என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராணுவவீரர்"
- ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
- உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் ஜெய்ஜவான்(41). இவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி(31) என்ற மனைவியும், ருத்ரன்(4) என்ற மகனும், பிரியதர்சினி(8) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 22 ஆண்டுகளாக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறைமுடிந்து அருணாசலபிரதேசத்திற்கு பணிமாறுதலில் சென்றார். அங்கு உள்ள ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராணுவ அதிகாரிகள் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் போடி சங்கராபுரத்திற்கு கொணடுவரப்பட்டது. இன்று காலை ஜெய்ஜவான் உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
- ராணுவவீரரான சுரேஷ் இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- பாத்திரங்களை ஆலங்குளத்தில் உள்ள ஒரு பாத்திரக் கடையில் விற்றது விசாரணையில் தெரியவந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது31). ராணுவவீரரான இவர் இரட்டை கொலை வழக்கில் கைதாகி தூத்துக் குடி பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருட்டு
இவரது வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. சம்பவத்தன்று அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பித்தளை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சுரேசின் நண்பரான அதே பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் (32) என்பவர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது
கைது
அலெக்சின் சகோதரர் பிரதீப் குமார், அவரது நண்பர்கள் சுரேஷ்குமார், பிரகாஷ், இந்திரஜித் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த பாத்திரங்களை ஆலங் குளத்தில் ஒரு பாத்திரக் கடையில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
- நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் உடலை மீட்டனர்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா (வயது38).
இவர் திருச்சியில் உள்ள ராணுவ பட்டாலி யனில் ஹவில்தாராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று தனது அண்ணன் மகன்களான சூர்யா (18), ஹரீஷ் (12) மற்றும் மனைவி சுகன்யாவுடன் அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.
இவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சூர்யாவும், ஹரீசும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
இதை பார்த்த ஆரோன் இளையராஜா, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த அண்ணன் மகன்கள் 2 பேரையும் மீட்டார். பின்னர் அவர் கரைக்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் திருக்காட்டு ப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா உடலை மீட்டனர்.
தகவல் அறிந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆரோன் இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தக்கலையைச் சேர்ந்த ராணுவ வீரர்
- பணிபுரியும் இடத்தின் அருகே உள்ள மரத்தில் ஜெபர்சன் தூக்கு போட்டு தற்கொலை
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபர்சன் (வயது 34), ராணுவ வீரர். இவரது மனைவி அனிஷா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
அசாம் மாநிலத்தில் பணியில் இருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் விடு முறை முடிந்து பணிக்கு திரும்பி சென்றார்.
அங்கிருந்தபடி குடும்பத்தினருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தின் அருகே உள்ள மரத்தில் ஜெபர்சன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை செய்த ஜெபர்சன் உடல் இன்று மாலை குழிக்கோடு கொண்டு வரப்படுகிறது. பணி செய்ய சென்ற இடத்தில் ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் குழிக்கோடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்