search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பாலம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
    • இரவு நேரத்தில் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் என்ற பகுதியில் ஆற்றின் குறுக்கே கடந்த 1983-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக கோவா செல்லும் வாகனங்கள் சென்று வந்தது. இந்த நிலையில் பாலம் பழமையானதால் கடந்த 2009-ம் ஆண்டு இந்த பாலத்தை சீரமைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பணி சாத்தியப்படவில்லை. இதனால் பாலத்தின் பாதி பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த பாலத்திற்கு மாற்றாக அதே பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பழைய பாலம் வழியாக ஒரு லாரி ஆற்றை கடந்த போது திடீரென பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில் லாரியும் ஆற்றில் கவிழ்ந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் லாரி டிரைவரை பத்திரமாக மீட்டனர்.


    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள புதிய பாலத்திலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்வார்-கோவா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் இடிந்து விழுந்த பாலத்தை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் வந்து கொண்டு இருந்தனர்.

    இதனால் முன்எச்சரிக்கையாக ஆற்றுபகுதிக்கு பொதுமக்கள் வருவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுப்பற்றி தெரியவந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 20 மீட்டர் தூர தாழ்வான பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
    • மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தி.நகர் உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    ரூ.131 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய பாலம் 55 தூண்களுடன் 7.5 மீட்டர் அகலத்தில் இரு வழி பாதையுடன் பிரமாண்ட பாலமாக உருவாகி வருகிறது.

    இந்த பாலப் பணிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்து உள்ளன. அண்ணா சாலையில் இருந்தே தி.நகர் உஸ்மான் ரோடு பாலத்துடன் இணையும் வகையில் போடப்பட்டு உள்ள இந்த பாலத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தி.நகர் ரங்கநாதன் தெருவை ஒட்டியுள்ள பாலத்தின் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ரங்கநாதன் தெரு சந்திப்பில் பாலம் சாய்வாக இறங்கும் இடத்தை இடித்து விட்டு அப்பகுதியில் உயரமான பாலம் அமைக்கப்பட உள்ளது. 120 மீட்டர் தூர தாழ்வான பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதற்காக தி.நகர் உஸ்மான் ரோடு பாலம் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து உஸ்மான் ரோடு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதைகள் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. மேம்பாலம் வழியாக சென்ற வானங்கள் தற்போது பிரகாசம் சாலை, பர்கிட் சாலை வழியாக பஸ் நிலையத்தை சென்றடைகின்றன. சி.ஐ.டி. பிரதான சாலையில் இருந்து வடக்கு உஸ்மான் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் தென்மேற்கு போக் சாலை வழியாக கண்ணம்மா பேட்டை சந்திப்புக்கு சென்று வெங்கட் நாராயணா சாலை வழியாக வடக்கு உஸ்மான் ரோட்டை சென்றடையலாம்.

    தி.நகர் பகுதிக்கு செல்பவர்கள் தற்போது மூடப்பட்டுள்ள பாலம் வழியாகவே செல்வார்கள். வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பாலம் மூடப்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.

    • அமைச்சர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோ னைகளை வழங்கினார்.
    • நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சி நுழைவாயிலான ஆல் பேட்டை சாலை சந்திப்பில் பொது போக்குவரத்திற்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் விதமாகவும், விபத்து தடுப்பு நடவடிக்கையாகவும், இச்சாலை சந்திப்பை ரூ. 7 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், கடலூர், கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அண்ணா பாலத்துக்கு மாற்றாக பழைய இரும்பு பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டுவது தொடர்பாகவும் மற்றும் உழவர் சந்தை அருகே உள்ள சாலை சந்திப்பை மேம்படுத்துவது குறித்தும் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு, போக்குவரத்திற்கு இடையூறின்றி இப்பணிக ளை துரிதமாக மேற்கொ ள்வது குறித்து துறை சார்ந்த அலுவலர் களுக்கு பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் உள்ளனர்.

    • 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.
    • இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த கல்லணைக் கால்வாயில் உள்ள இர்வீன் பாலம் மற்றும் கரந்தையில் உள்ள வடவாறு பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.

    இதையடுத்து இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் கல்லணை கால்வாயில் கட்டப்பட்ட இரட்டை பாலத்தில் ஒரு பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

    இந்த நிலையில்மற்றொரு பாலத்தை கட்டும் பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்டப்பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ×