என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 224562"

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இன்று காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜை, நாளை 2-ம் கால பூஜை மற்றும் கொடிமரம் வைத்தல், 3-ம் கால பூஜை, வருகிற 17-ந் தேதி 4-ம் கால பூஜை, காலை 9 மணியளவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல் நடைபெறவுள்ளது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. அதே நாள் இரவு புஷ்ப பல்லக்கில், கருட வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறவுள்ளது. விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    சேலம், வேலு நகரில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலு நகரில் பஸ் ஸ்டாப் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்பு வழக்கம்போல பூஜாரி கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்து. மேலும் அதில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற அறிந்த கோயில் நிர்வாகிகள் சம்பவம் குறித்து அன்னதானபட்டி போலீசில் புகார் அப்படி சொன்னார்.அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழாவையொட்டி காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. யானை மீது தீர்த்தக்குடம் ஏந்தியவாறு பக்தர் வர, மேளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். நேற்று மாலை, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    • சொக்க நாச்சி அம்மன் கோவிலில் கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டது.
    • இதை பற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள அம்மாபேட்ைட அடுத்த சித்தார் கேசரிமங்கலம் கொம்புத்தோட்டம் பகுதியில் உள்ள சொக்க நாச்சி அம்மன் கோவிலில் கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டது.

    இதை பற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது அருகே உள்ள ரைஸ்மில் பகுதியில் 2 பேர் சாக்கு மூட்டையில் பொரு ட்களை கட்டி கொண்டு இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மக்கள் அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை சோத னை செய்தனர். அதில் சாமி கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தங்கத் தாலி, குத்து விளக்கு 4, செம்பு குடம் 1, சொம்பு 1 உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணை யில் இந்த பொருட்கள் சொக்கநாச்சி அம்மன் கோவிலில் திருடப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பவானி போலீசாரிடம் பொது மக்கள் ஒப்படை த்தனர். போலீசாரின் விசார ணையில் அவர்கள் அம்மா பேட்டை அருகே உள்ள குறிச்சி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த ரவி விஜய் (42) மற்றும் குறிச்சி சமத்துவபுரம் பகுதி யை சேர்ந்த வேல்முருகன் (45) என்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவர்க ளிடம் இருந்து கோவிலில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டது.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரை யும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பவானி கோர்ட்டில் ஆஜர் படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் இன்று பிறந்த நாள்.
    • கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் குமரகிரி பே ட்டையை சேர்ந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற சார்பில் நாமமலை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி முதல் சனிக்கி ழமை யொட்டி பூஜை நடைபெறும்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்த னார் பிறந்த நாள் என்பதால் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரகிரி பேட்டை சேர்ந்த நாகராஜ், சின்னத்துரை, சந்திரசேகர், வைரமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதில் பனங்காட்டு மக்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் மோகனவேல், லட்சுமணன், திருப்பதி ஸ்டீல் கோபி மற்றும் நாடார் சமுதாய பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • பஸ் கடந்த வாரம் மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
    • இந்த நிலையில் அந்த பஸ் மீண்டும் விபத்தில் சிக்காமால் இருக்க வேண்டி பஸ் டிரைவர் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் பகுதியில் பஸ்சை நிறுத்தி பூஜைகள் செய்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. பர்கூரில் இருந்து மேற்கு மலை பகுதியான மணி யாச்சி கொங்காடை, செங்குளம், சின்ன செங்குளம், ஓசூர், ஒந்தனை உள்ளிட்ட பகுதி களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த பஸ் கடந்த வாரம் மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை அடுத்து அந்த பஸ் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டு மீண்டும் பஸ் இயக்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்த பஸ் மீண்டும் விபத்தில் சிக்காமால் இருக்க வேண்டி பஸ் டிரைவர் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் பகுதியில் பஸ்சை நிறுத்தி பூஜைகள் செய்தார்.

    மேலும் அந்தியூர் அருகே உள்ள குருநாதசாமி கோவிலிலும் பஸ்சை நிறுத்தி பூஜைகள் போடப்பட்டது. இதன் பிறகு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு மலைப் பகுதிக்கு சென்றது.

    • தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அவர் பூரண நலம் பெற வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக தட்டை பெற்றுக் கொண்டார்.

    அந்தியூர்:

    தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை யொட்டி அவர் பூரண நலம் பெற வேண்டி அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஈ.சுதாகர் தலைமையில் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக தட்டை பெற்றுக் கொண்டார்.

    முன்னதாக நகரப் பொரு ளாளர் விஜயகுமார் அனை வரையும் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அன்ன தானமும் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அன்ன தானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி செங்குந்தர் மாரியம்மன் மகா அபிஷேக குழு தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர அவை தலைவர் முருகன், அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன், செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவில் விழா குழு தலைவர்அரிபுத்திரன், 35-வது கோட்ட கவுன்சிலர் பச்சையம்மாள், 37-வது வார்டு உறுப்பினர் திருஞானம், 35-வது கோட்ட செயலாளர் சம்பத், 38-வது கோட்ட செயலாளர் ஜீவா என்கிற சிவகுமார்,ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    • கொடுமுடி அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலிபூஜை நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது,

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலிபூஜை நடைபெற்றது.இதனையொட்டி கிராமத்து பெண்கள் அனைவரும் கோவிலில் கூடினர். அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தியான அம்மன் விக்கிரகத்துக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு அம்மன் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டு பெண்கள் அனைவரும் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.

    அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது,

    • கோட்டைகாட்டுவலசு வெள்ளை முனிசாமி கோவில் கணபதி ஹோம பூஜையுடன் பொங்கல் விழா தொடங்கியது.
    • சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கொந்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை காட்டுவலசில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான வெள்ளை முனிசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கல் திருவிழா கொண்டாடுவது நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று கணபதி ஹோம பூஜையுடன் பொங்கல் விழா தொடங்கியது. காலை 10 மணியளவில் காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து முனிக்கு அபிசேகம் செய்தனர்.

    மதியம் பொங்கல் வைத்து வெள்ளைமுனிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். மாலை கிடாய் வெட்டினர். அதனை தொடர்ந்து வெள்ளை முனிக்கு சிறப்பு அபிசேகம், நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    இதனால் சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.


     



    விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த ராகி கூழ், கம்மங்கூழ், மோர், சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், லெமன் சாதம், புளி சாதம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கினர்.

    ஆடித் திருவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 11, 12ந் தேதி ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் கோவிலுக்கு விடிய, விடிய அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் வைக்கும் இடமான கோவில் பின்புறம் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர், அடுப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 16ந் தேதி காலை 10.30 மணிக்கு பால்குட விழாவும், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது. 

    • நேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
    • தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளை யம்நால்ரோடு அருகே மாருதிநகர் பகுதியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம் நால்ரோடு மாருதிநகரில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் சுயம்புலிங்க ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி சனிக்கிழமை ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சுயம்புலிங்க ஆஞ்சநேயர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், நெய், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்று, பக்தர்களுக்கு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு பூஜையில் கணக்கம்பட்டி அழுக்கு சித்தர் கோயில் பூசாரி சீனிவாசன், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்சாரியார் ராஜகோபால், பொன்னம் பாளையம் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து–கொண்டனர்.v

    ×