என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உயர்கல்வி"
- கடந்த 6 ஆண்டில் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
- விபத்துகள், மருத்துவ காரணங்கள், தாக்குதல்களால் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் இந்தியர்கள் குறித்த கேள்வி இன்று எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகள் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
2019-ம் ஆண்டில் 6,75,541 மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 13,35,878 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
கனடாவில் 4,27,000 பேரும், அமெரிக்காவில் 3,37,630 பேரும், இங்கிலாந்தில் 1,85,000 பேரும், ஆஸ்திரேலியாவில் 1,22,202 பேரும் படித்து வருகின்றனர்.
இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் எண்ணிக்கை வரும் காலங்களில் தொடர்ந்து உயரும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்துகள், மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 41 நாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவில் 172, அமெரிக்காவில் 108, இங்கிலாந்தில் 58, ஆஸ்திரேலியாவில் 57, ரஷ்யாவில் 37, ஜெர்மனியில் 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 3 ஆண்டில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டுவிட்டன.
- சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாத மத்தியில் வெளியிடப்பட வேண்டும். அப்போது தான் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்க முடியும். தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டு விட்டன. அதனடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கையும் நிறைவடைந்து விட்டது.
சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத 108 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அக்கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு எழுதிய மாணவர்களால், பிற கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் படித்த கல்லூரிகளில் மட்டுமே இனி சேர முடியும். அந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் பிற கல்லூரி மாணவர்கள் போட்டியிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு கடும் போட்டி ஏற்படும். இதனால் பல மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழப்பார்கள். இதுவா திராவிட மாடல்?
தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடாததை மன்னிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி, பல மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். இந்த சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அவற்றில் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னைப் பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமித்தல், நிதி நெருக்கடியைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- நமது மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி முக்கியமான ஒன்றாகும்.
- கல்வி கற்று சிறந்த வேலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்ட மாகும். நமது மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி முக்கியமான ஒன்றா கும். அடுத்த தலைமுறை களுக்கு கல்வி என்பது இன்றியமையாததாகும். தமிழ்நாடு முதலமைச்சர் இளம் தலைமுறையி னர்கள்அதிக அளவில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறுநலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர வேண்டும் என்ப தற்காக புதுமைப்பெண் திட்டம் அறிவித்து மாணவி களின் வங்கிகணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தி வருகிறார். இளைஞர்கள் படித்த பின் வேலை கிடைக்க வேண்டும் என்ப தால் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருகிறார். பல்வேறு காரணங்களால் உயர்கல்வி தொடர முடி யாத நிலையில் உள்ள மாண வர்களுக்காக இந்த கல்விகடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 38 கல்லூரி கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பயிலும் மாணவ, மாணவி களுக்கு கல்வி கடன் பெறுவது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கல்வி கடன் வழங்குவதற்கான மாபெரும் முகாம் நடத்தப் பட்டது. கல்வி மிகவும் இன்றியமையாத தாகும் எனவே மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்று சிறந்த வேலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கல்வி கடன் முகாமில், சுமார் 472 மாணவ, மாணவி களுக்கு ரூ.17.35 கோடி மதிப்பீட்டி லான கல்வி கடன் வழங்கப் பட்டது. இம்முகாமில் துர்காதேவி என்ற மாணவி யின்கல்வி கடன் விண்ணப் பம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சில காரணங்களால் மறுக்கப் பட்டதாக அறிந்த மாவட்ட கலெக்டர் இந்தி யன் வங்கியின் வாயி லாக ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன்கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், கடலூர்மண்டல இந்தியன் வங்கி மேலாளர் கவுரிசங்கர் ராவ், சேலம் மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமேலாளர் ராம கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கள்ளக்குறிச்சி வருவாய் தாசில்தார் பிரபா கரன், வருவாய் துறை அல வலர்கள், வங்கிமேலா ளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இளையான்குடியில் உயர்கல்வியில் தொழில்முனைவோர் திறன் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
- பேராசிரியர் சந்திரமோகன் சிறப்புரையாற்றினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை மற்றும் கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் இணைந்து "உயர்கல்வி யில் தொழில்முனைவு மேம்பாட்டு திறன்" என்னும் தலைப்பில் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை உரையாற்றினார். உதவிப்பேராசிரியர் சமுசுதீன் இப்ராஹிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் ஒருங்கிணைப்பாளர் நசீர்கான், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலீப் உள்ளிட்ட துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் உதவிப்பேராசிரியர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.
