search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலங்கள்"

    • வக்பு வாரியத்துக்குச் சொந்தமாக மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் கொண்ட 8.7 லட்சம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது

    இஸ்லாமியர்களின் சமூகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்காக இயங்கி வரும் வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகச் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.

    சமீபத்தில் தலைநகர் டெல்லியில் உள்ள 123 சொத்துகளுக்கு வக்பு வாரியம் உரிமை கோரியிருந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே மத்திய அரசு தற்போது இந்த அதிகார குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல் உள்ளதாக தெரிகிறது.

    நாடு முழுவதும் தற்போது வக்பு வாரியத்துக்குச் சொந்தமாக மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் கொண்ட 8.7 லட்சம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சொத்துக்கள் மீது வக்பு வாரியம் உரிமை கோருவது தற்போது எளிதான ஒன்றாக உள்ளது. எனவே அதைக் கட்டுப்படுத்தும் வகையில் தன்னிச்சையாக எந்த ஒரு சொத்துக்கும் வக்பு வாரியம் உரிமை கோர முடியாதபடி புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதுதவிர்த்து வக்பு வாரியத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் உட்பட வக்பு வாரிய அதிகார வரையறையில் 40 திருத்தங்களைக் கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்க உள்ள நிலையில் இந்த புதிய மசோதா எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையில் இந்த மசோதா மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். 

    • தொழில் வளர்ச்சிக்காக பழுப்பு நிலக்கரி உள்ள நிலங்களை கையகப்படுத்திய நில உரிமையாளர்களிடம் நிலங்களை ஒப்படைப்பு
    • அனல்மின் திட்டத்திற்காக தொழில் வளர்ச்சிக்காக பழுப்பு நிலக்கரி உள்ள நிலங்களை ஒப்படைப்பு

    ஜெயங்கொண்டம்,  

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய கிறிஸ்டோபர் உத்திரவின் பேரில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அழகேசன், இந்த மக்கள் நீதிமன்றத்தினை தலைமையேற்று நடத்தினார்.இதில் 203 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்றும், மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (JLPP நிலம் எடுப்பு).வேலுமணி மற்றும் தேவகி கூறினர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம் உள்ளது.
    • இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள ஏரி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம், உத்தமபாளையம் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ஒரு வீட்டுடன் கூடிய 30 சென்ட் நிலம், இலக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரன் கோவிலுக்குச் சொந்தமான 14.04 ஏக்கா் நிலம் என மொத்தம் 20.34 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

    இது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை அறிவுறுத்தலின்பேரில் உதவி ஆணையா் கருணாநிதி தலைமையில் ஆக்கிரமிப்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நிலங்கள் மீட்கப்பட்டு கோவில் செயல் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    மேலும் மீட்கப்பட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    • பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக இருந்து வருகிறது.
    • 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்புகா வேரி பிரிவு வாய்க்காலில் வள்ளி செடிகள் , ஆகாய தாமரை செடிகள் மண்டியுள்ளது.

    அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.

    கடந்த ஆண்டு பருவ மழை காலங்களில் ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை, பொந்தையாகுளம் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    விவசாய நிலங்களை பாதுகாக்க நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள உடனடியாக ஜெம்புகாவேரி பிரிவு வாய்க்காலை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னரே தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெற்குப்பையில் நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கும் பணி நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நவனி கண்மாய் சுமார் 18 ஹெக்டர் பரப்பளவு கொண்ட கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து பாசனம் பெறும் ஆயக்கட்டு தாரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து அதிகப்படியான தண்ணீர் கண்மாய்க்கு வரத்து கால்வாய் மூலம் வந்தபோதிலும் ஆக்கிரமிப்பு மற்றும் சீமை கருவேல மரங்களால் கண்மாய் முழு கொள்ளவை எட்ட முடியாமல் கலிங்குகளின் பாதை வழியாக அதிகப்படியான தண்ணீர் வீணாக சென்று விட்டது என இந்தப்பகுதி விவசாயிகள் குறை கூறி னர். 

    இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கண்மாயின் கரைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்பு, தோட்டம் முதலிய ஏனைய காரணங்களுக்காக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த 14-க்கும் மேற்பட்ட வர்களுக்கு  ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளும்படி நீர்வள பாசன ஆதார துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

    இந்தநிலையில் நீர்வள ஆதார உதவி பொறியாளர் நாகராஜன் வருவாய் துறையினர் உதவியோடு ஜே.சி.பி. மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்ட போதிலும் ஆக்கிரமிப்புக்கு செய்யப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த வேப்பமரம், வாழைமரம், எலுமிச்சை, கொய்யா, போன்ற பல மரங்களும் இன்னும் ஏனைய பூச்செடி களும் முற்றிலுமாக அகற்றப்பட்டது. 

    இதுகுறித்து உதவி பொறியாளர் கூறுகையில் தொடர்ந்து நீர்நிலைப் பகுதிகள், வரத்து கால்வாய்க ளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு படிப்படியாக விரைந்து மீட்கப்படும் என்றார். 

     இதில் நீர்வள பாசன உதவியாளர் முரளி, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர்களான ரிஹானா பேகம், முனிஸ் குமார், கிராம உதவியாளர் முகமது அலி, மற்றும் பாதுகாப்பு பணிக்காக நெற்குப்பை காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ×