என் மலர்
நீங்கள் தேடியது "விற்பனை"
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை
- குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது விற்பனை செய்பவரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று முன் தினம் திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரம் சாமவிளை புத்தன்வீட்டை சேர்ந்தஅல் அமீன் (வயது 31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதே போல் நாகர்கோவில் வெட்டூணிமடத்தை சேர்ந்தவர் செல்வன் (23). சமீபத்தில் இவரை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் வடசேரி போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இரணியல்போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதே போல் வாத்தியார்விளை சேர்ந்தவர் அஜித் என்ற அஜித்குமார். இவரையும் சமீபத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக வடசேரி போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர் மீதும், இரணியல் போலீஸ் நியைத்தில் வழக்குகள் உள்ளன.
இவர்கள் இவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலகல் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் செல்வன், அஜித் ஆகிய இருவரையும் வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை. ஜெயிலில் அடைத்தனர்.
- விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
- ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 4, 919 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 1,961 கிலோ.தேங்காய் கிலோ ரூ.19.10 முதல் ரூ.23.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.50.40 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,109 கிலோ. கொப்பரை கிலோ ரூ.50.15 முதல் ரூ.75.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.72.15.ஏலத்தில் மொத்தம் 50 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது.
- இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வர்.
இதேபோல் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது. 350 பசு மாடுகள், 150 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இது கடந்த வாரத்தை விட குறைவு.
தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளன.
எனினும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பசு மாடுகள் ரூ.45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.
இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- 50 கிராம் கஞ்சா பறிமுதல்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தலைமை யில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இதற்காக சந்தே கிக்கப்படும் பகுதிகளில் போலீசார் ேராந்து சுற்றி வருகிறார்கள்.
வேம்பனூர் அரசு உயர் நிலைப்பள்ளி அருகில் கஞ்சாவுடன் இரண்டு வாலி பர்கள் நிற்பதாக வெள்ளிச் சந்தை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் வெள்ளிச்சந்தை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்ற போது சூரப்பள்ளம் அஜித் என்ற அஜித்குமார் மற்றும் தோப்புகளை சுதன் (வயது 23) ஆகிய இரண்டு பேரும் நின்று கொண்டிருந்தனர்.போலீசாரை கண்டவுடன் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை செய்தபோது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக நிற்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை எஸ்.ஐ. ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகின.
இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு, 7,998 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,251 கிலோ. விலை கிலோ ரூ.21.15 முதல் ரூ.25.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.75.
16 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 194 கிலோ. விலை கிலோ ரூ.61.10 முதல் ரூ.80.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.76.65. ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது
- இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் சில கும்பல்கள் ஈடுப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடுமையான நடவ டிக்கைகள் எடுத்து வரு கிறது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தினமும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்து உள் ளார்.
திருவட்டார் அருகே குமரன்குடி பகுதியில் மறை வான பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்யப்படு வதாக திருவட்டார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று மாலை திருவட் டார் போலீசார் குமரன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் நிற்பதை பார்த்து விசாரனை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
உடனே அவரை திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொண்டு விசாரனை செய்ததில் அவர் குலசேகரம் அருகே பழவிளை ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த வினோத் (வயது 23) என்று தெரிய வந்தது. அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட் டலம் எங்கிருந்து வருகிறது. இதன் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள்.
இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
- சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை பசு விற்பனையானது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்து நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 54 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை பசு விற்பனையானது.
- காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
- சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 56 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 36 மாடுகள் மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- கடும் குளிர் காலநிலையிலும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லி இன்று கிலோவுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.600 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 க்கு விற்ற முல்லை ரூ.200வரை விலை குறைந்து இன்று ரூ.400 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு) வருமாறு :-
மல்லிகை- ரூ.600, முல்லை- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.280, காக்கட்டான்- ரூ.200, கலர் காக்கட்டான் - ரூ.200, சி.நந்தியா வட்டம் - ரூ.180, சம்மங்கி- ரூ.15, சாதா சம்மங்கி- ரூ.30, அரளி- ரூ.150, வெள்ளை அரளி- ரூ.150, மஞ்சள் அரளி- ரூ.150, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.180, நந்தியா வட்டம்- ரூ.180. தற்போது ஐப்பசி மாத நிலவரப்படி குளிர் காலநிலை நிலவுகிறது.
வருகிற கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் குளிர் காலநிலை நிலவும். அதற்கடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வரை பூக்கள் விற்பனை சீசன் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
- காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
காங்கயம்:
காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகம் உள்ளது. வாரம் தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வாரம் கூடிய சந்தையில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், முதல் தரமான தக்காளி கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
- ஆவின் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தயாரிப்பு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- 20-ந்தேதி வரை நடைபெறும் எனவும்,
திருச்செங்கோடு:
69-ஆவது அனைத்திந்தி ய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கூட்டுறவு நிறுவன தயாரிப்பு பொருட்கள், ஆவின் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தயாரிப்பு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை மேளாவினை திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப்பதிவாளர் விஜயசக்தி தொடங்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன் விற்பனை மேளாவினைப் பார்வையிட்டார்.
இந்த விற்பனை மேளா வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் எனவும், பொதுமக்கள் விற்பனை மேளா நடைபெறும் நாட்களில் பொருட்களைப் பெற்று பயனடையுமாறும் கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 2 செல்போன்கள், ரூ.13ஆயிரம் பறிமுதல்
- கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் ஆன்லைன் மூலம் கேரளா மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகள் விற்பனை செய்து பணம் வசூலித்து வருவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் முகமது அசாருதீன் (வயது 23) என்பதும், தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.