என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பூஜை"

    • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.
    • பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 6.45 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் கும்ப பூஜையும், 7.45மணிக்கு சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 8.45 மணிக்கு அம்பாள் பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், அன்னாபிஷேகம், சந்தனம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் சங்கரன் குருக்கள் பூஜைகளை செய்தார்.

    இதில் ஜோதிடர்கள் சண்முகக்குமார், திருமேனி, பாக்கியராஜ், சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், ஜெயராம்குமார், மகேந்திரன், மாரிஸ்வரன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.

    • பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி வழிபாடு
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கால பைராஷ்டமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பைரவர் அவதரித்த திருநாளான நேற்று பைராஷ்டமி பூஜையில் கலச ஹோமம் நடைபெற்று.

    புனித நீரால் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வட மாலை சாற்றி பஞ்சலோக ஸ்ரீ மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீ கால பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கால பைரவரை தரிசனம் செய்து சென்றனர்.

    • கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் வாழவந்தி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன்,‌‌ செல்லாண்டி அம்மன், நன்செய்இடையாறில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அ.குன்னத்தூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், வடகரை யாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்கள் மற்றும் குல தெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு

    அலங்காரம், மகா தீபாரா தனையும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • குருவித்துறையில் திருமண பத்திரிகை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
    • இதில் ஆர். பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    சோழவந்தான்

    எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க. 51-வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதியன்று டி.குன்னத்தூரில் நடை பெறுகிறது.

    இதனை முன்னாள் முதல்-அமைச்சர், எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இதற்கான திருமண அழைப்பிதழை மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், ஜெனகை நாராயண பெருமாள் கோவில், குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பாலகிருஷ்ணன், பேரூர் கவுன்சிலர்கள், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர். 

    • அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
    • மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    பாண்டமங்கலம்‌ அருகே உள்ள கோப்பணம்பா ளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன், அர சாயி அம்மன், மாசாணி அம்மனுக்கு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.அதேபோல் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன்,‌‌ பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டி யம்மன், நன்செய்இடை யாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி, பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பா ளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வட கரையாத்தூர் மாரியம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு

    அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • அனுமனுக்கு வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர், அம்பாள், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், மா பொடி திரவியம், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து ஆஞ்ச நேயர்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பி ரமணியன் மாரிஸ்வரன் பூஜைகளை செய்தனர். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா மற்றும் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

    இதேபோல் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா சிறப்புப் பூஜையில் கணபதி பூஜை, கும்ப கலச பூஜை தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து அனுமனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு இனிப்பு, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யார் செய்தார்.

    இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதேபோல் பரமத்தி வேலூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அனிச்சம்பா ளையத்தில் உள்ள பெரு மாள் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் கோவில், பரமத்தியில் உள்ள

    கோதண்டராம சுவாமி கோவில், வடகரை யாத்தூரில் உள்ள தேவி பூதேவி உடனுரை அஞ்சலென்ற பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
    • நிகழ்ச்சியில் கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடைப்பெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைப்பெற்றது. தொடர்ந்து சிவன் சன்னதியில் நடராஜர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை ஒரே நேரத்தில் நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். முடிவில் பக்தர்களுக்கு களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்தனர்.

    • புற்றுக்கோவிலில் தைப் பொங்கல் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • பூஜையில் அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப் பொங்கல் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×