என் மலர்
நீங்கள் தேடியது "தீயணைப்பு"
- தீயணைப்பு துறையினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
- ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த கழுவன்திட்டை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மாலை நேரத்தில் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
அங்கு மது குடிப்பவர்கள் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம். நேற்று இரவு மது அருந்தி வந்த ஒருவர் மேம்பாலத்தின் மேல் பகுதியில் அமர்ந்துள்ளார்.
அப்போது திடீரென நிலைதடுமாறி அவர் பள்ளத்தில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள்அங்கு ஓடி வந்தனர். அவர்கள் பள்ளத்தில் விழுந்தவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பள்ளம் மிகவும் ஆழமான பகுதி என்பதாலும், அங்கு மின் விளக்கு வெளிச்சம் இல்லாததாலும் அவரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த நபரை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடிபோதையில் பள்ளத்தில் விழுந்தவர் அருமனை பகுதியை சேர்ந்த செல்வன் (வயது 43) என தெரிய வந்தது.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அப்பகுதியில் முள்வேலி அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆயுதங்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது
- தீ விபத்தில் உயிரிழந்த வர்களின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த நினைவிடத்தில் மலர் வளையம்
கன்னியாகுமரி :
1944-ம் வருடம் ஏப்ரல் மாதம் சுமார் மதியம் 2 மணி அளவில் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் போர்ட் ஸ்டிக்னி என்ற சரக்கு கப்பலில் வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை நகரமே பூகம்பம் போல் அதிர்ந்து குலுங்கியது.
அப்போது தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைக்கும் படை வீரர்கள் தீயில் கருகி இறந்தார்கள். அவர்களின் தொண்டினை போற்றும் பொருட்டும் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் தியாகத்தினை போற்றும் பொருட்டும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு நாளாக கடைபி டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்தில் தீயணைப்பு தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் மும்பை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைக்கும் படை வீரர்களுக்கு நீத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜவகர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் நீத்தார் நினைவு அஞ்சலி கடைப்பிடித்தனர்.
- வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தால் தொடர்ந்து தீ விபத்துகள் நிகழ்ந்தன
- பல்வேறு வகையான மீட்பு முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகர்கோவில் :
கோடை காலங்களில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மே மாதம் வரை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தீ விபத்து நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. மழை அதிகமாக இருக்கும் சமயங்களில் தீ விபத்து நிகழ்வதில்லை.
இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தால் தொடர்ந்து தீ விபத்துகள் நிகழ்ந்தன. இதுபோன்ற தீ விபத்துகளை தடுக்கும் வகையிலும், தீ விபத்து ஏற்படும் இடங் களில் உடனடியாக அதை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுக்கும் வகை யிலும் வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு உபகரணங்கள் தமிழக அரசு உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.
பயர் லைன் அமைப்ப தற்கான காற்று அடிப்பான் கருவி, புகை தடுப்பு கண்ணாடி கள், தீக்கவச உடைகள், தீ கவச காலணி கள் உள்ளிட்டவை வழங்கப் பட்டுள்ளன.
இதன் அடுத்த கட்டமாக தீயணைப்பு துறை சார்பில், வனத்துறையின ருக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் படி கீரிப்பாறை வன அலுவலகத்தில் வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வன பணியாளர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் காட்டு தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் பல்வேறு வகையான மீட்பு முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் இமானுவேல், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் துரை, அழகிய பாண்டிபுரம் வனச்சரகர் மணிமாறன் மற்றும் தீய ணைப்பு துறை யினர் கலந்து கொண்டனர்.
- வாடிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடர் மீட்புப் பணி செயல் விளக்கம் நடந்தது.
- நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு பணி செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். இதில் தீ பேரிடர் காலங்களில் உயிர்களை எப்படி காப்பாற்றுவது, எப்படி தற்காத்துக் கொள்வது, எப்படி மீட்புப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஆலை தொழிலாளர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
- மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டியும், அடுத்த தீபாவளி பண்டிகைக்காகவும் பட்டாசு தயாரிப்பு தொழில் தற்போது முதலே மும்முர மாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சிவகாசியை அடுத்த எம்.மேட்டுப்பட்டியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஆர்.ஜி.எஸ். பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 10 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது. இதைப்பார்த்த தொழிற் சாலைக்கு வந்தவர்கள் உள்பட அனைவரும் அவச ரம், அவசரமாக வெளியேறி னர். அடுத்த ஒருசில விநாடிகளில் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
தொழிலாளர்கள் பணிகளை தொடங்கு முன்பாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ அருகில் உள்ள அறைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை பட்டாசு உற்பத்தி பணியின்போது எஞ்சிய மூலப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக மூலப் பொருட்கள் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
தாளவாடி, ஜூன்.16-
ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்க ப்பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்விளக்கத்தை பார்வையிட்டனர்.
மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.