என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதயாத்திரை"

    • வருகிற 20-ந்தேதி வரை ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
    • 14 நாட்கள் யாத்திரையில் ராகுல் காந்தி 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா யாத்ரா) மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானாவுக்கு சென்றார்.

    தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் அங்கு அவரது யாத்திரை நிறைவு பெறுகிறது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இன்று இரவு நுழைகிறது. அவரது 61-வது நாள் பாதயாத்திரை தெலுங்கானாவில் இன்று நடந்தது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று இரவு 7 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டம் தொகுதியில் நுழைகிறது. இரவில் அவரது பாத யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. மகாராஷ்டிராவில் நாளை காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறது.

    வருகிற 20-ந்தேதி வரை அவர் மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். 14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார்.

    மகாராஷ்டிரா பாத யாத்திரையின் போது ராகுல் காந்தி 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதல் பொதுக்கூட்டம் வருகிற 10-ந்தேதி நான்டெட் மாவட்டத்திலும், 2-வது பொதுக்கூட்டம் 18-ந்தேதி புல்தானா மாவட்டம் சென்காவ் பகுதியிலும் நடக்கிறது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.

    மகாராஷ்டிராவில் முடிந்த பிறகு ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்துக்கு 20-ந்தேதி செல்கிறது.

    • யாத்திரை கணேசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட போது காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
    • யாத்திரை கணேசன், குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நடைப் பயணங்களிலும், சமீபத்தில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையிலும் தம்மை இணைத்துக் கொண்டவர்.

    சென்னை:

    தஞ்சாவூரைச் சேர்ந்தவர் யாத்திரை கணேசன் (53). காங்கிரஸ் சேவாதள நிர்வாகியான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் நடத்திய பேரணிகளில் கலந்து கொண்டவர்.

    இப்போது ராகுலின் பாரத ஒற்றுமை யாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து தொடர்ந்து யாத்திரையில் நடந்து சென்றார். நேற்று மகாராஷ்டிராவில் நடைபயணம் சென்ற கணேசன் விபத்தில் சிக்கி பலியானார்.

    யாத்திரை கணேசன் மறைவுக்கு ராகுல்காந்தி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    யாத்திரை கணேசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட போது காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர், குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நடைப் பயணங்களிலும், சமீபத்தில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையிலும் தம்மை இணைத்துக் கொண்டவர்.

    திருமணம் செய்து கொள்ளாமலேயே முழு நேர ஊழியராக கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மகாராஷ்டிராவின் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார்.
    • ராகுல் காந்தி வரும் 20-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் மகாராஷ்டிரா சென்றார்.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்கிறார்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். அவர் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது சிவசேனா தொண்டர்கள் கோஷமெழுப்பினர்.

    • மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.

    இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

    தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என ராகுல் காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

    கடைசியாக குஜராத்தில் நடைபயணம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.

    இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்கு வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.

    அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.

    இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் யாத்திரையில் இணைந்துள்ளார்.

    • நடத்தை விதிகளை மீறி அரசியல் பேரணியில் கலந்து கொண்டதாக கூறி பாஜக அரசு நடவடிக்கை.
    • அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார்

    பர்வானி:

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.

    அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

    • இந்தியாவின் மகாராஜாக்கள் என நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளனர்.
    • அவர்களின் விருப்பப்படி பிரதமர், அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் பாத்ஷாபுராவை அடைந்தது .தௌசா மாவட்டத்தில் உள்ள பாக்டி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:

    நீங்கள் அவர்களின் அமைப்பில் (ஆர்.எஸ்.எஸ்.) ஒரு பெண்ணை கூட பார்க்க மாட்டீர்கள். ஆர்எஸ்எஸ் பெண்களை அடக்குகிறார்கள், இதனால் பெண்களை தங்கள் அமைப்பிற்குள் நுழைய அவர்கள் அனுமதிப்பதில்லை. ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவி இருவரையும் ஏற்றுக் கொள்ளும் ஜெய் சியாராம் என்று சொல்வதற்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் என்று அவர்கள் அழைக்கிறார்கள்.

    ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை நான் கேட்க விரும்புகிறேன், நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்கிறீர்கள், ஆனால் ஏன் ஜெய் சியாராம் என்று சொல்லவில்லை? ஏன் சீதா அன்னையை நீக்கினீர்கள்? ஏன் அவமதிக்கிறீர்கள்? ஏன் இந்தியப் பெண்களை இழிவுபடுத்துகிறீர்கள்?. 


    மற்றவர்களின் பயத்தால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பயனடைகின்றன, ஏனென்றால் அவர்கள் இந்த பயத்தை வெறுப்பாக மாற்றுகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த அமைப்புகளும் அதே வேலையைச் செய்கின்றன. அவர்கள் நாட்டைப் பிரிக்கவும், வெறுப்பையும், பயத்தையும் பரப்பவும் வேலை செய்கிறார்கள். நாட்டில் பரப்பப்படும் பயம் மற்றும் வெறுப்பை எதிர்த்து நிற்பதுதான் பாரத் ஜோடோ யாத்ரா.

