என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரன்கோவில்"

    • மண்டல செயலாளர் இன்பராஜ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஒப்பனையாள்புரம் காலனி குடியிருப்பு பகுதியில் சுடுகாடு அமைவதை வருவாய்த்துறையினர் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் கணேசன், ஊர் நாட்டாமைகள் பொன்ராஜ், காளிராஜ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி வரவேற்று பேசினார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் நெல்லையப்பன், சண்முகசுதாகர், தலைமை நிலைய செயலாளர் சேகர், மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, பொருளாளர் வெள்ளத்துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் கோபி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பெரியசாமி, இணைச் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, இன்பராஜ், சந்தன மாரியப்பன், வேல்முருகன், பெரிய துரை, மங்களராஜ், ராஜ்குமார், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

    • கேரள மாநிலம் திருச்சூரில் மணிகண்டன் இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
    • மணிகண்டனுக்கும், அவரது உறவினருக்கும், முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் தெற்கு பணவடலி சத்திரத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 40).

    கொலை

    இவர் கேரள மாநிலம் திருச்சூரில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மதுரை யில் வசித்து வந்தனர்.

    கடந்த 8-ந் தேதி கோவில் கொடை விழாவிற்காக மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் பணவடலிசத்திரம் வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    காரணம் என்ன?

    இதுதொடர்பாக பணவடலிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மணிகண்டனுக்கும், பணவடலிசத்திரத்தை சேர்ந்த அவரது உறவினருக்கும், முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் அப்பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை.

    தொழில் போட்டி காரணமா?

    இதற்கிடையே தொழில் போட்டி காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கி றார்கள்.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கேரளா சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வைரமுத்து 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலிவேலைக்கு சென்று வந்தார்.
    • விஷம் குடித்த வைரமுத்து தனது நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    நெல்லை:

    சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள உமையதலைவன்பட்டி கீழதெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் வைரமுத்து(வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலிவேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த 11-ந்தேதி மாலை அப்பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் அவர் விஷம் குடித்தார். அதன்பின்னர் அவர் தனது நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று வைரமுத்து உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக வைரமுத்து உப்புச்சத்து நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்முகநாதன் சங்கரன்கோவிலை சேர்ந்த சகாயமேரி மீது போலீசில் புகார் அளித்தார்.
    • சண்முகநாதன்,மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நில தகராறு சம்பந்தமாக சங்கரன்கோவிலை சேர்ந்த சகாயமேரி என்பவர் மீது சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்த விசாரணைக்காக 2 தரப்பினரும் சம்பவத்தன்று போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது 2 தரப்பினரும் போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க முயன்ற முதல்நிலை காவலர் அருணாசலம் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அருணாசலம் அளித்த புகாரின் பேரில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக மணிகண்டன், சண்முகநாதன் மற்றும் சகாயமேரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சண்முகநாதன் மற்றும் மணிகண்டனை போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.சகாயமேரியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திறப்பு விழாவுக்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
    • பூங்காவை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் காவேரி நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைசெயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார் சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், முகேஷ் மற்றும் கேபிள் கணேசன், வெங்கடேஷ் வீரமணி, வீரா, ஜிந்தா மைதீன், சம்பத், ஜெயகுமார், பிரகாஷ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரநாராயண சுவாமி கோவிலில் 2020-ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.
    • கோவில் ராஜகோபுரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2008-ம் ஆண்டு நடந்தது. அதனைத் தொடர்ந்து 2020-ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் தள்ளிப் போனது. இதனால் ராஜா எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கும்பாபிஷேகம் மற்றும் ஆயிரம் ஆண்டு விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதுகுறித்து அறநிலை யத்துறை சார்பில் சங்கரன் கோவில் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதனை தொடர்ந்து கும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.7.50 கோடி செலவில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் கோவிலில் செப்பணிட திருப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு குடமுழுக்கு 2023-ம் ஆண்டுக்குள் நடத்திடவும்,

    மேலும் கோவிலின் ஆயிரமாவாது ஆண்டு விழாவும் நடத்தப்படும் என அறிவித்தார். மேலும் கும்பாபிஷேக பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது கோவில் விமானங்கள் ராஜகோபுரம் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடங்கி உள்ளது. கும்பாபிஷேக பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், மாணவரணி கார்த்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த குமாஸ்தாமுருகன், வீராசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • வட்டாரக்குழு உறுப்பினர் சி.கே குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் சி.கே குமார் தலைமை தாங்கினார். வெள்ளத்துரை முன்னிலை வகித்தார்.

    தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்துப்பாண்டியன், சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு கண்டித்தும். ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் வட்டார குழு உறுப்பினர் முருகன், சி.ஐ.டி.யு. ரத்தினவேல், தமிழ்நாடு விவசாய சங்கம் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் அனைவரும் படிப்பு மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தனி கவனம் செலுத்த வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.
    • சங்கரன்கோவில் பகுதியில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள சூழ்நிலை உள்ளது என்று ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு விளை யாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயமாதா பள்ளியில் நடந்தது.

    விளையாட்டு உபகரணங்கள்

    நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் நகர செய லாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி முன்னிலை வகித்தனர். இதில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் மீது அதிக பிரியம் மிகுந்த அக்கறை உள்ளவர். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் குழந்தைகளை கண்டால் வாகனத்தில் இருந்து இறங்கி குழந்தைகளிடம் கலந்துரை யாடல் செய்துவிட்டு தான் செல்வார்.

    நிலத்தடி நீர்

    மேலும் குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல முத்தான திட்டங்களை அறிவித்து வருகின்றார். குழந்தைகள் அனைவரும் படிப்பு மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    சங்கரன்கோவில் பகுதியில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள சூழ்நிலை உள்ளது. எனவே மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் மரக்கன்றுகளை நட வேண்டும். இதனால் நிலத்தடி நீர் உயரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    தொடர்ந்து குழந்தை களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி நிர்வாகிகள் ஆரோக்கிய மேரி, ஜோசப்சின்னத்துரை, நகர அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், இளைஞர் அணி சரவணன், மாணவரணி கார்த்தி, அப்பாஸ்அலி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, நகராட்சி கவுன்சிலர்கள் ராஜா ஆறுமுகம், புஷ்பம், விஜயகுமார் மற்றும் யோசேப் செல்வராஜ், கே.எஸ்.எஸ். சங்கர், தாஸ், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
    • சில்லிகுளம் ஆதி திராவிடர் காலனியில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் பெரியதுரை தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். சங்கரன்கோவில் டி.டி.டி.ஏ. மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நவநீதகிருஷ்ணாபுரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு பெரிய கோவிலான் குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து இந்திரா காலனியில் ராஜா எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பெரிய கோவிலான்குளத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டுப் பொரு ட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சில்லிகுளம் ஆதி திராவிடர் காலனி ராஜா எம்.எல்.ஏ. தொகுதி மேம்பா ட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    தொடர்ந்து குருக்கள்பட்டி அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள், குருக்கள்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி மாணவ -மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கருத்தானூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் அவைத் தலைவர் பரமையா, ஒன்றிய துணைச் செயலாளர் சின்னக்குருசாமி, சந்திர சேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், செந்தூர்ப்பாண்டியன், பொருளாளர் முத்து ப்பாண்டியன், வர்த்தக அணி செந்தில்குமார், வக்கீல் அணி தனசேகரன், அய்யாதுரை, சங்கரன்கோவில் நகரக் செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், முகேஷ், விவசாய தொழிலாளர் அணி குமாஸ்தா முருகன், ஆதிதிராவிடர் நல அணி ஒப்பந்தக்காரர் ராஜ் என்ற கருப்பசாமி, சிறுபான்மையின் நல அணி மரியலூயிஸ்பாண்டியன், பசுபதிபாண்டியன், வீராசாமி, மாணவர் அணி வீரமணி, வக்கீல் சதீஷ்குமார், கோ மருதப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள், பெரியகோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைப்பாண்டியன், மலையாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், இலந்தைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஜெயலட்சுமி கிளைக் கழகச் செயலாளர் துரை, கருத்துப்பாண்டியன், அவை தலைவர் கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலுச்சாமி மீது அவரது மனைவி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் உமாவிற்கு,வேலுச்சாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கக்கன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் வேலுச்சாமி (வயது 23). இவரது மனைவி துரைச்சி. வேலுச்சாமி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுச்சாமி மீது அவரது மனைவி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வேலுச்சாமி டவுன் போலீஸ் நிலைய த்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் உமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெ க்டர் உமா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர்.

    • கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் கருத்தரங்க மாநாடு நடந்தது.
    • ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனியாக விவாத அரங்குகள் அமைக்கப்பட்ட இருந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக் கல்லூரியில் கொரோனா காலத்திற்குப் பிந்தைய உலக நிலவரங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச பல்துறை கருத்தரங்க மாநாடு கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் நடந்தது.

    பாவூர்சத்திரம் செந்தூர் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் கணேசன் வரவேற்றார்.

    பேராசிரியர் சகிலா பானு வாழ்த்தி பேசினார்.கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில், கொரோனா காலத்திற்கு பிந்தைய உலக நடப்புகள் என்ற தலைப்பில் நடக்கும் இந்த மாநாட்டில் பேசப்படுகின்ற கருத்துக்களை மாணவ-மாணவிகள் மனதில் பதிய வைத்து தங்களுடைய கல்வி மேம்பாட்டிற்காகவும் வாழ்க்கையின் முன்னேற்றத் திற்காகவும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    தொடர்ந்து மலேசியா நாட்டின் மஹ்சா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்டனி சாம்ராட் பேசுகையில், கொரோனா வைரஸ் எவ்வாறு உருமாற்றம் பெறுகிறது, நமது உடலின் உள்ளுறுப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி எடுத்துக் கூறி, கொரோனா பாதித்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய உடல் நிலையை மருத்துவரின் ஆலோசனையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

    பின்னர் மலேசியா மஹ்சா பல்கலைக்கழகம் மற்றும் சங்கரன்கோவில் மனோ கல்லூரி இடையே பேராசிரியர்கள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    தென்கொரியா பல்கலைக்கழகப் பேராசிரி யர் டாக்டர் பவட், நியூயார்க் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் பிரவீன் சூசை ஆண்டனி ஆகியோர் ஆன்லைன் வழியாகவும் கலந்து கொண்டு பங்கேற் பாளர்களின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    தொடர்ந்து ஒவ்வொரு துறைகளுக்கும் தனித் தனியாக விவாத அரங்கு கள் அமைக்கப்பட்டு அந்த துறைகள் பற்றி எடுத்துரைக் கப்பட்டது.

    இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் நவநீத கிருஷ்ணன், பேராசி ரியர்கள் முருகையா, சந்தானகுமார், பேராசிரியர்கள்நெல்லை வக்கீல் முருகேசன், வித்யா, சாரநாதன் பாலமுருகன், லெனின் செல்வநாயகம், பால் மகேஷ், ஆனந்தகுமார், மகாலட்சுமி, நாகம்பட்டி ராம பாண்டி, உதயசங்கர், புஷ்பராணி, அருள் மனோகரி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் செய்திருந்தார்.

    • கோல போட்டியில் முதல் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்படுகிறது.
    • கபடி போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம் வழங்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான மாபெரும் கோலப்போட்டி, கபடி போட்டி மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை நடைபெறுகிறது. இதில் அனைவரும் பங்கேற்கலாம். கோல போட்டியில் முதல் பரிசாக பிரிட்ஜ், 2-ம் பரிசாக கிரைண்டரும், 3-வது பரிசாக மிக்ஸி வழங்கப்படுகிறது. தொடர்ந்து 12 பேருக்கு ஆறுதல் பரிசாக பிரஷர் குக்கர் வழங்கப்படுகிறது. கபடி போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10ஆயிரம், 3-ம் பரிசு மற்றும் 4-ம் பரிசு ரூ.5ஆயிரம் வழங்கப்படும். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 9080404049 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×