என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர்"

    • அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ கட்டையை எடுத்து கையிலும் முகத்திலும் தாக்கினர்.
    • மேலும் கத்தி முனையில் மோகன்ராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.3000-த்தையும் பறித்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 37). சுமை தூக்கும் தொழிலாளியான இவரை கடந்த மாதம் 18-ந் தேதி தாதகாப்பட்டி சண்முகம் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி எலிபிரகாஷ் (24), பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சொல்யூஷன் சதீஷ் (26) ஆகியோர் எதற்காக எங்களை பற்றி போலீசருக்கு தகவல் தெரிவிக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ கட்டையை எடுத்து கையிலும் முகத்திலும் தாக்கினர். மேலும் கத்தி முனையில் மோகன்ராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.3000-த்தையும் பறித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மோகன்ராஜ், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து, இவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் மணிய னூர் காத்தாயம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த அருள்மணி (30) என்பவர் தாதகாப்பட்டி கேட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பிரகாஷ் மற்றும் சதீஷ் ஆகியோர், கத்தி முனையில் அருள்மணி கையில் இருந்த 1/2 பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.2000-ஐ பறித்துக் கொண்டனர். இதுகுறித்து அருள்மணி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து ரவுடி எலி பிரகாஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

    இவர்கள் இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தியும், தொடர் குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாலும், இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா நேற்று ரவுடி எலி பிரகாஷ் மற்றும் சொல்யூ ஷன் சதீஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகல் நேற்று மாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேற்கண்ட நபர்களிடம் வழங்கப்பட்டது.

    • சேலம் தாதகாப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த பிரபல ரவுடி கத்தி முனையில் பால்ராஜ் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.2,700 பறித்துக் கொண்டார்.
    • இது குறித்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாதேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் 5-வது தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் பால்ராஜ் (வயது 27). இவர் கடந்த 8-ந் தேதி மூலப்பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதேஷ் (26), கத்தி முனையில் பால்ராஜ் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.2,700 பறித்துக் கொண்டார்.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள், மாதேசை பிடிக்க முயன்றபோது கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாதேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம் லைன்மேடு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி (45). கார் டிரைவரான இவர், கடந்த 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தாதகப்பட்டி மேட்டு தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவரை வழிமறித்த, தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிச்ச கார்த்தி (24), கத்தியை காட்சி மிரட்டி மணியிடம் இருந்து 2 பவுன் சங்கிலி, ரூ.2175 பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல், சேலம் லைன்மேடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (54). இவர் கடந்த 6-ந் தேதி சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஜய் (36), கத்தி முனையில் மிரட்டி சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் சங்கிலி மற்றும் ரூ.4,300 பறித்துக் கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    குண்டர் சட்டம்

    கைது செய்யப்பட்ட ரவுடிகள் 3 பேரும், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதன் பேரில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா, ரவுடிகள் பிச்ச கார்த்தி, மாதேஷ், விஜய் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
    • 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழிப்பறியில் ஈடுபடு–வோர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.

    இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

    தமிழக சிறைகளில் 1000-க்கும் மேற்பட்டோர் குண்டாசில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில் இந்த ஆண்டு 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 80 பேர் ரவுடிகள், 16 பேர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள், 51 பேர் வழிப்பறி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்.

    கடந்த ஆண்டில் 129 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 46 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மனைவியை கொலை செய்தவர்
    • கலெக்டர் பரிந்துரை பேரில் நடவடிக்கை

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வெண்ணாவல்குடி கொத்தோட்டையன் குடியிருப்பில் உள்ள பாண்டியராஜன் (வயது 19) என்பவர், கறம்பக்குடி ஒன்றியம் தெற்கு பல்லவராயன் பத்தை கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற நித்தியாவை (வயது 35) கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் மீது உள்ள பல்வேறு வழக்குகளின் காரணமாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. வந்திதா பாண்டே பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அவர்களின் உத்தரவின் படி குண்டர் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டதால் குண்டர் சட்டம் பாய்ந்தது
    • மாவட்ட எஸ்.பி.பரிந்துரையின் பேரில், கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தழுதாழைமேட்டை சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (வயது 27). இவர், அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மகன் பவித்ரன்(27) ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இது குறித்து புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து ஜெயமணிக்குமாரை கைது செய்தனர். மேலும் இவர், தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையடுத்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயமணிக்குமார் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.
    • இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் எருமாபாளையம் சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் நிர்மல் தாஸ் (வயது 22). இவர் கடந்த மாதம் 2-ந் தேதி சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அவர் மீது ஏற்கனவே கிச்சிப் பாளையம், கொண்ட லாம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பி டத்தக்கது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று நிர்மல் தாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