- அனைத்து மாணவர்களை உயர் கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
- மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் மற்றும் மெல்ல கற்போர் கையேடு வெளியிடுதல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மெல்ல கற்போர் மாணவர்களுக்கான கையேட்டினை அவர் வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.
தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம், வாயிலாக உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், உதவித்தொகைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பொருளா தாரத்தில் பின்தங்கிய மாண வர்களை கண்டறிந்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இதில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
- விருதுநகர் கலெக்டர் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவி களுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாமினை, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை யில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
பின்னர், இம்முகாமின் மூலம் 13 மாணவர்கள் அரசு தொழில்பயிற்சி மையத்திலும், 2 மாணவர்கள் அரசன் கணேசன் தொழில் நுட்ப கல்லூரியிலும், 10 மாணவர்கள் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 4 மாணவர்கள் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியிலும், 13 மாணவர்கள் ஏ.ஏ.ஏ. பொறி யியல் கல்லூரியிலும், 22 மாணவர்கள் ஜெய் சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் என மொத்தம் 64 மாணவர்க ளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வ தற்கான சேர்க்கை ஆணை களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு உலகின் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக திறன்களை வளர்ப்பதற்கும், பள்ளி மாணவர்களுக்கு இந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும், புதுமைப் பெண் என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதந் தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையும், உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலம் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் நமது விருதுநகர் மாவட்டம் 12-ம் வகுப்பில் அதிக தேர்ச்சி விகிதங்கள் பெற்று கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள 7226 மாணவர்களும் 100 சதவீதம் உயர்கல்விக்கு சேர வேண்டும் என்ற நோக்கத் தில் அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களில் முகாம் கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ராஜ பாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சிவகாசி பகுதிகளில் இது வரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 193 மாணவ, மாணவிகளில் 136 மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழி காட்டுதல் முகாம் நடைபெற்றது.
இந்திய அளவில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதன்மையிடத்தில் உள்ளது. அதிகமான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெற்று, தமிழகத்திற்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தர வேண்டும்.
இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் தகுதிக்கேற்ப அவர்களின் திறன் அடிப்படையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் விவேகன்ராஜ், வட்டாட்சியர், அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் தாங்கள் கல்லூரி சிறப்பம்சம் குறித்து விளம்பரப்படுத்தி வருகின்றன.
- பெண்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் எல்.ஆர்.ஜி.,கல்லூரி உள்ளது.
திருப்பூர்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தேர்வுமுடிவுக்கு காத்திருக்கும் மாணவர்கள் அடுத்து காலடி எடுத்து வைக்க போவது கல்லூரிகளில் தான். மதிப்பெண் என்ன என்பதை யூகித்து தனியார் கல்லூரிகளில் ஏறி, இறங்கி விண்ணப்பங்களை வாங்கி மாணவர் பலர் உயர்கல்விக்கு தயாராகி வருகின்றனர்.
தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் தாங்கள் கல்லூரி சிறப்பம்சம் குறித்து விளம்பரப்படுத்தி வருகின்றன. பல கல்லூரிகளில் அட்மிஷனும் நடந்துள்ளது.இது ஒருபுறம் இருந்தாலும் அரசு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும், எந்த படிப்புக்கு எப்போது கவுன்சிலிங், அட்மிஷன், கல்லூரி படிப்புக்கான தேதி என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. காரணம், அரசு பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் அரசு கல்லூரியில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர்.
திருப்பூரில் உயர்கல்வி கற்றுத்தரும் வகையில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, உடுமலை அரசு கலைக்கல்லுாரி செயல்படுகிறது. பெண்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் எல்.ஆர்.ஜி.,கல்லூரி உள்ளது. இவை தவிர, திருப்பூர் குமரன் கல்லுாரி கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்குகிறது.காங்கயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட தாலுகாவில் அரசு கல்லுாரிகள் செயல்படுகிறது. அரசு கல்லூரிகளில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாளுக்கு (ஜூன் 23) ஒரு வாரம் முன்னதாக, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. இருப்பினும் தேதி விபரங்களை, தமிழக அரசுகல்லூரி கல்வி இயக்ககம் தான் அறிவிக்கும் என கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்