என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.எஸ்"
- ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தையல் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படுகிறது.
- பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை திருவண்ணாமலை சாலை ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 32). இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகர். இவர் டிஜிட்டல் சேவா மையம் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு அருகில் வெங்கடாசலபதி என்பவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடாசலபதி தனது தையல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இரவு 10.30 மணியளவில் அந்த தையல் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இது தொடர்பாக வெங்கடாசலபதிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அறிந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சந்திரசேகரும் கடைக்கு சென்று பார்த்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தையல் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.
- ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடல், ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஆஷா போஸ்லேவின் கிரக்கும் குரலுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை மும்பையில் வைத்து நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜாக்கி செராப் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை முத்தமிட்டு தண்ணீரால் கழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீரால் ஆஷாவின் கால்களைக் கழுவித் துடைத்த சோனு நிகாம் பின் எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சோனு நிகாம் தமிழில் அஜித்தின் கிரீடம் படத்தில் இடம்பெற்ற விழியினில் உன் விழியினில், ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ஆருயிரே, கார்த்தியின் சகுனி படத்தில் இடம்பெற்ற மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடுயுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
- 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைத் தாமதம் இன்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்க வேண்டும்
2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில்,பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைத் தாமதம் இன்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்கி அதைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட அந்த 88 புத்தகங்களில், ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, தினநாத் பத்ரா, டி. அதுல் கோதாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வசேல்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் அடங்கும். இவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதியில் அங்கம் வகித்தவர்கள் ஆவர்.

இதைத்தவிர்த்து மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் குறித்து விலகிச் சொல்ல, அனைத்து கல்லூரிகளிலும், பாரதிய கியான் பரம்பரா ப்ரக்சோதா [பாராபரிய அறிவை கற்றுத்தரும்] செல்களை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- சேவை தர்மத்தை கடைபிடிக்கும் போது தீவிரவாதமாக மாறக்கூடாது.
- மனித மதம் உலக மதம். அதை சேவை உணர்வில் வெளிப்படுத்த வேண்டும்.
புனே:
இந்து ஆன்மிக சேவை அமைப்பு சார்பாக இந்து சேவா மஹோத்சவ் நிகழ்ச்சி புனேவில் தொடங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுக்கு சேவை செய்பவர்கள், காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறார்கள். சேவை தர்மத்தை கடைபிடிக்கும் போது தீவிரவாதமாக மாறக்கூடாது. மனித மதம் உலக மதம். அதை சேவை உணர்வில் வெளிப்படுத்த வேண்டும்.
இந்து மதம் உலக அமைதியை வலியுறுத்துகிறது, ஆனால் சிறுபான்மையினரை கவனித்துக்கொள்வதும் முக்கியம். நமது வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும், ஆனால் அதற்கேற்ப இரட்டிப்பு சேவையையும் செய்ய வேண்டும்.
மனிதநேயத்தின் மதம் உலகின் மதம், அதை சேவையின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். நாம் உலக அமைதி கோஷங்களை எழுப்புகிறோம், ஆனால் மற்ற இடங்களில் சிறுபான்மையினரின் நிலை என்ன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் வருங்கால சந்ததியினரை ஊக்குவிப்பதும், சேவை மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதும் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
தீவிரவாதம், ஆக்கிரமிப்பு, பலாத்காரம், மற்றவர்களின் கடவுள்களை அவமதிப்பது ஆகியவை நமது கலாச்சாரம் அல்ல. ராமர் கோவில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அது கட்டப்பட வேண்டும் என்று இந்துக்கள் கருதினார்கள்.
இதை முன்மாதிரியாக கொண்டு பல்வேறு இடங்களில் சர்ச்சைகளை எழுப்பும் இந்து தலைவர்களின் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்தியர்கள் கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தங்கள் நாட்டை உலகிற்கு முன்மாதிரியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் வழிபாடுகளை மேற்கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். சிறுபான்மையினரின் பிரச்சனைகளைத் தீர்க்க இந்தியா அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் மற்ற நாடுகளில் சிறுபான்மையினர் என்ன வகையான மோசமான சூழ்நிலைகளை சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை இப்போது உலகம் பார்க்கிறது.
நம் நாட்டில் சிறுபான்மையினரைப் பற்றி நாம் அடிக்கடி கவலைப்படுகிறோம். அனைத்து மதங்கள் மற்றும் சித்தாந்தங்களின் இணக்கமான சகவாழ்வுக்கு இந்தியா முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலங்களின் தோற்றம் குறித்து இந்து அமைப்பினர் சர்ச்சைகள் ஏற்படுத்திய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- ராமர் கோவில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அது கட்டப்பட வேண்டும் என்று இந்துக்கள் கருதினார்கள்
- இந்துக்களின் தலைவராவதற்காக சிலர் இந்த பிரச்சனைகளை எழுப்புவதாக மோகன் பகவத் கூறுகிறார்.
