூ.67.50-க்கும் கிலோ ரூ. 67,500-க்கும் விற்பனை ஆகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5,023-க்கும், ஒரு சவரன் ரூ.40,376-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,184-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.40,376-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,023-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.5,047-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.72.5-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.72,500-க்கு விற்பனையாகிறது.

    • கடும் பனிப்பொழிவு-முகூர்த்தம் காரணமாக உயர்வு
    • ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி,காவல் கிணறு,புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன் கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லி கைப்பூவும் வருகின்றன.

    சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன.

    இங்கிருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. எனவே தோவாளை சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தி ருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தேவை அதிகமாக உள்ள தால் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்து உள்ளது.

    தோவாளை சந்தையில் இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.1750-க்கும் விற்கப்பட்டது.அரளிப் பூ கிலோ ரூ.250, சேலம் அரளி ரூ.220, சம்பங்கி ரூ.125-க்கு விற்கப்பட்டன.

    மஞ்சள் கேந்தி ரூ.60, சிகப்பு கேந்தி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.150, பட்டர் ரோஸ் ரூ.150,கோழிப்பூ ரூ.50, துளசி ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு பூக்களின் வரத்து குறைவும், அதிக அளவிலான முகூர்த்த ங்கள் நாளை இருப்பதுமே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கத்தை போல வெள்ளி விலையும் சரிந்து உள்ளது.
    • கிராம் ரூ.74-ல் இருந்து ரூ.72.70 ஆகவும். கிலோ ரூ.74 ஆயிரத்தில் இருந்து ரூ.72,700 ஆகவும் குறைந்து விற்பனை ஆகிறது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ஆயிரத்தை தாண்டியது.

    நேற்று முன்தினம் பவுன் ரூ.40,320-க்கு விற்ற தங்கம் நேற்று அதிரடியாக உயர்ந்து ரூ.40,800-க்கு விற்பனை ஆனது. பவுன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பவுன் ரூ.320 குறைந்து ரூ.40,480-க்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.5100-ல் இருந்து ரூ.5060-ஆக குறைந்து உள்ளது. கிராம் இன்று ரூ.40 குறைந்து இருக்கிறது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் சரிந்து உள்ளது. கிராம் ரூ.74-ல் இருந்து ரூ.72.70 ஆகவும். கிலோ ரூ.74 ஆயிரத்தில் இருந்து ரூ.72,700 ஆகவும் குறைந்து விற்பனை ஆகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்தது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5,070-க்கும் ஒரு சவரன் ரூ.40,560-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,448-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.40,560-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5056-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.5070-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.73-க்கு விற்றது. இன்று கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.73.10-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.73100-க்கு விற்பனையாகிறது.

    • கடந்த 16-ந்தேதி 1 சவரன் தங்கம் ரூ.40,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.40,448 ஆக அதிகரித்தது.
    • நேற்று முன்தினம் ரூ.40,560 ஆக உயர்ந்தது. நேற்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.40,520-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. தங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 1 பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்பிறகு தங்கம் விலை குறையத் தொடங்கி ரூ.37 ஆயிரம் முதல் ரூ.39 ஆயிரம் வரை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது. கடந்த 7 மாதங்களாகவே இதே நிலை நீடித்தது.

    இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை திடீரென்று உயர்ந்தது. கடந்த 2-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு 2 வாரங்கள் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 16-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.40,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.40,448 ஆக அதிகரித்தது. நேற்று முன் தினம் ரூ.40,560 ஆக உயர்ந்தது. நேற்று பவுனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.40,520-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை திடீரென்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.41 ஆயிரத்தை நெருங்கியது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,920-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5065-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.5115-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.2.20அதிகரித்து ரூ.74.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்துள்ளது.
    • வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.74.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.40,920-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.40992-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5115-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ரூ.5124-க்கு விற்கப்படுகிறது.

    ஆனால் இன்று வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.74.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனையாகிறது.

    • தங்கம் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து, ஒரு சவரன் ரூ.40,528-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.74.70-க்கு விற்றது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.73.70-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,992-க்கு விற்றது.

    இன்று பவுனுக்கு ரூ.464 குறைந்து ரூ.40,528-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,124-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5066-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.74.70-க்கு விற்றது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.73.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.73,700-க்கு விற்பனையாகிறது.

    • தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர்.
    • கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், மணியனூர், கந்தம்பாளையம், சுள்ளிப்பாளையம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம் பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், அண்ணா நகர், கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

    தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது. தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.40,608-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.73.70-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் முதல் அதிகரித்து வந்தது. நேற்று திடீரென்று விலை குறைந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.40,528-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.40,608-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5066-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5076-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.73.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.74-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74000-க்கு விற்பனையாகிறது.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும் ஏலம் போனது. இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏல‌த்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலா யுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.160-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், காக்கட்டான் ரூ.200-க்கும் ஏலம் போனது.

    இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏல‌த்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.450-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×