என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மர்மநபர்கள்"
- இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
- மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.
இவரது மனைவி இந்திராணி (வயது 50).
நேற்று இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை பிரித்துக் கொண்டு மூன்று மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
இதையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டையை காண்பித்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் கத்தி முனையில் இந்திராணி, சுஷ்மிதா, ஸ்ருதி கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தனர்.
மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.
- பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60).
இவர் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே திட்டை செல்லும் சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த சேகர் கடையினுள் சென்று பார்த்தபோது பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார் .
அப்போது கல்லாப்பெட்டி மேஜை சுமார் 200 மீட்டர் தூரத்தில் எதிரே உள்ள கட்டுமான பணி நடைபெறும் கட்டடம் அருகே கிடந்தது.
உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து சேகர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார்.
- பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). இவர் தனது காரில் மனைவி சூரியசந்திரகலா மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு சென்றார். மீண்டும் திருப்பதியில் இருந்து திண்டிவனம் வந்தார். திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார். காரிலேயே குழந்தையின் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு ஓட்டலுக்குள் குடும்பத்துடன் சாப்பிட சென்றார்.
சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து பார்த்த போது காரின் வலதுபுறம், பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் உள்ளே பார்த்த போது ஒரு பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை காரின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து காரின் கண்ணாடியை உடைத்து நகை, பணம், செல்போனை திருடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த வர் குப்புசாமி மகன்ஆறு முகம் ( வயது 53).
இவர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விடுதியில் வார்ட னாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள தொண்ட ராம்பட்டுக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது .
இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தெய்வேந்திரன்.
இவரது மனைவி கோமளவல்லி (வயது 48).
சம்பவத்தன்று காலையில் இவர் தனது பிள்ளையின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த கோமளவல்லி உள்ளே சென்று பார்த்தார்.
பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த அவர் தஞ்சை தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் இருக்க மின் இணைப்பை துண்டித்தனர்
- சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் ஆவாரங்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை சம்பவத்தன்று இரவு பூசாரி வழக்கம் போல பூட்டி விட்டு சென்றார்.
நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்ததால் அதில் காட்சிகள் பதிவாகாமல் இருக்க மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனை தொடர்ந்து மர்மநபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ,30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் உள்ள பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போலீசில் சிக்காமல் இருக்க மின் இணைப்பை துண்டித்து விட்டு உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மன்செட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (38), செவ்வாய்ப்பேட்டையில் கற்பூரம் மொத்த வியாபா ரம் செய்து வருகிறார்.
- அப்போது கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மன்செட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (38), செவ்வாய்ப்பேட்டையில் கற்பூரம் மொத்த வியாபா ரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி மது அருந்து வதால் அவரது மனைவி 2 குழந்தைகளுடன் துறையூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநி லையில் சம்பவத்தன்று இரவு மது போதையில் சிவக்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நகை களை யாரோ மர்ம நபர்கள் இரவில் வீடு புகுந்து கொள்ளையடித்ததை அறிந்த அவர் அன்னதா னப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- வீட்டுக்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டார்.
- பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் சாம் மரியலியானி.
இவரது மனைவி அனிதா தனசீலி (வயது 35 ). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டாமல் அருகே உள்ள வீட்டுக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட 2 பேர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடினர்.
அப்போது வந்த அனிதா தனசீலி வீட்டுக்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டார்.
உடனடியாக அவர்கள் இரண்டு பேரும் பின் வாசல் வழியாக தப்பி ஓட முயன்றனர்.
உடனடியாக பொதுமக்கள் திரண்டு விரட்டி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர் .
தர்ம அடி கொடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த வேடப்பன் (வயது 55), பட்டுக்கோட்டை கீழப்பாளையத்தை சேர்ந்த விஜய் (34) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடி தப்பி ஓட முயன்ற வேடப்பன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்த வேடப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மூன்றரை பவுன் தங்க நகை, 2 கேமரா ஆகியவை திருடு போனது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவரது மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (வயது 70).
சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர்.
அப்போது இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளது என செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
இதைக் கேட்டு இருவரும் பதறியடித்துக் கொண்டு வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகை, 2 கேமரா, வாட்ஜ், பட்டுப் புடைவை ஆகியவற்றை மர்ய நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அந்தோணி லில்லி புஷ்பம் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
- சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
பல்லடம்:
பல்லடம்- மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இறைச்சி கடைகள் உள்ளது. இதன் பின்புறம் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சிகரெட் புகைத்து விட்டு குப்பைகளின் மேல் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மளமளவென பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்து அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம் - பக்கம் உள்ள வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பியது. குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடம் வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
- கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர்.
- 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலுக்கு மர்மநபர்கள் கடந்த 3-ந்தேதி தீ வைத்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத் துறையின் விழுப்புரம் உதவி ஆணையர் திவாகர், ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
அதில் எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நல்ல நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் பிரிக்கப்பட்டது. மேலும், நாணயங்களும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்து போயிருந்தது. மேலும், நல்ல நிலையில் இருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கோவில் உண்டியலுக்குள் தீ வைத்து பக்தர்களின் காணிக்கைகளை எரித்த மர்மநபர்களை கிளியனூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
- பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.
- இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் இருந்து பெருந்தோட்டம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தருமபுரம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.
பஸ்சில் ஓட்டுநர் கஜேந்திரன், நடத்துனர் காசிநாதன் பணியில் இருந்தனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு எதுவும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் ஆகியோர் பஸ்சினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்