    • சிறுமி பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் மீது குண்டாஸ்
    • எஸ்பி பரிந்துரைின் பேரில் மாவட்ட கலெக்டர் உததரவு

    கரூர், 

    கரூரில் சிறுமி பாலியல் குற்ற வழக்கில் கைதான, மூன்று நபர்கள். மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஆண்டு டிசம்பரில் பதிவு செய்யப் பட்ட, சிறுமி பாலியல் குற்ற வழக்கில், கரூரை சேர்ந்த சதீஷ்குமார், (வயது 32), சணப்பிரட்டியை சேர்ந்த மதன் (32), வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சதீஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரையும், குண்டர் காவல் சட்டத்தின் கீழ் கைது தடுப்பு செய்ய, எஸ்.பி., சுந்தரவதனம், மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்ட, கலெக்டர் பிரபு சங்கர், மூன்று பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, நேற்று உத்தரவிட்டார்.இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள சதீஷ்குமார் உள்பட மூன்று பேருக்கும் அதற்கான, உத்தரவு நகலை, கரூர் மகளிர் போலீசார் வழங்கினர்.

    • டி.எஸ்.பி. மகேஷ்குமார் எச்சரிக்கை
    • உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் இருந்து தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களும் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள ஒரு சில தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை கணக்கிடாமல் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்து வருவதாகவும் இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதனை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கூடங்களின் உரிமையாளர்களை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி சரக டி.எஸ்.பி. மகேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:- அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே தனியார் மதுபான கூடங்கள் செயல்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் பார்சல் கொடுக்க கூடாது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். தமிழக அரசு காவல்துறையில் பணி புரியும் அனைவருக்கும் நிறைவான ஊதியத்தை கொடுக்கிறது. இதனால் ஒரு பைசா கூட யாரும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • குதிரை பந்தய வீரரை கொலை செய்த 2 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
    • மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா உத்தரவு

    திருச்சி, 

    திருச்சி உறையூர் சன்னதி தெருவை சேர்ந்த முருகனின் மகன் சண்முகம் (வயது 25). குதிரை வண்டி வைத்திருந்த இவர், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குதிரை வண்டி பந்தயங்களில் கலந்து கொள்வது வழக்கம். கடந்த மே மாதம் 26-ந்தேதி பட்டப்பகலில் குழுமணி டாக்கர் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது, சண்முகம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.பந்தயத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக, பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த விஜி (23), தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த அபிஷேக் (22) ஆகியோர் உள்பட 6 பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.இதில் விஜி, அபிஷேக் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் என்று போலீசார் பரிந்துரை செய்ததை தொடர்ந்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.

    • ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது.
    • இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசியதாவது:- ஏற்காடு மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கஞ்சா, கள்ள சாராயம், அரசு மது பாட்டில் விற்பனையாளர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது தகவல் வருகிறது. எங்களது போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வழக்குகளும் செய்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கள்ளத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளது கண்டுபிடித்தால் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுபான கடத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்
    • ஜெயங்கொண்டம் சிறையில் இருந்த அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்

    அரியலூர், 

    உடையார்பாளையம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் குமார் (42). கடந்த 22 ஆம் தேதி, இரு சக்கர வாகனத்தில் கள்ளத்தனமாக மதுபானங்களை கடத்தி வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், வெளியே வந்தால் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட கூடும், இவரை குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்

    பெரம்பலூர்.

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிதுரை. இவரது மகன் மதுபாலன் (வயது 27). இவர் 5 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போக்சோ வழக்கில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மதுபாலனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று மதுபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் குண்டர் சட்டத்தில் மதுபாலனை கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, ஏட்டு பார்வதி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.

    ×