என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடைமேடை"
- பயணிகள் ரெயில் நேரத்தை தஞ்சையில் மாலை 5.45 மணிக்கு புறப்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பூதலூர் ரெயில் நிலைய நடைமேடையில் இன்டிகேட்டர் போர்டு வைக்க வேண்டும்.
பூதலூர்:
தஞ்சாவூர் திருச்சிரா ப்பள்ளி ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தின் தலைவர் அய்யனாபுரம் நடராஜன் செயலாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜீவகுமார் ஆகியோர் திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில்வே மேலாளரை நேரில் சந்தித்து ரயில் நேரமாற்றம் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் தினமும் காரைக்கால்- திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் நேரத்தை தஞ்சையில் மாலை 5:45 மணிக்கு புறப்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வண்டி எண் 06646 திருக்காட்டுபள்ளி -மயிலாடுதுறை ரெயில் நேரத்தை திருச்சியில் காலை 7.35 மணிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
திருச்சிராப்பள்ளி -ஹவுரா விரைவு ரெயில் வேளாங்கண்ணி வரை நீடிக்கவும், மைசூர் விரைவு ரெயில், சோழன் விரைவு ரெயில்களில் முன் பதிவில்லா பெட்டிகளை கூடுதலாக இணைக்கவும்.
மயிலாடுதுறை -கோவை ஜனசதாப்தி விரைவு ரெயிலை பூதலூரில் இரு மார்க்கத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யவேண்டும்.
பூதலூர் ரெயில் நிலைய நடைமேடையில் முன் பதிவு பெட்டிகள் நிற்கும் இடம் குறித்து இன்டிகேட்டர் போர்டு வைக்கவும்.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேர சூப்பர் பாஸ்ட் விரைவு ரெயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தபட்டு இருந்தன.
- 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடைமேடைக்கு வந்தது.
- மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
தரங்கம்பாடி:
காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய ரெயில் நிலையமாக மயிலாடுதுறை ரெயில் நிலையம் உள்ளது.
பல ரெயில்களின் முக்கிய வழித்தடமாக இந்த ரெயில் நிலையம் உள்ளது.
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5.55 மணிக்கு மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்
1-வது நடைமேடையில் வரும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் அனைவரும் முதலாவது நடை மேடையில் தங்கள் பொருட்களுடன் கூடி இருந்தனர்.
ஆனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது.
இதனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்தி றனாளி பயணிகள் என அனைவரும் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரெயில் நிலைய நடை மேம்பால படிகளில் ஏறி மிகுந்த சிரமத்துடன் 2-வது நடைமேடைக்கு சென்றனர்.
சிலர் ரெயில்வே தண்டவா ளத்தில் இறங்கி கடந்து 2-வது நடைமேடையில் நின்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.
இதன் பின் 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடை மேடைக்கு வந்தது.
அப்போது 2-வது நடைமேடைக்கு சிரமத்துடன் தங்கள் உடைமைகளை சுமந்து வந்த பயணிகள் ரெயிலில் ஏற முடியாமல் மீண்டும் 1-வது நடைமேடைக்கு தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்றனர்.
இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
இது குறித்து ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை ரெயில் நிலைய மேலாளர் சுபம் குமாரை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
- நடைமேடை பயன்பாட்டுக்கு வராத காரணத்தால், ஒரு சில சமூக விரோத செயல்களும் அப்பகுதியில் நடைபெற்றது.
- நடைமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்து.
குனியமுத்தூர்,
கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு நடைமேடை ஒன்று நிறுவப்பட்டது.
ஆனால் நீண்ட ஆண்டுகளாக அது பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. மேலும் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால், ஒரு சில சமூக விரோத செயல்களும் அப்பகுதியில் நடைபெற்றது.
எனவே பயன்பாட்டிற்கு இல்லாத இந்த நடைமேடையை மாற்றி அமைத்து குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாநகராட்சி அங்கிருந்த நடைமேடையை அகற்றி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக நிறுத்தினர்.
பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக நடைமேடையை அரசு பள்ளி முன்பாக நிறுவப்பட்டது.
ஆனால் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக நிறுவப்பட்ட நடைமேடை இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அந்த நடை மேடையில் ஏறி யாருமே சாலையை கடந்து வலது புறம் இருந்து இடது புறம் சென்றதாக தெரியவில்லை.
பள்ளி மாணவ, மாணவிகளும் வழக்கம் போல சாலையின் குறுக்கே நடந்து தான் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் நடைமேடை அப்பகுதியில் அமைத்தும் பயன் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் வழக்கம் போல் தான் உள்ளது.
