என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டு விழா"

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது.
    • இந்த விழாவில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் 24-ம் ஆண்டிற்கான முதலா மாண்டு மாணவர்கள் தொடக்க விழா மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தொடக்கவுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி வர வேற்றார். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உளவியலாளர் ரகுநாத் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகி நேரத்தையும், ஆரோக்கியத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு படிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் மனமுடைந்து தவறான முடிவை எடுக்கின்றனர்.

    பெற்றோர்கள் மாண வர்களை அரவணைத்து அறிவுரை வழங்கி அவர்களுக்கு அன்பான முறையில் அறிவுரையை கூற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் உணவு பழக்க வழக்கங்கள் முறையாக இருக்க வேண்டும்.

    மேலும் பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், வாழ சமுதாயத்தில் உயர் இடம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இரு கல்லூ ரிகளின் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்த னர். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் சயின்ஸ் அண்டு ஹிமானிட்டிஸ் துறைத்தலைவர் பேரா சிரியர் சக்திஸ்ரீ நன்றி கூறினார். 

    • 08 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
    • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 10ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்று காலை 9மணிக்கு வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

    சீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 12 மணிக்கு சிறப்பு ஆரத்தி பூஜையும், தொடர்ந்து சிறப்பு பஜனையும் நடந்தது.அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி தலைமையிலான குழுவினர் ஆண்டு விழா பூஜைகளை நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்ரீசீரடி சாய் பீடம் அறக்கட்டளை செய்திருந்தது.  

    • அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள க.பெருமாள் பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 1972 ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா கள்ளர் சீரமைப்பு துறை கல்வி அலுவலர் ஜவகர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வ பாண்டி, மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சரவண குமார் வரவேற்றார்.ஆண்டுவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.முன்னாள் மாணவர்கள் பிருத்வி, மலைச்சாமி, பிரகாஷ் ஆகியோர் நூலகத்திற்கு தேவையான பொருட்க பொருட்களை வழங்கினர்.

    உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கணேசன் விழாவை தொகுத்து வழங்கினர். முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    • விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
    • விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் அமைந்துள்ள ராஜாஸ் பல்மருத்துவ கல்லூரியில் ஆண்டு விழா 3 நாட்கள் நடைபெற்றது.

    விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், ராஜாஸ் கல்லூரிகளின் நிறுவனர் சர்தார் டாக்டர் எஸ்.ஏ.ராஜாவின் கல்வி சேவையை பாராட்டியும் பேசினார்.

    கல்லூரி தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். விழாவில் செல்வம் அறக்கட்டளை தலைவர் சோபியா ராஜா, ராஜாஸ் மருத்துவ நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சபீனா ஜேக்கப் மற்றும் இயக்குநர் டாக்டர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக கல்லூரி துணை தலைவர் டாக்டர் அந்தோணி செல்வி வர வேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்ஸ் மேத்யூஸ் முருப்பல் ஆண்டறிக்கையை சமர்பித்தார். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    • ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நற்சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் அம்பாள் வித்யாலயா பள்ளி தலைவர் வீமராஜ், பள்ளிச் செயலாளர் சுப்பா ரெட்டியார், இயக்குனர் இந்திரா ராமராஜ், ரெபக்கா அனிட்டா, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • ஆசிரியர்களுக்கு லாயல்டி விருதும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர் .

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் வரவேற்று பேசினார். பள்ளியின் முதல்வர் ஏ.எஸ் மணிமலர் ஆண்டறிக்கை வாசித்தார் . பள்ளியின் பொருளாளர் சுருதி கலந்து கொண்டு உரையாற்றினார். திருப்பூர் மாவட்ட சிறந்த மருத்துவருக்கான விருதினை பெற்றவரும் ஆதார் மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .பள்ளியில் பயின்ற மாணவர்களில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சென்ற இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மாநில, மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் குறு மையம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களில் அனுபவம் நிறைந்த மூத்த ஆசிரியர்களுக்கு லாயல்டி விருதும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர் . பின்னர் மழலையர் பிரிவு முதல் மேல்நிலை பிரிவு வரை உள்ள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நிகழ்வின் இடையிலும் திருமாலின் பத்து அவதாரமாக விளங்கும் தசாவதாரம் நிகழ்த்தப்பட்டது. கலை நிகழ்ச்சியின் மையமாக விளங்கிய நாட்டிய நாடகம் முதலிய பல நிகழ்ச்சிகள் காண்பவரை வியப்பில் ஆழ்த்தியது. முடிவில் பள்ளியின் துணை முதல்வர் நன்றி கூறினார். 

