என் மலர்
நீங்கள் தேடியது "Consumer"
- மதுரை வடக்கு கோட்டத்தில் வருகிற 3-ந் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின் பகிர்மான செய ற்பொ றியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஸ்கோர்ஸ் சாலை மதுரை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர், மேலமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நு கர்வோர்கள் குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
- கடைகள் ரூ.2 கோடியே 51 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
- ஏலத்தை ரத்து செய்யக்கூடாது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நல்லூர் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அளித்த மனுவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூ மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகள் ரூ.2 கோடியே 51 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு அதிக தொகை வருவாயாக கிடைக்கும். எக்காரணத்தை கொண்டும் ஏலத்தை ரத்து செய்யக்கூடாது. அவ்வாறு ரத்து செய்தால் பொதுநலன் கருதி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
இதுபோல் மாநகராட்சி பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்தார்.
- கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
- கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.
எனவே திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது. 5 வருடங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வால்வு, கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அதனை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி, வயிற்றுபோக்கு, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதுடன் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் இருக்கிறது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன் உடனடி அபாரதம் விதிக்கப்படும். மேற்குறிப்பிட்ட குற்றத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யவும். 3 மாத காலம் வரை கடையை சீல் வைத்து வர்த்தகத்தை நிறுத்திவைக்கப்படும்.
நுகர்வோருக்கு வழங்கப்படும் பழங்கள் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் தெரிவிக்கலாம் எனவும், புகார்தாரரின் விவரங்கள் மற்றும் ரகசியம் பாதுகாக்கப்படுவதுடன் புகார் அளித்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்யப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு பேசினார்.
- தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
- சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
திருப்பூர்:
இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தமிழகத்தில் 1.48 கோடி வீட்டு வாடிக்கையாளர் உள்ளனர். தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
இந்தியன் ஆயிலின் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளம், மிஸ்டு கால், வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றின் வாயிலாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் சில நேரங்களில், வேலை நிமித்தம் காரணமாக, சிலிண்டர் முன்பதிவு செய்ய மறந்து விடுகின்றனர். இதனால் சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதை தவிர்க்க தற்போது, சிலிண்டர் பதிவு செய்வது குறித்து நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
அந்த எஸ்.எம்.எஸ்.,-ல் கடைசி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட தேதி மற்றும் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டிய மிஸ்டு கால் எண், இணையதள, 'லிங்க்' ஆகியவையும் அனுப்பப்படுகிறது.
- நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
- திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.
அவிநாசி:
அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.
இதில், மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.
- நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.
- மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன், காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார். பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அதிக வட்டியைச் சுமத்தும் நடைமுறை நியாயமற்றது என NCDRC தெரிவித்தது.
- வங்கிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உச்சநீதிமன்றம் NCDRC தீர்ப்பை ரத்து செய்தது.
தாமதமாக கிரெடிட் கார்டு கட்டண பரிவர்த்தனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 30% வட்டி விகித வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது. தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் (NCDRC) கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த 30% வட்டி விகித வரம்பை நிர்ணயித்துத் தீர்ப்பளித்திருந்த நிலையில் அதை எதிர்த்து வங்கிகள் தொடர்ந்த வழக்குகள் வெகு காலமாக நடைபெற்று வந்தது.
வங்கிகள் தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவோர் மீது அதிக வட்டியைச் சுமத்தும் நடைமுறை நியாயமற்றது என்று கூறி NCDRC 30% க்கு மேல் வட்டி கூடாது என்ற வட்டி வரம்பை நிர்ணயித்தது. இந்த நிலையில் அந்த வரம்பை நீக்கி உச்சநீதிமன்றம் தற்போது இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி, சிட்டி வங்கி, ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கார்ப்பரேஷன் (எச்எஸ்பிசி) உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து வந்த நிலையில் NCDRC தீர்ப்பை ரத்து செய்தது. அதன்படி இனிமேல் வங்கிகள் தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவோர் மீது 30 சதவீதத்துக்கு மேலும் தாங்கள் விரும்பியபடி வட்டியை சுமத்தலாம்.
- 2017 ஆம் ஆண்டு பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார்.
- அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் தான் வாங்கிய சிலிண்டரின் விலையை விட ரூ.1.50 அதிகமாக பெற்ற கேஸ் ஏஜென்சி மீது வழக்கு தொடர்ந்த சக்ரேஷ் ஜெய்ன் என்பவர் இழப்பீடாக ரூ.4,000 பெற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது. ஆனால் சிலிண்டரை டெலிவரி செய்தவர் அவரிடமிருந்து 755 ரூபாய் வசூலித்துள்ளார். மீதம் 1.50 ரூபாயை சக்ரேஷ் கேட்டபோது அந்த பணத்தை கேஸ் ஏஜென்சியிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் இது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்தார்.
7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மனுதாரருக்கு 4000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இது மட்டுமன்றி சக்ரேஷிடம் பெற்ற ரூ1.50யை ஆண்டுக்கு 6% வட்டியுடன் சேர்த்து வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'இது வெறும் 1.50 ரூபாய்க்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல. எங்களது உரிமை மற்றும் சுயமரியாதைக்கான போராட்டம் இது' என்று வழக்கில் வெற்றி பெற்ற சக்ரேஷ் தெரிவித்தார்.
பக்தர்கள் நலன் கருதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள சண்முக விலாசம் முகப்பு அடைப்பை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் முதல் உதவி சிகிச்சை மையம் உள்ளது. அதற்கு அவசரகால ஆம்புலன்ஸ் வசதி இல்லை எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன ஆம்னி ஆம்புலன்ஸ் கோவில் சார்பில் வாங்கி பயன்படுத்த வேண்டும். கொடிப்பட்டம் ஆண் யானை மீது வருவது வழக்கம் சம்பிரதாயத்தை மீறி பெண் யானை மீது தற்போது வருகிறது.
எனவே ஆண் யானை ஒன்று கோவில் நிர்வாகம் சார்பில் வாங்கி சம்பிரதாயத்தை காக்க வேண்டும், கோவில் வெளிபிரகாரத்தை கட்டிய வள்ளிநாயகம் சுவாமி சமாது பழுதடைந்துள்ளது அதை புதுப்பிக்க வேண்டும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள சண்முக விலாசம் முகப்பு அடைப்பை திறந்துவிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.