    நாட்டில் உள்ள 55 கோடி பேரின் சொத்துக்கு சமமாக இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களிடம் சொத்து இருக்கிறது. இந்தியாவின் பாதி செல்வம் 100 பேரிடம் மட்டுமே உள்ளது, நாடு அவர்களுக்காக இயங்குகிறது.

    இந்தியாவின் மகாராஜாக்கள் என்று நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளனர். முழு அரசாங்கமும், ஒட்டு மொத்த ஊடகங்களும் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அவர்களின் விருப்பப்படி செயல்படுகிறார்கள்.பிரதமர் மோடி ஜியும் அவர்களின் விருப்பப்படி செயல்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.
    • பக்தர்களின் சிரமத்தினை குறைக்க அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பல்லடம் :

    ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.

    பெரும்பாலும் சாலையோரமாகவும்,நெடுஞ்சாலைகளை கடந்தும் செல்வதால் பக்தர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கான தனி நடைபாதை திண்டுக்கல் முதல் பழனி வரை இருப்பதை போல் திருப்பூர் - பழனி,கோவை - பழனி ஆகிய ரோடுகளில் தனி நடைபாதை அமைக்க வேண்டும்.

    மேலும் பக்தர்கள் தங்குவதற்கான ஒய்வு இடங்கள்,நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்கப்பட வேண்டும்.பழனியில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். சிறப்பு பேருந்து என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. சாதாரண கட்டணத்தில் அதிக பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். பக்தர்களின் சிரமத்தினை குறைக்க அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வெளிச்சம் இல்லாத இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
    • பக்தர்களின் ஆடையில் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் வில்லைகளை ஓட்டினர்.

    பல்லடம் :

    புகழ்பெற்ற முருகன் திருத்தலமான பழனி மலைக்கு தைப்பூசவிழாவுக்கு பாதயாத்திரையாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். திருப்பூர்,கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்லடம் வழியாக பாத யாத்திரை செல்கின்றனர்.

    இந்த நிலையில் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பாத யாத்திரையாக பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கிடையே,போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் பக்தர்கள் பலர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் இந்த நிலையில் பல்லடத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில்,போக்குவரத்து போலீசார் பழனி மலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்தினை தவிர்க்கும் பொருட்டு பக்தர்களின் ஆடையில் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் வில்லைகளை ஓட்டினர்.

    • பஞ்சாப்பில் இன்று நடைபயணத்தின்போது ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார்.
    • நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார்.

    நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.யின் மறைவை தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • காஷ்மீரில் பாதயாத்திரையின் நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றது காங்கிரஸ்.

    சிம்லா:

    ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை லக்கன்பூர் வழியாக காஷ்மீரில் நுழைகிறது. இம்மாதம் 30-ம் தேதி அங்கு தேசிய கொடி ஏற்றுவதுடன் பாதயாத்திரை நிறைவடைகிறது. அதே சமயம், காஷ்மீரில், நடந்து செல்லும் தூரம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    காஷ்மீரில் மக்களுக்கு இடையூறு இல்லாதவகையில் சில இடங்களில் வாகனங்கள் மூலமாகவும், வேறு சில இடங்களில் நடைபயணமாகவும் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படும் என காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பக்சிங் ஏற்கனவே கூறியுள்ளார்

    இந்நிலையில், பாதயாத்திரையை ஒருங்கிணைத்து வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சிம்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது:

    ராகுல் காந்தி காஷ்மீரில் பாதயாத்திரை செல்வது உறுதி. அதே சமயத்தில், பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

    பாதுகாப்பு தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அங்கு நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

    • வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆனாலும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை அங்குள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் ரோட்டோரம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வரைவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது.

    இந்த நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் யார்? என்று தெரியவில்லை. எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. குடியரசு தினத்துக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் ஜம்மு- காஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்
    • பக்தர்கள் நடை பயணத்தின் போது வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர்.

    கந்தர்வகோட்டை:

    வடலூர் வள்ளலார் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பாண்டி மண்டல சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய பாதயாத்திரை குழுவைச் சேர்ந்த சன்மார்க்க சங்கத்தினர் மதுரையிலிருந்து வடலூர் வரை கடந்த 60 ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சிவஜோதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு, கந்தர்வகோட்டை வள்ளலார் மடத்தில் தங்கி, தொடர்ந்து வடலூருக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். சன்மார்க்க சங்க பக்தர்கள் நடை பயணத்தின் போது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், உயிர் பலி தவிர்த்தல் உள்ளிட்ட வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி நடை பயணம் மேற்கொண்டனர்.

    ×