    • ஏ.வி.பி. டிரஸ்ட் செயலாளர் பொன்னுத்தாய் அருள்ஜோதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஏ.வி.பி. டிரஸ்ட் செயலாளர் பொன்னுத்தாய் அருள்ஜோதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பொருளாளர் லதாகார்த்திகேயன் வரவேற்று பேசினார். தாளாளர் கார்த்திகேயன் தலைமை உரை ஆற்றினார்.

    பள்ளியின் முதல்வர் பிரியாராஜா 2022-23-ம் கல்வி ஆண்டிற்கானஆண்டுஅறிக்கையை வாசித்தார். 33-ம் ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக சுகிசிவம் கலந்து கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குவது எப்படி? என்பதை தன் வாழ்வியல் அனுபவங்கள் வழி நின்று விளக்கி கூறினார்.

    மேலும் 2020 -21 ம்கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளாக மாணவ, மாணவிகளின் கண்கவர் நடனங்கள் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

    • அரசு பள்ளி ஆண்டு விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசும்போது, கணபதி சுந்தர நாச்சியார்புரம், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகர் மற்றும் கோதை நாச்சியார்புரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுள்ளது என்றார். விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வித்யா, தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன், கிளை செயலாளர்கள் கருணாகரன், பாலமுருகன், கனகராஜ், மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடை பெற்றது.
    • கலெக்டர் செந்தில்ராஜ் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 32-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஜீவன்ஜேக்கப் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, சென்ற ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, தலைமை உரையாற்றினார்.

    பள்ளி தாளாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் டேவிட் நன்றி கூறினார். கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • பள்ளியின் மாணவர் மன்றத்துடன் இணைந்து பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 12-ம் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஷியாமளா ரமேஷ்பாபு மற்றும் கவிஞர் பா.விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாணவர்களின் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ஏ.வி.பி.கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன்அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.வி.பி.கல்வி குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பிரமோதினி ஆண்டறிக்கை வாசித்தார். காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சியாமளா ரமேஷ்பாபு குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்னும்தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

    மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் பா. விஜய் வருங்கால சமூகத்தின் சிற்பியாக இருக்கும் குழந்தை களைக்கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் மாணவர் மன்றத்துடன் இணைந்து பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

    • இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் 7 மற்றும் 10-வது வார்டுகளை சேர்ந்த இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் ஆண்டு விழா வட்டார ஒருங்கிணைப்பாளர் சப்திகா டொமிலா தலைமையில் நடைபெற்றது.நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை அன்பாய் செல்வம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக அறிவொளி இயக்க முன்னாள் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகா பால்துரை, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வக்கீல் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் தனித் திறன்களில் மேன்மை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .

    விழாவில் சாத்தான் குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நேசமலர், பூங்கொடி, ஆண்ட்ரூஸ், இப்ராஹிம் நடுநிலைப்பள்ளி ஆசிரியை கீதா, ஸ்டீபன்ஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வேதராணி மற்றும் தலைமை ஆசிரியர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மைய தன்னார்வலர் கிருபைமேரி கிருஸ்டிபாய் வரவேற்றார். முடிவில் ராகப் பிரியா நன்றி கூறினார்.

    • மாணவர்களின் திறனை மேம்படுத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யாகுமார் முன்னிலை வகித்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சையப்பன் கொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு 20-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அரசு பள்ளியின் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தனியார் பள்ளிக்கு நிகரான பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற பணிகளை பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த பாகல்அள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யாகுமார் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் 15-க்கு மேற்பட்ட பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் செல்போன் பற்றிய நன்மை,தீமைகள் குறித்து எடுத்துக் கூறினார்.

    ×