என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர்"

    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தூத்துக்குடி மாப் பிள்ளை லுரணி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவரது மகன் மாரிமுத்து (வயது 28). இவர் ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் உள்ள மினி டெம்போ ஒன்றை ஓட்டி வந்தார்.

    சம்பவத்தன்று மாரிமுத்து மினி டெம்போவை முப்பந்தல் பகுதியில் ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் மினி டெம்போ கவிழ்ந்தது.

    படுகாயம் அடைந்த மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாரிமுத்துவிற்கு செல்லா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள னர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாரிமுத்துவிற்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் அவர் பலியாகி இருப்பது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
    • அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி உஷா (36) என்ற மனைவியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதன்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் பலத்த காயமடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்ராஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் விஜய் (22) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படுக்கையறையில் தமிழழகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கருவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் தமிழழகன் (வயது29). இவர் ஊஞ்சலூரில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    தமிழழகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தீராத வயிற்று வலி காரணத்தால் கடந்த 3 மாத காலமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் மற்றும் பார்வதி வேலைக்கு சென்றனர். வீட்டில் தமிழழகன் மட்டும் இருந்துள்ளார். இதனையடுத்து படுக்கையறையில் தமிழழகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் தந்தை ஆறுமுகம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது தமிழழகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த தமிழழகனை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து தமிழழகன் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வந்த வேன் டிரைவர் மாயமானார்.
    • கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.

    சேலம்:

    சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 45). இவருடைய மனைவி சங்கீதா (40). இந்த தம்பதிக்கு பிரகாஷ் (23) என்ற மகனும், பிரதிஷா(21) என்ற மகளும் உள்ளனர்.

    வேன் டிரைவர் சிவகுமார் சன்னியாசி குண்டு அருகில் சொந்தமாக பந்தல் அமைக்கும் கடை வைத்தும், வேன் வைத்தும் டிரைவராக தொழில் செய்து வந்தார். இந்த வேன் வாங்குவதற்கும் பிள்ளை–களை படிக்க வைப்பதற்கும் சில வருடங்களுக்கு முன்பு அவர், வட்டிக்கு பணம் 7 லட்சம் வரை கடன் வாங்கினார். பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர்.

    இந்த நிலையில் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் சிவகுமார் கவலை அடைந்து புலம்பிக் கொண்டிருந்தார். கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.

    நாளை வீட்டிற்கு வந்து விடுகிறேன் என கூறினார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிவகுமாரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.

    'இது குறித்து சங்கீதா கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிவகுமார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சிவகுமார் கடனுக்கு பயந்து தலைம–றைவாக உள்ளாரா? அல்லது கந்து வட்டி கும்பல், சிவகுமாரை கடத்தினார்களா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவையில் முகாமிட்டு சிவகுமாரை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மங்கலம் சந்திப்பு பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் அரசு பள்ளிகூடம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரப்பரப் பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டணம் பேச்சிப்பாறை பட்டணம் கால்வாய் பாய்கிறது. இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் சானல் கரை யோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது.

    இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்த னர். போலீசார் வந்து பார்வை யிட்டு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வந்தார்கள். நேற்று வழக்கம்போல் இரவில் அந்த பகுதியில் மினி டெம்போவில் ஒரு பேரல் நிறைய கோழி கழிவு களை கொண்டுவந்து சாலை யோரம் கொட்டிவிட்டு பேரல்நிறைய சானலில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்கள்.

    இதுபற்றிய தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பொன்மனை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து மினி டெம்போவை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.

    இது பற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    • சாலையில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.
    • களியல் பகுதியை சார்ந்த மணிகண்டன்(வயது39)என்பதும், டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ளது கழுவன்திட்டை. காயங்களுடன் வாலிபர் பிணம் இந்த பகுதியில் இன்று காலை பொதுமக்கள் சென்ற போது சாலையில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதனால் சந்தேகமடைந்த மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த னர். அவர்கள் வாலிபரை பார்த்த போது அவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப் பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீ சாருக்கு ஏற்பட்டு உள்ளது.தொடர்ந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசா ரணை மேற்கொண்ட தில் இறந்த வாலிபர் களியல் பகுதியை சார்ந்த மணிகண்டன்(வயது39)என்பதும், டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அவரது உடலிலும், தலையிலும் காயங்கள் இருந்ததால் இவரை யாரா வது அடித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து உடலை வீசியிருக்க லாமா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் அவர் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவு கழுவன் திட்டை பகுதியில் சிலர் குடி போதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் ஏதேனும் பதிவாகி உள்ளதா?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 500 கிலோ அரிசி பறிமுதல்
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமை யிலான குழுவினர் வெள்ளமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தெரிசனம் கோப்பு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.

    காரை சோதனை செய்த போது காரில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரில் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தேரேக்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த அன்சார் என்பது தெரியவந்தது.போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்சாரிடம் விசாரணை நடத்திய போது ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
    • 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் அருகே புவியூர் காட்டு விளையைச் சேர்ந்தவர் ரெஜி. இவரது மகன் பெலிக்ஸ் (வயது 38).

    இவர் கோவையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.பெலிக்ஸ் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.இவருக்கும் தேங்காய் காரன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் தனது நண்பர் சந்திரனுடன் கண்ணன் வீட்டிற்கு சென்று பணம் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெலிக்சை கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்தனர்.

    இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன், சுபாஷ்,ஜெகன், வினோத், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப் பட்டனர்.

    இந்த கொலை வழக்கில் தேங்காய் காரன் குடியி ருப்பை சேர்ந்த ஆனந்த் முகிலன் குடியிருப்பைச் சேர்ந்த பிரதாப் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்ய டி.எஸ்.பி. ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்த நிலையில் ஆனந்தை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆனந்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கள். தலைமறைவாக உள்ள பிரதாப்பை தேடி வரு கிறார்கள்.

    இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் கொண்டு சென்ற டிரைவர் போலீஸ்காரரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் கொண்டு சென்ற டிரைவர் போலீஸ்காரரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்கடலூர் அருகே குள்ளஞ்சாவடி ராமநாதன் குப்பம் கூட்ரோடு பகுதியில் குள்ளஞ்சாவடி போலீஸ்காபெரியகுப்பம் தனியார் கம்பெனியிலிருந்து திருடப்பட்ட 2 டன் இரும்பு பொருட்கள் அதில் இருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இரும்பு பொருட்கள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
    • போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பள்ளி விளை ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 59 )டிரைவர். இவர் நேற்று வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப் டாப் உடையில் வந்த வாலிபர் குமரேசனிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டுள்ளார்.

    இதையடுத்து குமரேசன் அவரை வடசேரி பஸ் நிலையத்தில் விடுவதற்காக அழைத்து வந்தார். வெள்ளா ளர் தெரு பகுதியில் வந்த போது அந்த வாலிபர் தன்னை இங்கேயே இறக்கி விடுமாறு கூறினார். உடனே குமரேசன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது திடீரென குமரேசன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துவிட்டு அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து குமரேசன் திருடன்... திருடன்....என கூச்சலிட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து மறைந்து விட்டார். இது குறித்து குமரேசன் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் குமரேசன் மோட்டார் சைக்கிள் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் கோர்ட்டில் ஆஜர்
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் அனந்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.

    இவர் மீது 3 கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 16-ந்தேதி இரவு தனது நண்பர்கள் 2 பேருடன் தாழக்குடி-மாதவலாயம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தபோது ஒரு கும்பல் ராஜ்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தவிளை யைச் சேர்ந்த பிரவீன் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ராம் சித்தார்த் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெபின் ஆகிய மூன்று பேரை கைது செய்த னர். கைது செய்யப் பட்ட மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயி லில் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவாகியுள்ள மேலும் 4 பேரை தேடி வந்த நிலையில் ராமன் புதூர் சாரோன் தெருவை சேர்ந்த ஜோன்ஸ் (34), அழகிய பாண்டிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சாம் ஈஷாக் (37), சீதப்பால் மேல தெருவை சேர்ந்த அரவிந்த் (30) ஆகிய மூன்று பேர் பத்நாபபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    சரண் அடைந்த மூன்று பேரையும் காவல் எடுத்து விசாரிக்க ஆரல்வாய்மொழி போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து உடனே அவர்களுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப் பட்டது. போலீஸ் காவல் வழங்கப்பட்டதையடுத்து ஜோன்ஸ், சாம் ஈஷாக், அரவிந்த் ஆகிய மூன்று பேரையும் போலீசார் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.

    விசாரணையில் சூப் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜ்குமாரை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.சம்பவத்தன்று பிரவீன், முருகன் இருவரும் சூப் கடையில் இருந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த ராஜ்குமார் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் உங்களை தீர்த்து கட்டி விடுவதாக ராஜ்குமார் மிரட்டி உள்ளார். இதை பிரவீன், முருகன் இருவரும் எங்களிடம் தெரிவித்தனர்.

    உடனே நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு வந்த ராஜ்குமாரிடம் இது தொடர்பாக கேட்டோம். அப்போது ஏற்பட்ட தகரா றில் அவரை தீர்த்து கட்டிய தாக கூறியுள்ளனர். தொடர்ந்து 3பேரிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணைக்கு பிறகு இன்று மாலை 3 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தலை மறை வாகியுள்ள முருகனை போலீசார் தேடி வருகிறார் கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கிறிஸ்துராஜை தேடி வந்தனர்.
    • கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ராமன் புதூர் கார்மல் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர்.

    இவர் கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து சவாரிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி மேரிலதா நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கிறிஸ்துராஜை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கிறிஸ்து ராஜ் ஆசாரிப்பள்ளம் இந்திராநகர் பகுதியில் ரத்தக்காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கிறிஸ்துராஜ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கிறிஸ்துராஜ் உடல் பிரேத பரிசோதனை நேற்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது. இதில் கிறிஸ்துராஜ் அடித்து கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. கொலை செய்த குற்ற வாளிகளை கைது செய்யவேண்டும் அதன் பிறகு உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள். இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. சவாரிக்கு அழைத்து செல்லும்போது கிறிஸ்துராஜிடம் பணம் இருப்பதை பார்த்த நபர்கள் அவரை அடித்து கீழே தள்ளி விட்டு பணத்தை எடுத்துச் சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

    மேலும் பணம் கொடுக் கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக கிறிஸ்துராஜை கொலை செய்தார்களா வேறு ஏதாவது காரணமா என்று பல்வேறு கோணங் களில் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×