என் மலர்
நீங்கள் தேடியது "தீ"
- சரக்கு ஆட்டோவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- கரூர் பஸ்நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது
கரூர்
கரூர் அருகே உள்ள செட்டிபாளையத்தில் இருந்து நேற்று மதியம் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் ஏற்றிக்கொண்டு கரூருக்கு ஒரு சரக்கு ஆட்டோ வந்துள்ளது. கரூர் பஸ்நிலையம் அருகே கோவை சாலையில் வந்து கொண்டிருந்த போது சரக்கு ஆட்டோவின் பின்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கவனித்த சரக்கு ஆட்டோ டிரைவர் வண்டியை நிறுத்தி, பார்த்தபோது செல்ப் மோட்டார் மற்றும் என்ஜின் வயர்கள் தீ பிடித்து எரிந்தன. இதனையடுத்து சரக்கு ஆட்டோ டிரைவர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் விரைந்து வந்து சரக்கு ஆட்டோவில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது"
- இரு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது
- ரூ. 2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
கரூர்:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி ஒத்தக்கடை பகுதியில் தங்கராசு மற்றும் சக்திவேல் ஆகியோர் அருகருகே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில்இவர்களது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் தீ பரவாமல் இருக்க அருகில் உள்ள வீடுகளில் தண்ணீரை பீச்சியடித்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 15 ஆயிரம்ே ரொக்க பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறுகின்றனர்,
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ எப்படி பிடித்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் பாதிக்க ப்பட்ட குடும்பத்தினரை நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் கவுண்டம்பட்டி அன்பழகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெட்டிக்கடைக்கு முதியவர் தீ வைத்துள்ளார்
- போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 35). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்(65) என்பவர், கலியபெருமாளின் பெட்டிக்கடைக்கு வந்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கு வந்த அவர், ரேஷன் அட்டையை அங்கு வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார். அதற்கு கலியபெருமாள், அவர் அங்கு ரேஷன் அட்டையை வைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து ெசல்லாததால், கலியபெருமாள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த பெட்டிக்கடை தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பெட்டிக்கடைக்கு சுப்ரமணியன் தீ வைத்தது போன்ற காட்சி, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை பார்வையிட்ட போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியனை தேடி வருகின்றனர்."
- அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
- அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அடுத்த குள்ளே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரேவதி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
இதில் வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் சென்று பார்த்த போது வீட்டின் உள் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை கதவு மற்றும் வீட்டில் உள்ளே இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
- நண்பரை பார்த்து விட்டு சென்ற போது சம்பவம்
அரியலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் திரவுபதி அம்மன் ே காவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 42). இவர் தா.பழூரில் உள்ள நணபர் சந்தோஷ்குமாரை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். அவரை பார்த்த பின்னர் மீண்டும் த ா.பழூரில் இருந்து சிதம்பரம் நோக்கி க ாரில் புறப்பட்டு சென்றார். கோடங்குடி அணைக்குடம் இடையே வனப்பகுதி அமைந்துள்ள இடத்தில் சென்ற போது கார் திடீரென் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து பாலமுருகன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி உயிர் தப்பினார். சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் தா.பழூர் ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் வனப்பகுதி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
- தீ வைத்ததற்கான காரணம் என்ன?என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள பரமார்த்தலிங்கபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது35).இவர் மினி டெம்போ டிரைவர் ஆவார்.
இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டதால்அந்த மோட்டார் சைக்கிளை கடந்த 16-ந்தேதி இரவு நேதாஜி காலனியில்நிறுத்திவிட்டு சென்றுஉள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அவர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அந்த மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் அக்கம் பக்கத்தினர் தேடிப் பார்த்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சுதாகர் நேதாஜி காலனியில் உள்ள சுடுகாட்டில் சென்று பார்த்தார்.அப்போது அவரது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சாம்பலானநிலையில் காணப்பட்டது.
இது பற்றி சுதாகர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும்அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.இதில் நேதாஜி காலனியைச் சேர்ந்த 7 பேர் அந்த மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று சுடுகாட்டில் வைத்து தீ வைத்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் அந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் நேதாஜி காலனியைச் சேர்ந்த வசந்தகுமார், அழகர், வசந்த், சுரேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் மோட்டார் சைக்கிளை தீ வைத்ததற்கான காரணம் என்ன?என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குப்பைகளுக்கு தீ வைத்தபோது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது.
- சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேல மாவிளையைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி செல்ல ம்மாள் (வயது 80).
இவரது வீட்டின் பின் புறம் ஓலைகள் மற்றும் குப்பைகள் கிடந்து உள்ளன. அதனை அகற்ற செல்லம்மாள் திட்டமிட்டார்.
இதற்காக நேற்று அனை த்தையும் ஓரே இடத்தில் சேர்த்தார். பின்னர் அந்த குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார்.
இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த னர். அவர்கள் தீயை அணைத்து செல்லம்மாளை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 வீடுகள் தீப்பற்றி எரிந்தன
- தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீயை அணைத்தனர்
பெரம்பலூர்
குரும்பலூர் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சோந்தவர் மாசி பெரியண்ணன் (வயது 48). இவரும், இவரது தம்பி ராஜாவும்(44) அருகருகே இருந்த குடிசை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் மாசி பெரியண்ணனின் மகள் மிதுனா(11) மட்டும் வீட்டில் இருந்தபோது திடீரென்று குடிசை வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனை கண்ட மிதுனா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு குடிசை வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். மேலும் அப்போது லேசான மழை பெய்ததால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடுகளில் எரிந்த தீயை அக்கம், பக்கத்தினர் அணைத்து விட்டனர். இதில் 2 வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீப்பற்றியதை உடனடியாக கவனித்ததால் சிறுமி மிதுனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் கரும்பு தோட்டத்தில் இருந்த மீதி சருகுகள், சுள்ளிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
- அதில் பற்றி எரிந்த தீ , அருகே இருந்த அறுவடை செய்யப்படாத கரும்பு தோட்டத்தில் வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ் ( வயது 62). விவசாயி. இவரது வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று கரும்புகளை அறுவடை செய்த பிறகு, தோட்டத்தில் இருந்த மீதி சருகுகள், சுள்ளிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதில் பற்றி எரிந்த தீ , அருகே இருந்த அறுவடை செய்யப்படாத கரும்பு தோட்டத்தில் வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது.
- இங்கு நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது.இங்கு நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து நடப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.தீ மள மளவென்று பரவி குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது.
இது பற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்தது.இதை யடுத்து திங்கள் சந்தை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டு அங்கி ருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய போராடியும் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை..
இன்று 2-வது நாளாக தீ எரிந்து கொண்டே உள்ளது. அதை அணைக்கும் பணியில் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இன்று மாலைக்குள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீய ணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ரூ.1¾ கோடி பொருட்கள் பாதுகாக்கப்பட்டன
- தீயணைப்பு துறையினர் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நாகர் கோவில், கன்னியா குமரி, திங்கள்சந்தை, தக்கலை, குளச்சல், குழித்துறை, குலசேகரம் மற்றும் கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இங்கு வேலை பார்த்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் தீ விபத்து நடந்தால் தகவல் கிடைத்த உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் குளங்கள் மற்றும் ஓடைகளில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை மீட்பதிலும் தீயணைப்பு வீரர்களின் பங்கு முக்கிய மாக உள்ளது.
குமரி மாவட்ட தீய ணைப்பு நிலையங்களுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 344 தீ விபத்து அழைப்புகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீயை அணைத்ததின் மூலமாக ரூ.1.78 கோடி மதிப்பிலான பொருட்கள் பாதுகாக்கப்பட்டன. அதே நேரம் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
இதே போல கிணற்றில் தவறி விழுந்தது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது, குளத்தில் மூழ்கியது உள்ளிட்டவை தொடர்பாக 860 மீட்பு அழைப்புகள் வந்தன. அதில் உடனுக்குடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதில் 111 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- விசாரணையில் டெம்போவை தீ வைத்து எரித்த வாலிபர் கைது
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த குழுமைகாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது.இதுபற்றி அப்பகுதி மக்கள் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
இதில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் டெம்போவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து தீ வைத்து எரித்து இருந்தது தெரியவந்தது .இது குறித்து தனிப்பிரிவு எஸ். ஐ. சிவசங்கர் தனிப்பிரிவு ஏட்டு சுஜி ஆகியோர் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்.
அப்பொழுது குழுமைக்காடு பகுதியில் நிறுத்தி இருந்த டெம்போவை தீ வைத்து எரித்த நபர் அவர்தான் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடந்த விசாரணையில் தீ வைத்து எரித்த வாலிபர் ராஜேஷ் (வயது 27) என்பதும் அவர் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.