search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு பரிசு"

    • மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • பயனாளிகளுக்கு, கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.

    இந்த விழாவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் உயர்சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை வழங்கிய ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனை உள்ளிட்ட மருத்துவ மனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையும், 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கான அட்டையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 காப்பீட்டு திட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகே சன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சகாய ஸ்டீபன் ராஜ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மேலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
    • தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரி வித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வக்கீல், தி.மு.க. மாநில மாணவரணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி. இவர் தி.மு.க. செய்தி தொடர்பா ளராகவும் இருந்து வருகி றார்.

    தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை 2.0 என்ற பெயரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இதனை சிறப்பாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மாநில இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னி லையில் இரா.ராஜீவ் காந்திக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்த நிலையில் நேற்று இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நினைவுப்பரிசை வழங்கி வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தார்.

    மண்டபம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் (மேற்கு) வாலாந்தரவை பிரவீன் குமார் (மத்திய), தேர்போகி முத்துக்குமார், (கிழக்கு), புதுமடம் நிலோபர் கான் உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல் தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.

    • மல்லிகா தற்செயல் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.
    • திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் என மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.

    நாகப்பட்டினம்:

    ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளராக மல்லிகா பணியாற்றி வருகிறார். 1984 ஆம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்த இவர் திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் என மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.

    இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்த அலுவலர் மல்லிகா உதவியாளர், விரிவாக்க அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் என உயர் பதவிகளை அடைந்து தற்போது நாகை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலராக பணியாற்றினார்.

    இந்தநிலையில் அரசு அலுவலர் மல்லிகாவின் பணி ஓய்வு நிகழ்ச்சி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட மல்லிகா தனது அரசு பணியில் 39 வருடம் 6 மாதங்கள் 9 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற பணி ஓய்வு நிகழ்ச்சியில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பிரியா விடைகொடுத்தனர்.

    • உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்புபவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வது நல்ல பலன் அளிக்கும்.
    • இரத்த தானம் செய்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

    தஞ்சாவூர்:

    ரத்த தானத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 14 உலக ரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இன்று தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் செஞ்சிலுவை சங்கம் தஞ்சை கிளை சார்பில் தஞ்சையில் உலக ரத்ததான தின விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு ஆலயத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, குழந்தை இயேசு தேவாலயத்தின் பங்குத் தந்தை அம்புரோஸ், செஞ்சிலுவை சங்க ஆலோசகர் மரு.வரதராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

    மேலும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பால முருகன், ரத்த மண்டல வங்கி மருத்துவர் ஆர்த்தி, அவசர சிகிச்சை துறை தலைவர் மரு.சரவணவேல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்மக்களிடம் ரத்ததானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணியில் பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்புபவர்கள், உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது போன்ற விஷயங்களை மேற்கொள்வதோடு மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வதும் நல்ல பலன் அளிக்கும்.

    அவ்வாறு தானம் செய்யப்படும் இரத்தம், பல உயிர்களைக் காப்பாற்ற பயன்படும். குறிப்பாக இரத்த தானம் செய்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. சிறிது நேர ஓய்வுக்குப்பின் தனது அனைத்து வேலைகளையும் அவர் செய்யலாம். இந்த நடைப்பயணத்தில் நடைபயண சங்க உறுப்பினர்கள், ரோட்டரி - லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்ற நடைபயணம் மீனாட்சி மருத்துவமனையின் வளா கத்தில் முடிவடைந்தது. மேலும் இந்தாண்டின் ரத்ததானம் வழங்கிய கல்லூரி களுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடைப்பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் செய்திருந்தனர்.

    ×