என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டி"

    • மகளிருக்கான சாலையோர சைக்கிள் போட்டி நடந்தது
    • உடற்கல்வி ஆய்வாளர் தொடங்கிவைத்தார்

    பெரம்பலூர்:

    பள்ளிக்கல்வி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான மகளிருக்கான புதிய விளையாட்டுகளான சிலம்பம், ஜூடோ , சாலை யோர சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார். சிலம்பம், ஜூடோ , சாலை யோர சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.

    சாலையோர சைக்கிள் போட்டியில் 14 வயதில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பேரழகி முதலிடத்தையும், பாடாலூர் ஸ்ரீ அம்பாள் மேல்நிலைப்பள்ளி மாணவி தியா இரண்டாம் பரிசினையும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி மூன்றாம் பரிசினையும் வென்றனர்.

    17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மிருதுல்லா முதலிடத்தையும், கிழுமத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஷினி இரண்டாம் பரிசினையும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா மூன்றாம் பரிசினையும் வென்றனர்.

    19 வயதுக்குட்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேவிகா முதல் பரிசினையும், காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா இரண்டாம் பரிசினையும், கிழுமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தோஷினி மூன்றாம் பரிசினையும் வென்றனர்.

    ஜூடோ போட்டியில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜான்சிராணி முதலிடத்தையும், அகரம் புனித மேரிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவிகா இரண்டாம் இடத்தையும், சிலம்பம் போட்டியில் புதுவேட்டடக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சாருலதா முதலிடத்தையும், மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தி இரண்டாம் இடத்தையும், துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்லம்மாள் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

    இந்த போட்டிகளில் முதலிடத்தை பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    • இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது
    • இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    சேலம்:

    இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், இமாசல பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    தமிழ்நாடு அணி சார்பில் சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி பாரதியார் கலை அறிவியல் கல்லூரி மாணவி கார்த்திகா, ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்திஷா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதனை தொடர்ந்து அகில இந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் சாதனை படைத்த 2 வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று அழகாபுரத்தில் நடந்தது. இதில், சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சேலத்தை சேர்ந்த 2 வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவர் ராஜாராம், கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்கலைக்கழக அளவிலான கூடைப்பந்து போட்டியில் செய்யது ஹமீதா கல்லூரி முதலிடம் பெற்றது.
    • கீழக்கரை அணி 43-23 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

    கீழக்கரை,

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே 2022-23-ம் ஆண்டிற்கான கூடைப்பந்து போட்டி தேவகோட்டையில் நடந்தது.

    இதில் 22-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த கூடைப்பந்து அணிகள் பங்கேற்றன. போட்டிகளை அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    இறுதிப் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரி அணியும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணியும் மோதியது. இதில் கீழக்கரை அணி 43-23 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

    முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப், செயலர் ஷர்மிளா, இயக்குநர்கள், முதல்வர் சதக்கத்துல்லா, உடற்கல்வி இயக்குநர் தவசலிங்கம் ஆகியோர் கூடைப்பந்து அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • கரூர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது
    • பள்ளிக்கல்வித்துறை சார்பில்

    கரூர்:

    தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள அமுதசுரபி தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கரூர் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது, போட்டியில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்,

    60 கிலோ எடை பிரிவில் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் செயிண்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆதித்யா மாவட்டத்தில் அளவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர் 60 கிலோ எடை பிரிவில் மாவட்ட அளவில் திலீப் முதலிடம் பெற்றுள்ளார்,

    17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் மாவட்ட அளவில் ஸ்ரீ கிருஷ்ணா முதலிடம் பெற்றுள்ளார். 14 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் கனிஷ்கா மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர்கள் அடுத்த மாதம் மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இவர்களை செயிண்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் கிரேஸி, விளையாட்டு ஆசிரியர் பூமொழி சிலம்பரசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • மாநில இறகு பந்து போட்டிக்கு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடத்தியது.

    இதில் 19 வயதிற்குட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

    வெற்றி பெற்ற மாணவியை முதல்வர் புஷ்பம், உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • தேசிய அளவில் 2-வது முறையாக வினாடி-வினா போட்டி மாணவ, மாணவிகள் வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
    • கடைசி தேதி 20.11.2022 ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் தேசிய அளவில் 2- வது முறையாக Fit India Quiz Competition நடக்கிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ-மாணவிகள் மத்திய அரசின் வலைதளமான https://fitindia.nta.ac.in-ல் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.

    இந்த வினாடி-வினா போட்டியில் ஒரு பள்ளியில் 2 மாணவா்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மாணவா்கள் பதிவு செய்தால் ஒரு மாணவருக்கு ரூ.50 வீதம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதற்கான கடைசி தேதி 20.11.2022 ஆகும்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு, சிவகங்கை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சோ்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று காலை சேலம் காந்தி ஸ்டேடியத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    இதை துணை கமிஷனர்கள் ராதா–கிருஷ்ணன், மாடசாமி, லாவண்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மினிமாரத்தான் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து 4 ரோடு, புதிய பஸ் நிலையம், ஏ.வி.ஆர் ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதையொட்டி முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது.
    • இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல்மாவட்டம் பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் உடற் கல்வித் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.

    இப்போட்டிக்கு கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் தங்கராஜ் தலைமை தாங்கினார். கலந்து கொண்ட அணிகளை உடற்கல்வித்துறை இயக்குனர் சிவகுமார் வரவேற்று பேசினார். பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

    கபடி போட்டிகளை கந்தசாமி கண்டர் அறநிலையத்துறை தலைவர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் சேலத்தைச் சேர்ந்த கணேஷ் கல்லூரி முதல் பரிசையும், சேலத்தைச் சேர்ந்த ஏ.வி.எஸ் கல்லூரி 2-ம் பரிசையும், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி 3-ம் பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி நிர்வாகம் செய்திருந்ததது.

    • மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு.
    • 12வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பெருமாநல்லூர் : 

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்கா செங்கபள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மற்றும் ஸ்ரீ குமரன் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளிகளின் 12வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி ரெயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன், கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். 

    விழாவிற்கு வந்திருந்தவர்களை ஸ்ரீகுமரன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளி வரவேற்றுப் பேசினார். மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். சிறப்பு அழைப்பாளராக தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ராஜசேகர் கலந்துகொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை இரு பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். 

    • திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    பெரம்பலூர்

    உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வி அறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் 'திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,330 குறட்பாக்களையும் மனனம் (மனப்பாடம்) செய்து ஒப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசாக தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி 2022-23-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ-மாணவிகள் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி மாலைக்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04328-225988 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்."

    • சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அன்னைசத்யா விளையாட்டு அரங்கில் இன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி களுக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இதனை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட செவிதிறன், பார்வையாற்றோர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட 600-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகிறது.

    இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாற்று திறனாளிகள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுவாமிநாதன் செய்திருந்தார்.

    • ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான பள்ளியில் டென்னிஸ் போட்டி தொடங்கியது.
    • 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடி- வல்லம் சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டி தொடங்கியது.

    இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தொடக்க விழாவிற்கு ரம்யா சத்தியநாதன் கல்வி குழும தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். ரம்யா சத்தியநாதன் கல்வி குழும செயலாளர் ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணை முதல்வர் அம்பேத்கர் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.

    பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் விளையாட்டு போட்டி பணிகளை செய்து வருகின்றனர்.

    ×