இது குறித்து பகுதி மக்கள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி சார்பாக இந்த நடைமேடைக்கு ஒரு திறப்பு விழா ஏற்பாடு செய்து, அதில் பொதுமக்களை நடக்க வைத்தால், அச்சூழ்நிலை சராசரியான வாழ்க்கையாக மாறிவிடும். அல்லது காலை மற்றும் மாலை சமயங்களில் பள்ளி முடிந்து வெளியே வரும் பள்ளி குழந்தைகளை நடை மேடையில் ஏறி, சாலையை கடந்து செல்வதற்கு அறிவுறுத்தலாம்.
இதை எதுவுமே இல்லாமல் செயல்படும் காரணத்தால் நடைமேடை வெறுமனே நின்று கொண்டிருக்கும் காட்சியை காண முடிகிறது. இன்னும் சொல்ல போனால் பழைய சூழ்நிலை போல் சமூக விரோத செயல்கள் இங்கு நடந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட்டு இந்த நடைமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களாகிய எங்களது கருத்து ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள் உள்ளது.
- நடைமேடைகள் நீளத்தை அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும்.
தென்காசி:
தென்காசியில் 540 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள், 507 மீட்டர் நீளம் கொண்ட ஒரு நடைமேடை, கீழப்புலியூர், மேட்டூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பேட்டை, நெல்லை டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் 405 மீட்டர் நீளம் கொண்ட ஒற்றை நடைமேடை, பாவூர்சத்திரம், கீழக்கடையம், சேரன்மகாதேவி ஆகியவற்றில் 405 மீட்டர் நீளம் கொண்ட 2 நடை மேடைகளும், அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகளும் உள்ளது.
நெல்லையில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பயணிகள் நடைமேடைகள், 2 சரக்கு லைன், ஒரு வி.ஐ.பி. லைன், 5 ஸ்டேபிளிங் லைன், 2 சிக் லைன் உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் நிறுத்துவதற்கு 540 மீட்டர் நீளம் கொண்ட நடைமேடை தேவை. தென்காசி மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் மட்டுமே தென்காசி - நெல்லை ரெயில் வழித்தடத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் உள்ளது. மற்ற நிலையங்களில் இல்லை.
இந்த மொத்த ரெயில் வழித்தடங்களின் நடைமேடைகளின் நீளத்தை நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்க முடியும்.
இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-
தற்போது நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில், அதிகபட்சமாக நெல்லை - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 பெட்டிகளுடனும், செங்கோட்டை - தாம்பரம் ரெயில் 17 பெட்டிகளுடனும் இயங்கி வருகின்றன. இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம், நெல்லை - தென்காசி வழித்தடங்களில் உள்ள முக்கிய ரெயில்வே கிராசிங் நிலையங்களான சேரன்மகாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நடைமேடைகளின் நீளத்தை 540 மீட்டர் வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும். எனவே நடைமேடைகளை கூடுதலாக 135 மீட்டர் நீளம் அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும். ஒரு நடைமேடையை நீட்டிப்பதற்கு தோராயமாக ரூ.15 லட்சம் வரை செலவாகும். எனவே தெற்கு ரெயில்வே உடனடியாக போர்க்கால அடிப்படையில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடை மேடை அமைக்க கோரி கோவை மாநகராட்சிக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
குனியமுத்தூர்:
கோவை குனியமுத்தூரில் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
காலை மற்றும் மாலை பள்ளி விடும் நேரத்தில், பள்ளி குழந்தைகள் சாலையை கடந்து செல்லும் போது சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் மாலையில் பள்ளி விடும் சமயத்தில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது.
இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.இதனால் பள்ளி முன்பாக நடைமேடை அமைக்கப்பட்டால் பள்ளி குழந்தைகள் நடை மேடை வழியாக சாலையை கடந்து, மறுபுறம் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே பயன்பாட்டில் இல்லாமல் ஒரு இரும்பால் ஆன நடைமேடை உள்ளது. கடந்த 5 வருடத்திற்கும் மேலாக நடைமேடை யாருக்கும் பயனில்லாமல் வீணாக நின்று கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் இந்த நடைமேைடயை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். நடைமேடை மேலே ஏறி நின்று பார்த்தால் பாட்டில்களையும் பிளாஸ்டிக் கப்புகளையும் காண முடிகிறது.
இத்தகைய சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அப்புறப்படுத்தி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக இந்த நடைமேடையை அமைத்தால் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்