இந்து ஆன்மிக சேவை அமைப்பு சார்பாக இந்து சேவா மஹோத்சவ் நிகழ்ச்சி புனேவில் தொடங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "ராமர் கோவில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அது கட்டப்பட வேண்டும் என்று இந்துக்கள் கருதினார்கள். இதை முன்மாதிரியாக கொண்டு பல்வேறு இடங்களில் சர்ச்சைகளை எழுப்பும் இந்து தலைவர்களின் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது. அதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல" என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் தோற்றம் குறித்து இந்து அமைப்பினர் சர்ச்சைகள் ஏற்படுத்திய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் பேச்சு முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில் இந்துக்களின் அவலநிலை மோகன் பகவத்திற்கு புரியவில்லை என்று சங்கராச்சாரியார் ஸ்வாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பல இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. மோகன் பகவத்திற்கு இந்துக்களின் வலி புரியவில்லை. இந்துக்களின் அவலநிலை அவருக்கு புரியவில்லை என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது.
இந்துக்களின் தலைவராவதற்காக சிலர் இந்த பிரச்சனைகளை எழுப்புவதாக மோகன் பகவத் கூறுகிறார். ஆனால் சாதாரண இந்துக்கள் தலைவராக ஆசை படுவதில்லை என்பதை நான் அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
- மராத்தி தான் மும்பையின் மொழி என்று MLA ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையின் மூலம் இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மராத்தி குறித்து பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
இந்த விவகாரம் குறித்து பேசிய எம்.பி. சஞ்சய் ராவத், "பாஜகவின் கொள்கை வகுப்பாளரும் ஆர்.எஸ்.எஸ் தலைவருமான பையாஜி ஜோஷி, மராத்தி மும்பையின் மொழி இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் கொல்கத்தாவிற்கு சென்று பெங்காலி அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா? அவர் சென்னைக்கு சென்று தமிழ் அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா?" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
- கடந்த மக்களவை தேர்தலின் போது இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது
- நம்முடைய நாட்டின் பெயர் பாரத். நாம் அப்படி தான் அழைக்கவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய தத்தாத்ரேய ஹோசபாலே, "நம்முடைய நாட்டின் பெயர் பாரத். நாம் அப்படி தான் அழைக்கவேண்டும். இந்தியா என்பது ஆங்கில பெயர். நம்முடைய நாட்டின் பெயர் பாரத் என்றால், இந்திய அரசியலமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்ட காலனித்துவப் பெயரான 'இந்தியா'வை இன்னும் ஏன் பயன்படுத்துகின்றன. இதை நாம் பாரத் என்று மாற்றம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தியா Vs பாரத் கருது தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "நமது நாட்டை பாரத், இந்தியா மற்றும் இந்துஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம்.
இந்திய விமானப்படை, இந்திய ராணுவம் என்று தான் நாம் அழைக்கிறோம், மேலும் 'சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹுமாரா' பாடலையும் பாடுகிறோம்" என்று தெரிவித்தார்.
2024 மக்களவை தேர்தலின்போது எதிர்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என்று வைத்தனர். இதனையடுத்து இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
நாக்பூர்:
ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
உ.பி., மாநிலம் வாரணாசியில் இருக்கும் ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில், நடத்தப்பட்ட ஆய்வில், சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மசூதிகளிலும் இதுபோன்ற ஆய்வை நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் குரல் கொடுத்தனர்.
இந்த விவகாரம் குறித்து நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஞானவாபி சர்ச்சை சில நம்பிக்கை சிக்கல்களை உள்ளடக்கியது. இதனை இரு சமூகத்தினரும் பேசிதான் தீர்த்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் வாயிலாக முடிவு வந்தால், அதனை இரு தரப்பினரும் ஏற்று கொள்ள வேண்டும். ஞானவாபி பிரச்னையின் வரலாற்றை நாம் மாற்ற முடியாது. அதனை, இன்றைய ஹிந்துக்களோ அல்லது இஸ்லாமியர்களோ செய்யவில்லை. இந்த விவகாரம் எப்போதோ நடந்தது.
இந்தியா மீது படையெடுத்த வந்தவர்கள், இங்கிருந்தவர்கலின் மன உறுதியை குழைக்க கோவில்களை இடித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஹிந்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பண்டைய காலத்தில் முஸ்லிம்களும், ஹிந்துக்கள் தான் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
தினமும் புதிய புதிய பிரச்னைகளை வெளிக்கொண்டு வரக்கூடாது. பிரச்னையை நாம் ஏன் பெரிதாக்க வேண்டும். ஹிந்துக்கள் எந்தவொரு பிரச்னையை எழுப்பும் முன்னர், முஸ்லிம்களும் நமது மக்கள்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் நம்பிக்கை மட்டுமே மாறியுள்ளது. அவர்கள் திரும்பி வர தயாராக இருந்தால், திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் விரும்பாவிட்டாலும், நாம் அதிருப்தி அடைய தேவையில்லை. இதை வைத்து ஒவ்வொரு மசூதியிலும் நாம் சிவலிங்கத்தை தேடிக்கொண்டிருக்க கூடாது.
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.