search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராதனை"

    • நாக தீபம் - உயர் பதவி விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்
    • கொடி தீபம் - செல்வ மேன்மை மயூர தீபம் - மக்கட் பேறு

    கோவில்களில் இறைவனுக்கு ஷோடச தீபாராதனை என்னும் 16 வகையான தீப- தூப ஆராதனைகளைச் செய்வார்கள். அந்த ஆராதனைகளையும், அவற்றால் கிடைக்கும் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    1. தூபம் - உற்சாகத்தை அளிக்கும்

    2. தீபம் - விழிப்பு தரும்

    3. மகா தீபம் - அரச போகம்

    4. நாக தீபம் - உயர் பதவி

    5. விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்

    6. புருஷாமிருக தீபம் - நோய் நீங்கும்

    7. சூல தீபம் - ரோக நிவர்த்தி

    8. ஆமை தீபம் - தண்ணீர் பயம் நீங்குதல்

    9. கஜ தீபம் - செல்வம் கிடைக்கும்

    10. வியாக்ர புயி தீபம் - துஷ்ட நிவர்த்தி

    11. சிம்ம தீபம் - ஆயுள் விருத்தி

    12. கொடி தீபம் - செல்வ மேன்மை

    13. மயூர தீபம் - மக்கட் பேறு

    14. பூரணகும்ப தீபம் - சாந்தி, மங்களம் உண்டாகும்

    15. நட்சத்திர தீபம் - உலகாளும் திறமை

    16. மேரு தீபம் - மேலான நிலையை அடையலாம்.

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.

    வேலாயு தம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே கமலாம்பிகை உடனமர் அருள்நிறை மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.

    சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தக்குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கமலாம்பிகை உடனமர் அருள் நிறை மங்களநாதர் சாமிகளுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கமலாம்பிகை உடனமர் மங்களநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    • நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம்
    • புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான், பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பர நாதருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

    பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமா னுக்கும், நந்திகேஸ்வரருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை களும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில்,ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்,மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • இக்கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் மங்களாம்பிகா சமேத ஆகாசபுரீஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

    இன்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூல மந்திர , காயத்திரி மந்திர ஹோமங்கள், பூர்ணாஹூதி, மங்களாம்பிகை சமேத ஆகாசபுரீஸ்வரருக்கு ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை திருக்கல்யாணம் உற்சவம் , சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    • அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது.
    • பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி தீமித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஞாயிற்று சந்தைதோப்பு தேவி திரவுபதை அம்மன் கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 3 -ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது .

    மகாபாரத கதை பாடப்பெற்று நேற்று படுகளம் திரவுபதை கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு விரதம் இருந்த பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி நூற்றுக்கானக்கன பக்தர்கள் தீமித்தனர். பின்பு அம்பாள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு வீதியுலா நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் , உபயதாரர்கள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன், பாண்டமங்கலம் மகாமாரியம்மன், பகவதி அம்மன், சேளூர் மாரியம்மன்,கொந்தளம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×